Actress Preity Zinta Weight Loss Tips : திரையுலகில் கேமராவிற்கு முன் எடுக்கும் அனைவரும், தங்களது இளமையையும் உடலையும் அழகாக பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றனர். ஒரு சிலர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட, தங்களுக்கு உடலை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காக, ஜிம்மிற்கு செல்வது-டயட் இருப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற விஷயங்களை செய்வார்கள். எத்தனை வயதானாலும் தங்கள் உடலை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், இளமையாகத் தெரிய வேண்டும் என்கிற நோக்கிலும் இவர்கள் இதை செய்வர். அப்படியே நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் சில விஷயங்களை செய்கிறார். அவை குறித்து இங்கு பார்ப்போம்.
ப்ரீத்தி ஜிந்தா:
ப்ரீத்தி ஜிந்தாவை உயிரே படத்தின், நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலில் அனைவரும் பார்த்திருப்போம். இந்த படம் வந்த புதிதில் அவர் இளமையாக இருந்தார். தமிழில் எந்த படங்களிலும் நடித்ததில்லை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமாக இருக்க காரணம் இவரது நளினமான தோற்றம் மற்றும் மனதில் பதிவு முகம் ஆகியவையாகும். இப்போது இவர் பெரிதாக படங்களில் நடிப்பதில்லை. ஆனால், ஐபிஎல் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார். இவரை டிவியில் காண்பிக்கும் ஒரு சில நிமிடங்கள் கூட ரசிகர்கள் குஷியாகி விடுவர். இவருக்கு தற்போது 50 வயதாகிறது. இந்த வயதிலும் இவர் இன்னும் மாறாத இளமையுடனும், ஃபிட்டான உடலுடனும் இருக்கிறார்.
ப்ரீத்தி செய்யும் விஷயம்!
ப்ரீத்தி ஜிந்தா, இந்த வயதிலும் இளமையுடன் இருக்க காரணம் அவரது ஆக்டிவ்வான லைப் ஸ்டைல்தான். அடிக்கடி, உடற்பயிற்சி மற்றும் டயட்டில் இருப்பதை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். அவர் குறிப்பாக செய்யும் ஒரு விஷயம் Pilates உடற்பயிற்சி.
சமீபத்தில் ப்ரீத்தி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு கம்பியில் தொங்கிக்கொண்டு அவர் Pilates உடற்பயிற்சி செய்வதை பார்க்க முடிந்தது. இதனை இவர் தனது முதுகெலும்பு உறுதியுடன் இருப்பதற்காக செய்கிறார். நமது முதுகெலும்பு உறுதியுடன் இருந்தால், நாமும் அதே அளவிற்கு இளமையாக இருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது. தனது கேப்ஷனில், “உறுதியான முதுகெலும்பு, நல்ல ஆரோக்கியத்துக்கும், நல்ல குணாதிசயத்திற்கும் உதவும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதை வைத்து உடல் எடையை குறைக்கலாமா?
Pilates உடற்பயிற்சி உடல் எடையையும் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. கார்டியோ அல்லது, பிற உடற்பயிற்சிகள் அளவிற்கு இது ரிசல்ட் தருவதாக இல்லாவிட்டாலும், தெரியாம டயட்டில் இருந்து கொண்டு இதனை பின்பற்றினால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த pilates உடற்பயிற்சி கலோரிகளை குறைக்கவில்லை என்றாலும், தசை வளர்ச்சிக்கும், உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவும் உதவுவதாக சிலர் கூறுகின்றனர். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், இந்த உடற்பயிற்சி செய்தால் எடையையும் குறைத்து, உடல் கொழுப்பையும் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த உடற்பயிற்சி செய்வதாேடு, பிரீத்தி ஜிந்தா சரியான டயட்டிலும் இருக்கிறார். இதனால்தான் அவரால் சரியான உடல் எடையை மெயின்டெயின் செய்ய முடிகிறது.
மேலும் படிக்க | எடை குறைக்காமலேயே ஒல்லியாக தெரியும் நடிகை கரீனா கபூர்! ‘இதை’ செய்வாராம்…
மேலும் படிக்க | விடாப்பிடி தொப்பையை குறைக்க சூப்பர் வழி! இன்ஸ்டா பிரபலத்தின் எளிமையான டிப்ஸ்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ப்ரீத்தி ஜிந்தாவின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும். ஆனந்திதா தே-வின் கருத்துகளுக்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









