அட்சய திருதியை 2025: இந்த 5 பொருட்களை கட்டாயம் வாங்கவும், வீட்டில் லாபம் பெருகும்

Akshaya Tritiya 2025 Shopping: அட்சய திருதியை முகூர்த்த நேரம்: தங்கம் மற்றும் வெள்ளியைத் தவிர, இவற்றை வாங்குவது அட்சய திருதியை நாளில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 8, 2025, 06:20 PM IST
  • ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 05:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை ஆகும்.
  • பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களை வாங்கலாம்.
அட்சய திருதியை 2025: இந்த 5 பொருட்களை கட்டாயம் வாங்கவும், வீட்டில் லாபம் பெருகும்

Akshaya Tritiya 2025 Shopping: ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீடு தானம் செய்வது மற்றும் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும். மேலும், அட்சய திருதியை திதியில், சுப காரியங்களை துவங்க ஏற்ற காலமாகவும் கருதப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற ஏப்ரல் 29 அன்று மாலை 05:31 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 30 அன்று பிற்பகல் 02:12 மணிக்கு நிறைவு பெறும். வழிபாடு செய்ய உகந்த நேரம் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 05:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை ஆகும்.

இந்நாளில் லட்சுமி தேவியையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் மனமகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியவில்லை என்றால் இந்த பொருட்களை வாங்கலாம். 

அட்சய திருதியை அன்று இந்த பொருட்களை வாங்குங்கள்:

தங்கம் - வெள்ளி:
அட்சய திருதியை (Akshaya Tritiya) அன்று தங்கம்- வெள்ளி வாங்குவது நன்மை. ஆனால் ஜோதிடத்தின் படி அட்சய திருதியை அன்று சில பொருட்களை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது உங்கள் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும்.

மண் குடம்:
அட்சய திருதியை நாளில் மண் பானை வாங்குவது மங்களகம் உண்டாகும். இந்த பொருட்களை வாங்குவதன் மூலம் பணப் பற்றாக்குறை நீங்கும். எனவே, உங்கள் தேவைக்கேற்ப சிறிய அல்லது பெரிய மண் பானையை வாங்கலாம்.

பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களை வாங்கலாம்:
அட்சய திருதியை நாளில் வெள்ளிப் பாத்திரங்களை வாங்க முடியாவிட்டால், பித்தளை அல்லது செம்புப் பாத்திரங்களை வாங்கலாம். நீங்கள் விரும்பினால், பித்தளையால் செய்யப்பட்ட லட்சுமி சிலையை வாங்கலாம். 

மஞ்சள் கடுகு வாங்கலாம்:
அட்சய திருதியை நாளில் மஞ்சள் கடுகு வாங்கலாம். இவற்றை வாங்கி வந்தால் லட்சுமி தேவி மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று ஐதீகம். எனவே, இந்த நாளில் மஞ்சள் கடுகு கட்டாயம் வாங்கவும்.

உப்பு கட்டாயம் வாங்குங்கள்:
அட்சய திருதியை நாளில் உப்பு வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. உப்பில் வாங்கினால் வாழ்க்கையில் இன்பங்கள் பெருகும் மன அமைதி உண்டாகும். எனவே இந்த நாளில் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.

புத்தகங்களை வாங்குங்கள்: 
அட்சய திருதியை அன்று புத்தகங்கள், அதுவும் குறிப்பாக மத நூல்கள் அல்லது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான புத்தகங்களை வாங்குவது இந்த காலகட்டத்தில் பொதுவானது.

மேலும் படிக்க | சந்திர - சூரிய கிரகணம்.. எப்போது வருகிறது, இந்தியாவில் தெரியுமா?

மேலும் படிக்க | திருமண வாழ்க்கை கசக்காமல் இருக்க ஜப்பானியர்கள் செய்வது..! இந்த சீக்ரெட்டை கத்துக்கோங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News