அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? அப்போ இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்

How To Apply Aloe Vera: கற்றாழை சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் நன்மை தரும். அந்த வகையில் கற்றாழையை சரியான முறையில் பயன்படுத்தினால் கூந்தல் ஆரோக்கியமாக வளரத் தொடங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 8, 2025, 09:48 PM IST
  • கூந்தல் ஆரோக்கியமாக வளரத் தொடங்கும்.
  • கற்றாழை சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் நன்மை தரும்.
அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? அப்போ இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்

How To Apply Aloe Vera: கற்றாழை வீட்டு வைத்தியங்களுக்கு ஏற்ற மருத்துவம் ஆகுலம். மருத்துவ தாவரம் நிறைந்திருக்கும் இந்த கற்றாழை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தப் படுகிறது, அதேபோல் கற்றாழை கூந்தலுக்கும் பல நன்மைகளை தரும். கற்றாழையில் அத்தியாவசிய வைட்டமின்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இவை கூந்தல் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது. இதனை பயன்படுத்துவதால், உச்சந்தயில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும். இந்நிலையில் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெற எந்தெந்த வழிகளில் கற்றாழையை பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Add Zee News as a Preferred Source

அடர்த்தியான கூந்தலுக்கு கற்றாழை | Aloe Vera For Thick Hair:
கூந்தலில் கற்றாழையை நேரடியாகவே பயன்படுத்தலாம். இதற்கு இந்த ஜெல்லை எடுத்து முடியின் வேர்கள் நான்கு தடவவும். நன்றாக மசாஜ் செய்யவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவவும். இது முடி உதிர்வை தடுக்க உதவும், மேலும் கூந்தலுக்கு போதுமான அளவு ஈரப்பதத்தை அளிக்க உதவும். அதுமட்டுமின்றி முடி அடர்த்தியாகி, வளர ஆரம்பிக்கும்.

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்: கற்றாழையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கூந்தலில் தடவலாம். இதற்கு தேங்காய் எண்ணெயில் கற்றாழை ஜெல்லை மிக்ஸ் செய்து ஹேர் மாஸ்க் போல் தடவவும். அதேபோல் இந்த கலவையை சிறிது சூடாக்கி தலைமுடியில் தடவலாம். தலைமுடியில் 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுக்கவும்.

கற்றாழை மற்றும் முட்டை: கற்றாழை ஜெல்லுடன் முட்டையை கலந்து கூந்தலில் தடவினால் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். இது கூந்தலுக்கு நல்ல ஆழமான கண்டிஷனிங்கை வழங்குகிறது. இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழையை எடுத்து, அதில் முட்டையை சேர்த்து, ஒன்றரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலக்கவும். இந்த கலவையை கூந்தலில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து கூந்தலை நன்றாக கழுவவும். இதனால் கூந்தல் மென்மையாகும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை கூந்தலில் தடவலாம்.

கற்றாழை மற்றும் தேங்காய் பால்: கற்றாழை மற்றும் தேங்காய் பால், கூந்தலில் தடவினால் முடிக்கு ஊட்டமளித்து வளர்ச்சிக்கு உதவுகிறது. இதற்கு நான்கு ஸ்பூன் தேங்காய் பாலில் நான்கு ஸ்பூன் கற்றாழை ஜெல் (Aloe Vera Gel) சேர்க்கவும். இந்த ஹேர் மாஸ்க்கை கூந்தலில் தடவி அரை மணி நேரம் கழித்து, கழுவி சுத்தம் செய்யவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நடிகைகள் எப்போதும் இளமையாக இருக்கக் காரணம் இதுதானா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மேலும் படிக்க | ஒல்லியாக இருக்க சாய் பல்லவி பருகும் ஒரே ஒரு பானம்! இயற்கையானது-நீங்களும் குடிக்கலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News