அழகை பாதுகாக்க பிரியங்கா மோகன் செய்யும் ஒரே ஒரு விஷயம்! ரொம்ப சிம்பிள்..

Priyanka Mohan Beauty Tips : கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், பிரியங்கா மோகன். டாக்டர் படம் மூலம் பிரபலமான இவர், தனது அழகை பாதுகாக்க தினமும் என்ன செய்கிறார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Feb 25, 2025, 04:30 PM IST
  • பிரியங்கா மோகனின் அழகு டிப்ஸ்
  • சமீபத்திய போட்டோவில் வெளிவந்தது..
  • ரொம்ப சிம்பிள்தான்..
அழகை பாதுகாக்க பிரியங்கா மோகன் செய்யும் ஒரே ஒரு விஷயம்! ரொம்ப சிம்பிள்..

Priyanka Mohan Beauty Tips : தமிழ் திரையுலகில் தற்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு டான், எதற்கும் துணிந்தவன், பிரதர், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து விட்டார். இப்போது தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். 

Add Zee News as a Preferred Source

அழகின் ரகசியம்..

பிரியங்கா மாேகன் மட்டுமல்ல, திரையில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் அனைத்து நடிகைகளுமே தங்களின் அழகில் அக்கறை செலுத்த கூடியவர்கள்தான். காரணம், அதுதான் அவர்களை அத்துறையில் நிலைத்து நிற்க வைக்கிறது. இதற்காக அவர்கள் பிரத்யேகமான டயட்டிலும் சில உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுவர். அப்படி, பிரியங்கா மோகனும் தினசரி ஒரு விஷயத்தை செய்கிறார்.

இந்த விஷயம்தான்..

பிரியங்கா மோகன், சமீபத்தில் சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் யோகா-ஸ்ட்ரெட்சிங் செய்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், பிரியங்கா மாேகன் தன் அழகுக்கு இதைத்தான் தினமும் செய்கிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

யோகா எப்படி உதவுகிறது?

உடலை நமக்கு ஏற்றபடி வளைக்க சரியான முறையில் யோகா செய்வது முக்கியம். இது, அழகை பாதுகாக்க எப்படி உதவும் தெரியுமா? உடலில் இருக்கும் டாக்ஸின்ஸை வெளியேற்ற யோகாசனம் உதவும். இதன் விளைவாக, உடலில் சரியான ரத்த ஓட்டம் சென்று, நம் சருமத்தை பொலிவாக்கவும் பொலிவையும் கொடுக்க உதவும்.

அது மட்டுமல்ல, யோகா செய்கையில் முக சருமத்தில் இருக்கும் போர்ஸ்கள் (சிறு துளைகள்) திரக்கும். இது, சருமம் சரியாக மூச்சு விட உதவுவதோடு, சருமத்தின் செயலிழந்த செல்களை அழித்து மீண்டும் புதிய சரும செல்கள் பிறக்க செய்யும். சருமம் ஆக்சிஜனை ஏற்றுக்கொள்ளும் போது முகத்தில் பருக்களும் அவ்வளவாக வராமல் இருக்கும்.

முகக்கொழுப்பை கரைக்கும்:

உடலில் மட்டுமல்ல, முகத்திலும் தேவையற்ற கொழுப்பு சேரும். இதை தவிர்க்க, கீழ் தாடையில் இருக்கும் தசையை நீக்க, தாடை ஷார்ப்பாக இருக்க யோகா உதவும். இதற்கென்றே முகத்திற்கான யோகாக்களும் தனியாக இருக்கின்றன. முக சருமத்தில் பிரச்சனை இருப்பவர்கள், கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள், முகப்பரு பிரச்சனை இருப்பவர்கள் இந்த யோகாசனங்களை செய்யலாம்.

மன அமைதி:

நமக்கு வரும் பல பிரச்சனைகள், முதலில் மனதில் இருந்துதான் ஆரம்பிக்கிறதாம்.  தினசரி 1 மணி நேரம் யோகா செய்வது ஒரு மணி நேரம் தியானம் செய்வதற்கு சமமாம். யோகா செய்யும் போது மனதும் உடலும் ரிலாக்ஸ் ஆகி, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். அதே போல, யோகா செய்வதால் இரவில் நன்றாக உறக்கமும் வரும். இதனால், இன்சோமேனியா பிரச்சனையில் இருப்பவர்களுக்கு தீர்வு கிடைக்கும். அவர்களின் மன ஆரோக்கியம் சீராகி, உடல் ஆரோக்கியமும் சீராகும். இதனால் மனதும் உடலும் அழகாகும்.

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை இருப்பவர்கள், பார்ப்பதற்கே வெளரி போனவர்கள் போல இருப்பார்கள். தினசரி  யோகா செய்ய ஆரம்பித்தால், வயிறு சுத்தமாவதோடு செரிமான பிரச்சனைகளும் நீங்குமாம். இது, உங்களின் சருமம் பொலிவாவதோடு உடல் ஆரோக்கியத்திலும் எந்த குறையும் இருக்காது. இந்த பொலிவு, உள்ளிருந்து வருவதால், பிறர் உங்களை பார்க்கும் போதே நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை புரிந்து கொள்வர்.

மேலும் படிக்க | 48 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை ரம்பா..அழகின் பின்னணி இதுதானா?

மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News