Summer health tips Tamil : கோடைகாலம் தொடங்கிவிட்டதால் இயல்பாகவே எல்லோருக்கும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவரவர் உடலுக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். அதேநேரத்தில் பழச்சாறுகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை இவை செய்துவிடும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் தர்பூசணி மற்றும் முலாம் பழம் சாப்பிடலாம். இவை அதிக நீர்ச்சத்து மிக்க பழங்கள். இந்த பழங்களின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
1. தர்ப்பூசணியின் மருத்துவ குணங்கள்
தர்ப்பூசணி 92% நீர் அடங்கியது, இது உடல் வெப்பத்தை குறைக்கும். இதில் உள்ள லைக்கோபீன் என்பது இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். வைட்டமின் A, C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோடை காலத்தில் நீரிழப்பை தடுக்க இது சிறந்த தேர்வு.
2. முலாம்பழத்தின் சத்துகள்
முலாம்பழம் இரும்புச்சத்து நிறைந்தது, இரத்த சோகைக்கு நல்லது. நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை சீராக்கும். போட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் K எலும்புகளை பலப்படுத்தும்.
3. யார் இவற்றை தவிர்க்க வேண்டும்?
சர்க்கரை நோயாளிகள் - தர்ப்பூசணியில் இயற்கை சர்க்கரை அதிகம்
கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் - முலாம்பழம் ஜீரணிக்க கடினம்
ஈரல் காய்ச்சல் (Hepatitis) உள்ளவர்கள்
சிறுநீரக நோயாளிகள் - பொட்டாசியம் அதிகம்
ஆல்ஜிமர்ஸ் நோயாளிகள் (முலாம்பழத்தில் அலுமினியம் உள்ளது)
கவனத்தில் கொள்ள வேண்டியவை
தர்ப்பூசணியை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்
முலாம்பழத்தை இரவு நேரத்தில் தவிர்க்கவும்
இரண்டு பழங்களையும் அதிகம் சாப்பிடாமல் மிதமாக உண்ணுங்கள்
இந்த இனிப்பான கோடை பழங்கள் பல நன்மைகள் தரினும், சிலருக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப உண்ணுங்கள். ஒரு நாளைக்கு 2-3 துண்டுகளுக்கு மேல் சாப்பிடாதீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீங்கள் வாங்கும் தர்பூசணி உண்மையானதா? கலப்படத்தை எளிதாக கண்டு பிடிக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ