இந்திய ரயில்வே, அவசரகால பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தட்கல் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியது. திடீர் பயணம் மேற்கொள்ளும் பலருக்கு, பயணம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக, புக் செய்ய உதவும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆனால் சில காலங்களாகவே தட்கல் முன் பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே, தட்கல் டிக்கெட்டுகள் முழுமையாக புக் செய்யப்பட்டு, சாமானியர்களால் டிக்கெட்டுகளை புக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. ஏஜென்ட்களின் ஆதிக்கம், இணையதள பாட்கள் பயன்படுத்தப்படுவது என்று பல சிக்கல்கள் இதற்கு காரணமாக கூறப்பட்டது.
தட்கல் முன்பதிவில் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய ரயில்வே நடவடிக்கை
தட்கல் டிக்கெட் வாங்குவது சாமானியர்களுக்கு பெரும் சவாலாக ஆகிய நிலையில், அதனை தடுக்க ரயில்வே முக்கிய நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளது. அவசர கால அல்லது திடீர் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான தட்கள் டிக்கெட்டுகளை ஏஜென்ட்கள் அதிக அளவில் வாங்கி, தேவைப்படும் பயணிகளுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விதிகளை மாற்றி அமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில்வே டிக்கெட் புக்கிங்கில் வெளிப்படை தன்மை ஏற்படுத்தும் முயற்சி
மோசடி முறையில் ஏஜெண்டுகள், டிக்கெட்டுகளை புக் செய்வதை தடுக்க, இ-ஆதார் சரிபார்ப்பு வடிக்கையை கட்டாயமாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம், சாமானியர்கள் தட்கல் முறை புக்கிங்கில் கன்ஃபார்ம் டிக்கெட்டுகளைப் பெற இயலும். இந்த புதிய விதி டிக்கெட் புக்கிங்கில் வெளிப்படை தன்மை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. முன்னதாக, சாமானியர்கள் தட்கல் டிக்கெட்டை எளிதில் புக் செய்ய உதவும் வகையில், முதல் 10 நிமிடங்களுக்கு, IRCTC அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்கள் கூட, டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கணிணி மென்பொருள்கள் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு
ரயில்வே சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கையில், தட்கல் முன்பதிவுகளை பகுப்பாய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான 2.5 கோடி பயனர் ஐடிகளை IRCTC முடக்கியுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. ஏஜென்ட்கள் சட்டவிரோதமாக, கணிணி மென்பொருள்கள் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறைகளை நொடியில் பூர்த்தி செய்து, டிக்கெட்களை எளிதில் வாங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது. கணினி மென்பொருட்கள் மூலம், IRCTC இணையதளத்தில் நொடியில் லாகின் செய்து, படிவங்களை நொடியில் நிரப்பி, பணம் செலுத்தி டிக்கெட்டுகளை நொடிகளில் புக் செய்யலாம். இதனால் சாமானியர்கள், டிக்கெட் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
மோசடி நடவடிக்கைகளை தடுக்க IRCTC எடுத்து வரும் நடவடிக்கைகள்
IRCTC மோசடி நடவடிக்கைகளை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட ரயில்வே அதிகாரி ஒருவர், சைபர் குற்றம் தொடர்பாக சுமார் 134 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், 6800 மின்னஞ்சல் டொமைன்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மேலும் கள்ளச் சந்தை மூலம் பயணிகளுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்கப்படுவதாக புகார்கள் பல எழுந்துள்ள நிலையில், முன்பதிவு மாஃபியாக்களால் சாமானியர்கள் டிக்கெட் எடுக்க முடியாத நிலையை தவிர்க்க ரயில்வே உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் புக் செய்ய பயன்படுத்தப்பட்ட... 2.5 கோடி போலி ஐடிக்களை முடக்கிய IRCTC
மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









