)
சமீபத்திய அகமதாபாத் விமான விபத்து, பயணக் காப்பீடு அவசியமானது என்பதை உணர்த்தியுள்ளது. காப்பீட்டை கட்டாயமாக்க வேண்டிய தேவை உள்ளது என பலர் நினைக்கின்றனர். பயணிகள் காப்பீட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நிபுணர்களும் நம்புகின்றனர். அரசாங்க விதிமுறைகளுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, தனிநபர்கள் தாங்களாகவே சரியான காப்பீட்டைப் பெறுவதற்கு முன்முயற்சி எடுக்க வேண்டும்.
விமான விபத்து காப்பீடு
விமான விபத்து காப்பீடு என்பது விமானப் பயணத்தின் போது விபத்து ஏற்பட்டால் பயணி அல்லது அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் ஒரு வகை காப்பீடு ஆகும். இது மரணம், கடுமையான காயம் அல்லது உடல் ஊனமடைதல் போன்ற சூழ்நிலைகளை உள்ளடக்கியது. விமான விபத்து காப்பீடு மிகவும் அதிக கட்டணம் கொண்டது அல்ல. இது ஒரு நாளைக்கான காப்பீடு ரூ.10 முதல் ரூ.500 வரை இருக்கும். இது பயணத்தின் தூரம், சேருமிடம் மற்றும் காப்பீட்டுத் தொகையைப் பொறுத்தது.
முன்கூட்டியே காப்பீடு வாங்குவது முக்கியம்
பயணம் செய்வதற்கு முன் பயணக் காப்பீடு பாலிஸியை வாங்க வேண்டும். பயணத் திட்டங்களை ரத்து செய்வதிலிருந்து விசா கட்டணத் திரும்பப் பெறும் சலுகைகள் வரை பயணிகள் சலுகைகளைச் சேர்க்கலாம். இவை பொதுவாக கடைசி நேரத்தில் காப்பீட்டை வாங்கும்போது கிடைக்காது. பயணக் காப்பீடு ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, பிராந்தியம் முழுமைக்கும் பொருந்தும்.. தென்கிழக்கு போன்ற ஒரு பிராந்தியத்திற்கு நீங்கள் ஒரு பாலிசியை வாங்கினால், தாய்லாந்து, பாலி மற்றும் அருகிலுள்ள பிற நாடுகள் உட்பட அந்த பிராந்தியத்தில் உள்ள பல இடங்களை அது உள்ளடக்கும்.
காப்பீடு ஒரு நிதி பாதுகாப்பு கேடயம்
சமீபத்திய ஏர் இந்தியா விபத்து போன்ற விபத்துகள் எதிர்பாராதவை. இதுபோன்ற சூழ்நிலையில், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு காப்பீடு ஒரு நிதி பாதுகாப்பு கேடயமாக செயல்படுகிறது. நெருக்கடி காலங்களில் இந்த காப்பீடு ஒரு நிதி ஆதரவாக இருக்கும். நீங்கள் விமானத்தில் பயணம் செய்தால், நிச்சயமாக விமான விபத்து காப்பீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சிறிய தொகையை செலவழிப்பதால் சிறந்த பாதுகாப்பு கி குறிப்பாக எதிர்பாராதது எந்த நேரத்திலும் நிகழலாம்.
இன்றுவரை இல்லாத அளவிற்கு கிளெய்ம் தொகை
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து (Ahmedabad Plane Crash) இன்றுவரை இந்தியாவில் மிகவும் அதிக க்ளெய்ம் தொகையை பெறும் விமான விபத்தாக இருக்கலாம். இந்த விமான விபத்தில் க்ளெய்ம் தொகை சுமார் 1500 கோடி ரூபாய் காப்பீட்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுக் பாலிஸியின் முக்கிய நிறுவனமாக டாடா ஏஐஜி இருந்தது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் போன்ற பிற நிறுவனங்களும் இதில் உள்ளன. இந்த விமானம் லண்டன் சந்தையில் காப்பீடு செய்யப்பட்டது. இது உலகளாவிய மறுகாப்பீட்டுத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ