மதிப்பீட்டு ஆண்டு 2023-24 -க்கு எந்த அபராதமும் இல்லாமல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட 2 கோடி ஐடிஆர்களுடன் ஒப்பிடுகையில், ஜூலை 11 ஆம் தேதிக்குள், 2023-24 ஆம் ஆண்டிற்கு 2 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் பொருள், இந்த ஆண்டு நேரத்திற்கு முன்பே அதிக வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுமார் 6 கோடி வரி செலுத்துவோர் உள்ளனர். வரி செலுத்துவோரின் சமீபத்திய தரவுகளைப் பகிர்ந்து கொண்ட வருமான வரித் துறை, முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 9 நாட்களுக்கு முன்னதாக 2 கோடி மைல்கல்லை எட்டுவதற்கு வரி செலுத்துவோர் உதவியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. வருமான வரித் துறை, கடைசி நிமிட பரபரப்பைத் தவிர்க்க, AY 2023-24க்கான ஐடிஆர் -ஐ விரைவாகத் தாக்கல் செய்யுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியது. தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், வருமான வரித் துறையும் உயர் தொழில்நுட்பத்தின் உதவியை பெற்று, நீங்கள் கற்பனை செய்ய முடியாத ஆதாரங்களில் இருந்து தரவுகளைக் கண்காணிக்கவும் பொருத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.


ITR ஆய்வில் AI இன் பயன்பாடு


இந்த ஆண்டு முதல், வருமான வரித் துறையானது, வரிக் கணக்கை கடுமையாக ஆய்வு செய்யும். இந்த செயல்முறையை எளிதாக்க, வருமான வரிக் கணக்கை (ITR) ஆய்வு செய்வதற்காக, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, தானியங்கு மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மென்பொருள் திட்டத்தை (AI) அவர்கள் செயல்படுத்தியுள்ளனர். இந்தத் திட்டம் உங்கள் பான் கார்டுடன் தொடர்புடைய தரவைச் சேகரித்து, பின்னர் உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட தகவல்களின் மூலம் ஆய்வு செய்யத் தொடங்கும்.


நீங்கள் இணைத்துள்ள வங்கிக் கணக்குகளுடன் உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை AI கிராஸ் ரெஃபெரென்ஸ் செய்யும் என அறிக்கைகள் கூறியுள்ளன. நிலையான வைப்புத்தொகைகள், காலாண்டு வட்டி வரவுகள், பங்கு ஈவுத்தொகைகள், பங்கு பரிவர்த்தனைகள், பரஸ்பர நிதி முதலீடுகள், அத்துடன் நீங்கள் அறிவித்த மற்றும் உங்கள் வருமான வரி ஐடிஆர் ரிடர்னுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளிலிருந்தும் நீண்ட கால மற்றும் குறுகிய கால ஆதாயங்கள் பற்றிய விரிவான தகவல்களை இது தொகுக்கும். மேலும், AI அமைப்பு உங்கள் பெயரில் பதிவுசெய்யப்பட்ட அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகளைப் பொருத்தும் செயல்முறையைத் தொடங்கும். இதில் நீங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது ஹோல்டராக பட்டியலிடப்பட்டுள்ள கூட்டு வங்கிக் கணக்குகளும் அடங்கும்.


கூட்டுறவு வங்கிகள் மற்றும் உள்ளூர் கடன் நிறுவனங்களில் உள்ள அஞ்சல் கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகள், அத்துடன் அஞ்சல் நிலையான வைப்புத்தொகைகள், வட்டிகள், தொடர் வைப்புத்தொகைகள் (RDs), மாதாந்திர வருமானத் திட்டங்கள் (MIS) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கான தேடல்களையும் ஏஐ மேற்கொள்ளும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், நடப்பு ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்குள் நிலம் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை அடையாளம் காண அரசு பதிவு அலுவலகத்தின் படி பான் கார்டு விவரங்கள் சரிபார்க்கப்படும்.


இந்த விரிவான பகுப்பாய்வைத் தொடர்ந்து, AI திட்டம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை ஆராயும். அத்துடன் பயண பதிவுகள் உட்பட பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களையும் ஆராயும். இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவது அல்லது விற்பனை செய்வது பற்றிய தகவல்களையும் இது மதிப்பாய்வு செய்யும். இது AS26 இல் மூலத்தில் கழிக்கப்பட்ட (TDS) தரவுகளுடன் கிராஸ் ரெஃபெரன்ஸ் செய்யப்படும். இந்த பகுப்பாய்வின் அடிப்படையில், அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத உண்மையான வருமான வரி தானாகவே கணக்கிடப்படும்.


போலி நன்கொடைகள் எளிதாக கழிக்கப்படும்


முன்னதாக, பல வரி செலுத்துவோர், வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக போலியான நன்கொடை விவரங்களை உள்ளீடு செய்து வந்தனர். இனி அப்படி செய்ய முடியாது. முழு-ஆதார தானியங்கி AI-ITR திட்டத்தின் வரிசைப்படுத்தல், வரி செலுத்துவோர் செய்யும் கோரிக்கைகளை க்ராஸ்-வெரிஃபை செய்வதை வரித் துறைக்கு எளிதாக்கியுள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு மார்ச் 20 முதல் ஜூன் 10 வரை போலி நன்கொடைகளைப் பெற்ற வரி செலுத்துவோருக்கு வரித் துறை நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இது AI-மூலம் அதிக பலம் பெற்ற அமைப்பின் செயல்திறனைக் காட்டுகிறது.


உண்மையான மற்றும் மோசடியான நன்கொடை உரிமைகோரல்களை வேறுபடுத்துவதற்கான கருவிகளை வருமான வரித்துறை இப்போது கொண்டுள்ளது. வரிக் கணக்கை கணினிமயமாக்குவதன் மூலம், அறக்கட்டளைகள் அல்லது அரசியல் கட்சிகள் தங்கள் வரிக் கணக்குகளில் வழங்கிய தரவை தனிநபர்கள் அறிவித்த நன்கொடை விவரங்களுடன் ஒப்பிடலாம். பிப்ரவரி 2019 யூனியன் பட்ஜெட்டில், அறக்கட்டளைகள் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. எனவே, புதிய விதிகளின்படி, இந்த அடையாள எண்களைக் கொண்ட அறக்கட்டளைகளுக்கு மட்டும் அளிக்கப்படும் நன்கொடைகள், ஏப்ரல் 1, 2020 முதல் பிரிவு 80G விலக்குக்குத் தகுதியுடையவை. இந்த ஆய்வு செயல்முறைகள் அனைத்திற்கும் பிறகு, தேவைப்பட்டால், முரண்பாடுகள் ஏற்பட்டால், பிரிவு 143(i) அல்லது பிரிவு 148 (A) -இன் கீழ் வரி செலுத்துபவருக்கு கோரிக்கை அறிவிப்பு அனுப்பப்படும். 


மேலும் படிக்க | Income Tax Return: வருமான வரி ரிட்டர்ன்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்கள்! 


வரி செலுத்துவோர் என்ன செய்ய வேண்டும்?


ஐடிஆர் தாக்கல் செய்யும் போது போலியான க்ளைம்களை செய்யாமல் இருப்பது நல்லது. மேலும், ஐடிஆஆர் -ஐ நீங்களே தாக்கல் செய்வது கடினமாக இருந்தால், சிஏ -க்கள் போன்ற நிபுணர்களின் உதவியைப் பெறுவது அவசியம். மேலும், நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்து, வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் பெற்றிருந்தால், அதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். வரி செலுத்துவோர் நன்கொடைக்கான ஆதாரத்தை வைத்திருந்தால், அவர்கள் நோட்டீஸுக்குப் பதில் அளிக்க வேண்டும், இல்லையெனில், ஐடி துறை கோரும் வரித் தொகையை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத்துடன் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். 


ஆதார்-பான் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டதா?


மேலும், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இன்னும் இணைக்கவில்லை என்றால் அதன் நிலையை உடனே சரிபார்க்க வேண்டும். ஆதார்-பான் இணைக்கும் காலக்கெடுவை பலமுறை நீட்டித்த பிறகு, வருமான வரித் துறை கடைசியாக ஜூன் 30க்கு அப்பால் காலக்கெடுவை நீட்டிக்க மறுத்துவிட்டது. எனவே, இந்த இரண்டு ஆவணங்களையும் நீங்கள் இன்னும் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் செயலிழந்திருக்கலாம், அதை நீங்கள் மீண்டும் செயல்படுத்த வேண்டியிருக்கும். 


ஆதார் கார்டுடன் இணைக்க பான் கார்டை மீண்டும் செயல்படுத்துவது எப்படி?


உங்கள் பான் எண் செயலிழந்துவிட்டால், உங்கள் ஆதார் இணைப்பு குறித்து நியமிக்கப்பட்ட வரி அதிகாரியிடம் தெரிவித்து, பான் கார்டை மீண்டும் செயல்படுத்த ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் நாளிலிருந்து மீண்டும் செயல்படுத்தும் செயல்முறைக்கு 30 நாட்கள் வரை ஆகலாம்.


மேலும் படிக்க | பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு அபராதம் செலுத்துவது எப்படி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ