பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்!

உடல் எடையை குறைத்த பின்னர், உங்கள் உடலின் அழகைக் குறைக்கும் நீடித்த வடுக்களை நீங்கள் அடிக்கடி காணலாம். கர்ப்ப காலத்திற்கு பின்னர் இந்த நீட்சி வடுக்கள் இயல்பானவை, ஆனால் இந்த வடுக்கள் பெண்களின் மனதிலும் ஆராத தழும்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

Updated: Sep 6, 2019, 11:45 AM IST
பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்!
Representational Image

உடல் எடையை குறைத்த பின்னர், உங்கள் உடலின் அழகைக் குறைக்கும் நீடித்த வடுக்களை நீங்கள் அடிக்கடி காணலாம். கர்ப்ப காலத்திற்கு பின்னர் இந்த நீட்சி வடுக்கள் இயல்பானவை, ஆனால் இந்த வடுக்கள் பெண்களின் மனதிலும் ஆராத தழும்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

இந்த தழும்புகளை மறைக்கவே முடியாதா?... ஏன் முடியாது. இதற்கு பெண்கள் பின்பற்ற வேண்டிய பல குறிப்புகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகின்றன.

நீங்கள் எடை இழப்பு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் வேறு சில விஷயங்களுக்கும் கவனம் செலுத்த வேண்டும், இதனால் எடை இழப்புக்குப் பிறகு உடல் சுருக்க தழும்புகளை எளிதில் தவிற்கலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த தழும்புகள் பொதுவானவை. வயிறு, இடுப்பு, மார்பகம், தொடை அல்லது பட் ஆகியவற்றில் பெரும்பாலான பகுதிகளில் இந்த தழும்புகள் ஏற்படுகின்றன. இந்த தழும்புகளை தவிர்க்க சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

---ஆரோக்கியமான சாப்பாடு--- 
ஆரோக்கியமாக உணவு எடுத்துக்கொள்ளுதல் இந்த பிரச்சனையை தவிர்க்க உதவும். துத்தநாகம் மற்றும் வைட்டமின் C நிறைந்த உணவை அதிகளவு எடுத்துக்கொள்ளுதல் அவசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்தி செய்ய உதவுகின்றன. கொலாஜன் என்பது ஒரு வகை புரதம், இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது.

---அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்---
அதிகளவு தண்ணீர் குடித்தல் இத்தகு பிரச்சனையில் இருந்து நம்மை காக்க உதவும். தண்ணீர் உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, உங்கள் முழு ஆரோக்கியத்திற்கும் சிறந்த பரிசு. அதிகளவு தண்ணீர் குடிப்பதால் சருமம் நீரேற்றம் பெறும், ஆரோக்கியத்தை அளிக்கும்.

---நீட்சி(Stretching)---
உணவுப்பழக்கத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால், உணவு பழக்கத்துடன் நீங்கள் சில உடற்பயிற்சிகளையும் செய்தல் அவசியம். தினசரி 15-20 நிமிடங்கள் நீட்சி (Stretching) உடற்பயிற்சி செய்வது இரத்த ஓட்டம் மற்றும் தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவும்.