2025 ஜூலை மாத வங்கி விடுமுறை விபரம்... RBI வெளியிட்டுள்ள பட்டியல்

Bank Holidays in July 2025: ஜூலை மாதத்தில், வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, சில முக்கியமான பணிகளை முன்கூட்டியே திட்டமிட உதவியாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2025, 01:06 PM IST
  • 2025 ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்
  • வங்கி விடுமுறைகள் தீர்மானிக்கப்படும் விதம்.
  • சில விடுமுறைகள் சில மாநிலங்களில் மட்டுமே அமலில் இருக்கும்.
2025 ஜூலை மாத வங்கி விடுமுறை விபரம்... RBI வெளியிட்டுள்ள பட்டியல்

ஜூலை மாதம் பிறக்க இன்னும் 10 நாட்கள் உள்ளது. ஜூலை மாதத்தில், வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, சில முக்கியமான பணிகளை முன்கூட்டியே திட்டமிட உதவியாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025 ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலின் படி, இந்த மாதம் மொத்தம் 13 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இன்றைய டிஜிட்டல் கால கட்டத்தில் வங்கி மூடப்பட்டிருந்தால், பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை. என்றாலும், சில காரணங்களுக்காக வங்கிகள் செல்லும் தேவை இருப்பவர்களுக்கு இந்த தகவல் உதவிகரமாக இருக்கும்.

வங்கி விடுமுறைகள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன?

ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசுகள் இணைந்து, வங்கி விடுமுறைகளின் பட்டியலைத் தயாரிக்கின்றன. இந்த விடுமுறைகள் தேசிய பண்டிகைகள், முக்கிய ஆன்மீக நிகழ்வுகள், மாநில அளவிலான பண்டிகைகள் மற்றும் வாராந்திர விடுமுறை நாட்களை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளிலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். உள்ளூர் விடுமுறை நாட்கள் மாநிலங்களை பொறுத்து மாறுபடலாம். எனவே, வங்கிக்குச் செல்வதற்கு முன், நிச்சயமாக அவற்றை ஒரு முறை சரிபார்த்து, விடுமுறை நாட்களுக்கு ஏற்ப உங்கள் பணிகளை திட்டமிடுங்கள்.

ஜூலை மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கிகள் மூடப்படும்

அடுத்த மாதம், தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகளும் வருவதன் காரணமாக வங்கிகள் மொத்தம் 13 நாட்கள் மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி, ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும், அதே நேரத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாராந்திர விடுமுறை. இது தவிர, முக்கிய பண்டிகை நாட்களில் வங்கிகள் இயங்காது.

விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்

ஜூலை 3: கார்ச்சி பூஜையை முன்னிட்டு திரிபுராவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

ஜூலை 5: குரு ஹர்கோபிந்த் ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பஞ்சாபில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஜூலை 6: ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை

ஜூலை 12: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை

ஜூலை 13: ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை

ஜூலை 14: பெஹ் டெங்க்லாம் விழாவை முன்னிட்டு அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

ஜூலை 16: ஹரேலா பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும்.

ஜூலை 17: உ திரோட் சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு மேகாலயாவில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

ஜூலை 19: கெர் பூஜைக்காக திரிபுராவில் மூடப்படும்.

ஜூலை 20: ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை

ஜூலை 26: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை

ஜூலை 27: ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை

ஜூலை 29: போனாலு காரணமாக தெலுங்கானாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஜூலை மாதத்தில் வங்கியுடன் தொடர்புடைய ஏதேனும் முக்கியமான வேலைகள் இருந்தால், காசோலையை டெபாசிட் செய்தல், கடன் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தல் அல்லது பணம் எடுப்பது போன்றவை இருந்தால், முன்கூட்டியே திட்டமிடுங்கள். இருப்பினும், ஆன்லைன் வங்கி, UPI மற்றும் ATM மற்றும் இணைய வங்கி வசதி தொடரும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: ரூ.14,000 மாத முதலீட்டில்... ரூ.13 கோடி கார்ப்பஸ்... சாத்தியமாக்கும் பரஸ்பர நிதியம்

மேலும் படிக்க | Atal Pension Yojana: ரூ.10,000 மாத ஓய்வூதியம் தரும் அட்டகாசமான அரசு திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News