)
Bakrid 2025 Reason Why Goats Are Sacrificed : உலக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக இருக்கிறது, பக்ரீத் (Eid ul Adha). இந்த நாள் இஸ்லாமியர்களால் தியாக திருநாளாக பார்க்கப்படுகிறது. பிறை நிலாவை பார்ப்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த திருநாளின் தேதி மாறுகிறது. இந்த ஆண்டு, இப்பண்டிகை ஜூன் 7ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை-காரணம்:
அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு, தன் மகனை பலியிட, நபி தயாராக இருந்ததை நினைவுப்படுத்தும் நாளாக, இந்த நாள் இருக்கிறது. இது, அவருக்கு அல்லாஹ் மீதிருந்த அசைக்க முடியாத பக்தியை காட்டும் வகையில் கொண்டாடப்படுகிறது. இவர், சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டதாகவும் இருப்பினும், அல்லாஹ்வின் நம்பிக்கையால் அவர் தனக்கு மிக முக்கியமான ஒரு நபரை தியாகம் செய்ய இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவரது இந்த நம்பிக்கையை பார்த்து வியந்த அல்லாஹ், அவரது மகனுக்கு பதிலாக ஆட்டை பலியிட கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஆட்டை வெட்டுவது ஏன்?
அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிதலின் செயலாக, நபி இப்ரஹிம் தனது மகன் இஸ்மாயிலை பலியிட தயாராக இருந்தார் என்பதையும், அதற்கு பதிலாக ஆட்டை பலியிட்ட கதையையும் மேலே குறிப்பிட்டிருந்தோம். இதன் காரணமாக ஆடு, பக்ரீத் திருநாளில் வெட்டப்படுவதாக கூறப்படுகிறது.
நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் சின்னம்:
ஆடு போன்ற ஒரு விலங்கை பக்ரீத் பண்டிகையில் பலியிடுவது என்பது, இப்ரஹிமின் கீழ்ப்படிதலின் அடையாள நிகழ்வு மட்டும் பார்க்கப்படவில்லை. கடவுளின் விருப்பத்திற்கு அடிபணிதல், வாழ்வில் கிடைத்து விழங்களுக்கு நன்றியுணர்வுடன் இருத்தல், நம்பிக்கைக்காக மதிப்புமிக்க ஒன்றை விட்டுக்கொடுக்க துணிவது உள்ளிட்டவற்றின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
தொண்டு மற்றும் பகிர்வு:
பொதுவாக பக்ரீத்தின் போது ஆட்டை வெட்டுபவர்கள், அதனை பகிர்ந்து உண்ணுவர். இதில், ஒரு பங்கு குடும்பத்தினருக்கும், ஒரு பங்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும், ஒரு பங்கு ஏழைகளுக்கும் வழங்கப்படுகிறது.
இது இஸ்லாத்தின் முக்கிய மதிப்புகளாக பார்க்கப்படும் இரக்க குணம், பகிர்தல் மற்றும் சமூகத்துடன் ஒத்து வாழ்தல் ஆகியவற்றை மேற்கோள் காட்டும் வகையில் உள்ளது.
ஆடுகள் மட்டும் அதிகம் வெட்டப்படுவது ஏன்?
பிற நாடுகளில் பக்ரீத்தின் போது ஒட்டகங்கள், மாடுகள் ஆகியவற்றை கூட வெட்டுகின்றனர். ஆனால், இந்தியாவை பொருத்தவரை பலர் ஆடுகளைத்தான் அதிகமாக வெட்டுகின்றனர். காரணம், இவை அதிகம் கிடைக்க கூடியதாகவும் எளிதில் வாங்கக்கூடியதாகவும் இருக்கின்றன. மேலும் இவை இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் தியாகம் ஆகவும் இருக்கிறது.
மாடுகள், ஒட்டகங்கள் போன்ற பெரிய விலங்குகளும் பலியிட படலாம். அவற்றை பெறும்பாலும் செல்வந்தர்கள்தான் பலியிடுவர். இவையும் குடும்பம், நண்பர்கள் உறவினர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
பக்ரீத் பண்டிகையை, இஸ்லாமியர்கள் அதிகாலை அல்லாஹ்வுக்கு தொழுகை செய்த பின்பு நாளை தொடங்கி கொண்டாட ஆரம்பிக்கின்றனர். ஒரு சிலர், இந்த நாளில் இஸ்லாமியர்களின் புனித தேசமாக பார்க்கப்படும் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்டு கொண்டாடுகின்றனர். பிறர், அல்லாஹ்வின் ஆசிர்வாதம் கிடைக்கும் இடங்களாக எதை நினைக்கின்றனரோ அங்கு சென்று கொண்டாடுகின்றனர். இந்த நாளில் சமூக கூட்டங்கள் நடப்பதோடு, உறவினர்கள் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வும், பரிசுகள் பரிமாற்றங்களும் நிகழும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ