Sameera Reddy Weight Loss Tips : தமிழ் திரை உலகில் கவனம் ஈர்த்த நடிகையாக வலம் வந்தவர், சமீரா ரெட்டி. தனது 20களில் இளமையாகவும் ஒல்லியாகவும் இருந்தவர், இன்று திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தை பெற்று எடை கூடினார். அதை பெருமையாகவும் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். எனவே அவர் சமீபத்தில் உடல் எடை குறைந்திருக்கிறார்.
உடல் அமைப்பு குறித்து பேசி வந்த சமீரா ரெட்டி!
அனைவருமே, ஒல்லியாக-இளமையுடன் தெரிய வேண்டும் என விரும்புவது இயல்பு. அதிலும் திரை துறையில் இருப்பவர்கள், தங்களின் உடல் அமைப்பு குறித்து எப்போதும் விழிப்புடன் இருப்பர். சமீப ரெட்டி, திரையுலகுக்கு வந்த புதிதில் தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னவாக வந்த இவரை பலர் இன்று வரை கிரஷ்ஷாக வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இவருக்கு 2014ல் திருமணம் நடந்தது, அதன் பிறகு அடுத்தடுத்து 2 குழந்தைகளும் பிறந்தன. இதற்கு பிறகு, அவர் உடல் எடை கூடி காணப்பட்டார். இருப்பினும், இதை பாசிடிவான கண்ணாேட்டத்திலேயே தான் பார்ப்பதாக கூறினார். இந்த நிலையில், அவர் அவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
ஃபிட்னஸ் கோச் பகிர்ந்த ரகசியம்:
சமீரா ரெட்டியின் உடல் எடை குறைப்பு குறித்து அவரது ஃபிட்னஸ் கோச் அஷ்வின் மைக்கேல் பாரெட்டோ தெரிவித்திருக்கிறார். அவர், சமீராவின் உடலுக்கு எது போன்ற உடற்பயிற்சி சரியானதாக இருக்கும் என்பதை பார்த்து அதன்படி அவரை வழிநடத்தியதாக கூறியிருக்கிறார்.
சமீரா, ஆரம்பத்தில் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுப்பட்டிருக்கிறார். இருப்பினும், அவரது உடலுக்கு அது ஏற்புடையதாக இல்லை. அதன் பிறகு, விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையை விடாமல் உடற்பயிற்சியை பின்பற்றியதாக அவரது ஃபிட்னஸ் கோச் கூறியிருக்கிறார்.
சமீரா, ஆரம்பத்தில் யோகா, ரன்னிங் பயிற்சி, பிலாட்டீஸ் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்திருக்கிறார். ஆனால், இவை எதிர்பார்த்த பலனை தராமல் போயிருக்கிறது. கடுமையாக முயற்சிக்கு பின்னரே அவரது உடலில் இருந்த கொழுப்புகள் கரைய தொடங்கியிருக்கிறது. அதன் பிறகுதான் அவருக்கு இந்த ஃபிட்னஸ் டிரைனிங் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீராவின் உடல் நிலையை வைத்து, அவரது வயது, ஹார்மோன் மாற்றங்கள், வாழ்க்கை முறை மற்றும் முன்னர் செய்த பயிற்சிகள், உணவு முறை என அனைத்தையும் வைத்து அவருக்கு டயட் ப்ளான் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஆரம்பித்த 4 வாரங்களிலேயே அவரது உடலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது.
படிப்படியான உடற்பயிற்சி:
முதலில் சமீராவிற்கு ப்ரோபிரியோசெப்ஷன் எனப்படும் உடல் விழிப்புணர்வு பற்றிய உடற்பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளத்ஹு. பின்னர், மூட்டுக்கான பயிற்சிகள், உடல் இயக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றனர். உணவு பழக்கங்களில் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். அதன் பிறகாக, 5-8 வாரங்களில் வலிமைக்கான (தசை வளர்ச்சி) உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பிறகு தன் டயட்டில் புரதச்சத்து உணவுகளை பின்பற்ற தொடங்கியிருக்கிறது.
பயிற்சி திட்டம்:
- முழு உடல் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார்: டெட்லிஃப்ட், ஸ்குவாட்ஸ், TRX Rows உள்ளிட்டவற்றை செய்திருக்கிறார். இதனை வாரத்தில் 3 முறை செய்திருக்கிறார்.
- வாரத்தில் ஒரு முறை முழு உடல் பயிற்சியை செய்திருக்கிறார். இதற்காக HIIT எனப்படும் ஹை இண்டென்சிட்டி இண்டர்வல் ட்ரெயினிங்கை பின்பற்றி இருக்கிறார்.
- தனது உடல் தோரணையை மேம்படுத்துவதற்காக ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
- ஸ்பீட் ரன்னிங், ஜம்பிங் உள்ளிட்ட கார்டியோ உடற்பயிற்சிகளையும் அவர் பின்பற்றி இருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: மேற்கூறிய தகவல்கள் யாவும் சமீரா ரெட்டியின் தனிப்பட்ட அனுபவங்கள் ஆகும். இதனை பின்பற்றும் முன்பு தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நன்று. இதற்கு ஜீ மீடியா (ZEE MEDIA) எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | 20 கிலோ எடையை அசால்டாக குறைத்த குஷ்பு! சீக்ரெட் இது ஒன்னுதான்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ