)
ஆகஸ்ட் 2025 வங்கி விடுமுறை விபரம்: ஆகஸ்ட் மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. ஆகஸ்ட் மாதம் பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களின் மாதமாகும். ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், ரக்ஷா பந்தன், ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட எத்தனை விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனெனில் 31 நாட்கள் கொண்ட மாதத்தில் சுமார் 15 விடுமுறைகள் இருக்கும். இன்றைய டிஜிட்டல் கால கட்டத்தில் வங்கி விடுமுறை குறித்து பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை என்றாலும், சில காரணங்களுக்காக வங்கிகள் செல்லும் தேவை இருப்பவர்களுக்கு இந்த விபரங்களை அறிந்து கொள்வது உதவிகரமாக இருக்கும்.
வங்கி விடுமுறைகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன?
ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசுகள் இணைந்து, வங்கி விடுமுறைகளின் பட்டியலைத் தயாரிக்கின்றன. தேசிய பண்டிகைகள், முக்கிய ஆன்மீக நிகழ்வுகள், மாநில அளவிலான பண்டிகைகள் மற்றும் வாராந்திர விடுமுறை நாட்களை அடிப்படையாகக் கொண்டதாக இந்த பட்டியல் இருக்கும். மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளிலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். உள்ளூர் விடுமுறை நாட்கள் என்பது மாநிலங்களை பொறுத்து மாறுபடலாம்.
ஆகஸ்ட் 2025 விடுமுறை: மாநிலங்களுடனான விடுமுறை நாட்களின் பட்டியல் இங்கே
ஆகஸ்ட் 3 - திரிபுரா: கெர் பூஜை காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 8 - சிக்கிம், ஒடிசா: டெண்டோங் லோ ரம் ஃபாத் பண்டிகை காரணமாக சிக்கிம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 9 - மத்திய இந்தியா: நாடு முழுவதும் ரக்ஷாபந்தன் பண்டிகை இந்த நாளில் கொண்டாடப்படும். இதன் காரணமாக, மத்திய இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.. இவற்றில் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்றவை அடங்கும்.
ஆகஸ்ட் 13: தேசபக்தி திவாஸ் காரணமாக மணிப்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 15: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய விடுமுறை. இதன் காரணமாக, அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 16: ஜென்மாஷ்டமி காரணமாக நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களின் தனியார் மற்றும் அரசு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு காரணமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 26: விநாயகர் சதுர்த்தி காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 27: விநாயகர் சதுர்த்தி காரணமாக ஆந்திரா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ