Akshaya Tritiya 2025: அட்சய திருதியை லட்சுமி தேவியின் சிறந்த நாளாகும். இந்த நாளில் நேரம் காலம் பார்க்காமல் அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம். அனைத்து மங்களகரமான பொருட்களையும் வாங்கலாம். ஆனால், இந்த நாளில் வாங்கக்கூடாத சில பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை எந்தெந்த பொருட்கள் என்பதை பார்ப்போம்.
அட்சய திருதியை அன்று சில பொருட்களை வாங்குவது மிகவும் மங்களகர நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களை வாங்கலாம். அதேபோல் இந்நாளில் புதிய கார், புதிய வீடு, துணிகள் போன்றவையும் வாங்கலாம். ஆனால், அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன.
அத்தகைய பொருளை வாங்கினால் லட்சுமி தேவியின் அருளை பெற முடியாமல் போகலாம். நிதிப் பிரச்சினைகள் ஏற்படலாம். இந்நிலையில் இந்த ஆண்டு அட்சய திருதியை புதன்கிழமை, ஏப்ரல் 30, 2025 அன்று நிகழ்கிறது. இந்த நாளில் எந்தெந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அலுமினியம் மற்றும் எஃகு பாத்திரங்கள்
அட்சய திருதியை நாளில் கருப்பு நிறப் பொருட்களை வாங்கக்கூடாது. இது தவிர, பிளாஸ்டிக், எஃகு அல்லது அலுமினியத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இந்தப் பொருட்கள் ராகுவை குறிக்கிறது. அவை வீட்டிற்குள் எதிர்மறையான பலனைத் தரும், மேலும் செல்வ இழப்பை ஏற்படுத்தும்.
கூர்மையான பொருட்களை வாங்க வேண்டும்
அட்சய திருதியை நாளில் கத்தி, அருவாள், கத்தரிக்கோல், கோடாரி போன்ற கூர்மையான பொருட்களை வாங்கக்கூடாது. இதுபோன்ற பொருட்களை வாங்குவது குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
முள் செடிகள்
அட்சய திருதியை நாளில், கற்றாழை, குரோட்டன் போன்ற முள் செடிகளை வாங்கவோ வீட்டிற்கு கொண்டு வரவோ கூடாது. இதுபோன்ற செடிகளை வீட்டிற்குள் கொண்டு வருவது குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
வீட்டைச் சுற்றி அசுத்தமாக வைத்துக் கொள்வது
அட்சய திருதியை நாளில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருகை தருவார் என்பது நம்பப்படுகிறது. உங்கள் வீட்டை அழுக்காக வைத்திருந்தால், குறிப்பாக பிரதான நுழைவாயில், வழிபாட்டுத் தலம் போன்ற இடங்களில், சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால், வீட்டில் எப்போதுமே லட்சுமி கடக்ஷம் நிலைத்திருக்கும்.
இந்த அட்சய திருதியை தினத்தில் எந்த பொருட்களை வாங்கலாம் என்று பார்ப்போம்:
தங்கம் - வெள்ளி:
அட்சய திருதியை (Akshaya Tritiya) அன்று தங்கம்- வெள்ளி வாங்குவது நன்மை. ஆனால் ஜோதிடத்தின் படி அட்சய திருதியை அன்று சில பொருட்களை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது உங்கள் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும்.
பித்தளை பாத்திரங்கள்:
இந்த அட்சய திருதியை நாளில் உங்களால் தங்கம் வாங்க முடியவில்லை என்றால் பித்தளை பாத்திரங்களை வாங்குவதும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்தளை பாத்திரங்களை வாங்கினால் செல்வம் பெருகும்.
கடுகு:
அட்சய திருதியை நாளில் கடுகு வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் கடுகு வாங்குவது தங்கம் மற்றும் வெள்ளிக்கு சமமாக மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதேபோல் கடுகு வாங்கினால் வர லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.
உப்பு:
அட்சய திருதியை நாளில் உப்பு வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. உப்பில் வாங்கினால் வாழ்க்கையில் இன்பங்கள் பெருகும் மன அமைதி உண்டாகும். எனவே இந்த நாளில் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.
பானைகளை வாங்கலாம்:
அட்சய திருதியை நாளில், தங்கம் மற்றும் வெள்ளியை வாங்க முடியவில்லை என்றால், இந்த நாளில் மண் பானை, குடங்கள், விளக்குகள் போன்றவற்றை வீட்டிற்கு கொண்டு வரலாம். இதைச் செய்வதன் மூலம் உங்கள் செல்வம் பெருகும், குடும்ப உறுப்பினர்களும் முன்னேறுவார்கள்.
புத்தகங்கள்:
அட்சய திருதியை அன்று புத்தகங்கள், அதுவும் குறிப்பாக மத நூல்கள் அல்லது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான புத்தகங்களை வாங்குவது இந்த காலகட்டத்தில் பொதுவானது.
மாடு:
அட்சய திருதியை நாளில் மாடுகளை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் பசு மாடுகளை வாங்கி லட்சுமி தேவியின் பாதத்தில் காணிக்கையாக செலுத்தினால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









