பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்... வட்டி மானியத்துடன் கடனுதவி... BoB வங்கியின் முக்கிய அறிவிப்பு

மத்திய அரசின் வித்யா லக்ஷ்மி திட்டத்தின் கீழ், சிறந்த கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் உதவி கிடைக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 28, 2025, 01:51 PM IST
  • பாங்க் ஆப் பரோடாவின் 8,300க்கும் மேற்பட்ட கிளைகளில் கடன் பெற முடியும்.
  • பிரதம மந்திரி வித்யா லக்ஷ்மி யோஜனா விபரம்.
  • மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் பெற வசதி.
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்... வட்டி மானியத்துடன் கடனுதவி... BoB வங்கியின் முக்கிய அறிவிப்பு

பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலை உள்ளதன் காரணமாக உயர்கல்வி பெற முடியாத மாணவர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கிலானது தான் பிரதம மந்திரி வித்யா லக்ஷ்மி யோஜனா. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ், சிறந்த கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் நிதி நிறுவனங்களில் கடன் உதவி கிடைக்கும். இந்நிலையில், பாங்க் ஆப் பரோடா, பிரதான் மந்திரி வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் கல்விக் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவுகளை நிறைவேற்றும் வகையில், எளிதான விதிமுறைகளில் கல்விக் கடன் பெறலாம்.

Add Zee News as a Preferred Source

பாங்க் ஆப் பரோடா அறிவித்துள்ள திட்டம்

பேங்க் ஆஃப் பரோடா தனது வங்கி நெட்வொர்க் மூலம் வித்யா லக்ஷ்மி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம்,நாடு முழுவதும் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் 8,300க்கும் மேற்பட்ட கிளைகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். இது தவிர, வங்கி 12 கல்விக் கடன் அனுமதிக்கும் பிரிவு (ELSC) மற்றும் 119 சில்லறை சொத்துகள் செயலாக்க பிரிவு (RAPC) ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. இதனால் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் செயலாக்கத்தை விரைவாகவும் எளிதாகவும் செய்யும்.

திட்டத்தின் கீழ் பலன் பெறும் மாணவர்கள்

வித்யா லக்ஷ்மி திட்டத்தின் பலன் நாட்டின் 860 உயர்தர கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தத் திட்டத்தில், மாணவர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு 75% கடன் உத்தரவாதம் வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் எளிதாக கடன் வழங்குவதுடன், அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தின் பலனைப் பெற முடியும்.

கடன் தொகை மற்றும் விதிமுறைகள் விபரம்

1. ரூ.7.5 இலட்சம் வரையிலான கடனுதவி எவ்வித பிணையமும் அல்லது உத்தரவாதமும் இல்லாமல் கிடைக்கும்.

2. உயர் தரத்தில் உள்ள குறிப்பிட்ட 384 நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள், 40 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதமில்லாமல் கடன் பெறலாம்.

3. சர்வதேச அளவிலான உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் வழங்கலாம்.

4. குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களும் பகுதி அல்லது முழு வட்டி மானியத்தைப் பெறுவார்கள்.

டிஜிட்டல் செயல்முறை மூலம் கடன் வாங்குவது எளிது

பாங்க் ஆப் பரோடா இந்த திட்டத்தை முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தி வருகிறது. அதாவது மாணவர்கள் கடன் வாங்க வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் PM வித்யாலக்ஷ்மி போர்ட்டல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மேலும் வீட்டிலேயே தங்கள் கடனின் நிலையைப் பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

கடன் உதவி திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:

1. PM வித்யாலட்சுமி போர்ட்டலுக்குச் செல்லவும் (https://www.vidyalakshmi.co.in/).

2. உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவும்.

3. ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

4. விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, வங்கி உங்கள் ஆவணங்களைச் சரிபார்க்கும்.

5. கடன் அங்கீகரிக்கப்பட்டதும், தொகை நேரடியாக உங்கள் நிறுவன (கல்லூரி/பல்கலைக்கழகம்) கணக்கிற்கு மாற்றப்படும்.

வித்யாலட்சுமி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

வித்யாலட்சுமி திட்டம் பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது. இதில், பிணை மற்றும் உத்தரவாதம் இல்லாமல் கடனின் பலனைப் பெறுவீர்கள். கடன் அங்கீகாரத்திற்கான செயல்முறை ஆன்லைனில் இருப்பதால், விண்ணப்பிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இதில், குறைந்த வட்டியில் கல்விக் கடன் கிடைக்கும். இதுமட்டுமின்றி, நிதி நிலையில் பலவீனமான மாணவர்களுக்கும் வட்டி மானியம் வழங்கப்படும். உயர் கல்விக்காக கடன் வாங்க விரும்புபவர்களுக்கு, பிரதம மந்திரி வித்யா லக்ஷ்மி யோஜனா ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இப்போது பேங்க் ஆஃப் பரோடா மூலம் இது எளிதாகிவிட்டது.

மேலும் படிக்க | PM இன்டர்ன்ஷிப் திட்டம்... லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்கும் முறை

மேலும் படிக்க |Alert... மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கவேண்டிய சில முக்கிய வேலைகள் இவை தான்... நோட் பண்ணிக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News