Alert! டிசம்பர் 31க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும், இல்லையெனில்..
2021ம் ஆண்டின் கடைசி மாதம் நடந்துக்கொண்டு இருக்கிறது. இந்த மாதத்தில் பல முக்கிய வேலைகளை முடிக்க வேண்டியது அவசியம்.
புதுடெல்லி: 2021-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் 2021 முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. அதன்படி டிசம்பர் 31-க்குள் மறக்காமல் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த பணிகளை உரிய தேதிக்கு முன் முடிக்கவில்லை என்றால், பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
இந்த வரிசையில், நீங்கள் இதுவரை வருமான வரிக் கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்யவில்லை என்றால், கண்டிப்பாக டிசம்பர் 31-ம் தேதிக்குள் செய்யுங்கள். அதே நேரத்தில், இபிஎஃப்ஓவும் PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த மாத இறுதி வரை மட்டுமே நாமினியைச் சேர்க்க கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ALSO READ | December 31-க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்: இல்லையென்றால், வீண் பண விரயம்
வருமான வரி கணக்கு தாக்கல்
2020-21 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். வரி நிபுணர்களின் கூற்றுப்படி, காலக்கெடுவிற்கு முன் ITR தாக்கல் செய்வது அபராதங்களில் இருந்து உங்களை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் கொண்டு வரும். நிலுவைத் தேதிக்கு முன் ITR தாக்கல் செய்யாவிட்டால், அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். சரியான நேரத்தில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தால், நோட்டீஸ் பெரும் அச்சம் உங்களுக்கு இருக்காது.
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நாமினி அவசியம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து PF கணக்கு வைத்திருப்பவர்களையும் நாமினியைச் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. EPFO நாமினிகளைச் சேர்ப்பதற்கான கடைசித் தேதியாக டிசம்பர் 31, 2021 நிர்ணயித்துள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் உங்கள் பிஎஃப் கணக்கில் நாமினியைச் சேர்க்கவில்லை என்றால், நீங்கள் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். EPFO இன் தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த வேலையை ஆன்லைனில் எளிதாகச் செய்யலாம்.
தணிக்கை அறிக்கை தாக்கல்
இந்த மாத இறுதிக்குள் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உண்மையில், ஆண்டு வருமானம் ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும் தொழிலதிபர்கள், வருமான வரிக் கணக்குடன் தணிக்கை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும். ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் மட்டுமே தணிக்கை அறிக்கை அளிக்க வேண்டும். 2020-21 நிதியாண்டிற்கான தணிக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும்.
குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும்
பாங்க் ஆஃப் பரோடா பண்டிகைக் காலத்தில் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.50% ஆகக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தற்போது நீங்கள் குறைந்த விலையில் வீட்டுக் கடனைப் பெறலாம். மேலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், புதிய கடனைத் தவிர, புதிய வட்டி விகிதத்தின் பலன் மற்ற வங்கியிலிருந்து மாற்றப்பட்ட வீட்டுக் கடனுக்கும் கிடைக்கும். ஆனால் இந்த சலுகையின் பலன் டிசம்பர் 31 வரை மட்டுமே கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், டிசம்பர் 31க்குள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
ALSO READ | ITR Filing: இவர்கள் ITR தாக்கல் செய்ய வேண்டாம், நிபந்தனைகளும் விதிமுறைகளும் இவைதான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR