Best Home Remedies For White Hair: ஒரு வயதுக்கு பின்னர் நரை முடி ஏற்படுவது இயற்கையானது. ஆனால் சில சமயங்களில் 20, 30 வயதிலும் வெள்ளை முடி ஏற்படுவதால் மோசமான மன உளைச்சலை உண்டாக்கிவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே. வயதாகும் போது முடியின் ஒவ்வொரு இழையிலும் செலுத்தப்படும் நிறமியின் அளவு குறையத் தொடங்கிவிகிறது அதனால் தான் முதற்கட்டமாக கூந்தல் சாம்பல் நிறமாகவும் இறுதியில் வெள்ளை நிறமாகவும் மாறுகிறது. இப்போது முன்கூட்டியே உண்டாகும் வெள்ளை முடியை தடுப்பது எப்படி, அதை மீண்டும் கருப்பாக மாற்ற முடியுமா என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
பொதுவாக நாம் நரை முடியை மறைக்க ரசாயன அடிப்படையிலான ஹேர் டையை பயன்படுத்துகிறோம், ஆனால் இது நன்மைகளுக்கு பதிலாக தீங்கு மட்டுமே விளைவிக்கும், இது ட்ரை ஹேர் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால்தான் நீங்கள் இயற்கையான முறைகளைப் பயன்படுத்துவது முக்கியம், இதனால் நீங்கள் கருமையான முடியைப் பெறுவது மட்டுமல்லாமல், வலிமையையும் பளபளப்பான கூந்தலையும் பெறுவீர்கள். எனவே நீங்கள் விரும்பிய முடிவை எவ்வாறு மீண்டும் பெறுவது என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
1. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை முடியின் வேர்களில் மசாஜ் செய்து உலர்த்திய பின் ஷாம்பு கொண்டு கழுவவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யவும். முடியில் படிப்படியாக கருமை வர ஆரம்பிக்கும்.
2. நெல்லிக்காய் மற்றும் ரீத்தா
வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க நீங்கள் நெல்லிக்காய் மற்றும் ரீத்தாவைப் பயன்படுத்தலாம். இதற்கு நெல்லிக்காய் மற்றும் ரீத்தா பொடியை ஒரு இரும்பு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் தலைமுடியில் தடவி உலரும் வரை காத்திருக்கவும். இறுதியாக முடியை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யவும்.
3. வெங்காயச் சாறு
வெள்ளை முடியை கருப்பாக்க வெங்காயத்தையும் பயன்படுத்தலாம். எனவே வெங்காயத்தை மிக்ஸி கிரைண்டரில் அரைத்து சாறு எடுத்து தலையில் தடவவும். பின் காய்ந்ததும், ஷாம்பு கொண்டு கழுவவும்.
4. ஆயுர்வேத எண்ணெய் மசாஜ்:
கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் சில இந்திய மூலிகைகள் (Ayurvedic Oil Massage) உள்ளன. இவற்றில் குறிப்பாக பிரிங்கராஜ், நெல்லிக்காய், பிராமி மற்றும் கறிவேப்பிலை ஆகியவை அடங்கும். இவை அனைத்தையும் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயைத் தொடர்ந்து தலை முடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் முடிக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக்க வைத்திருக்க உதவும்.
5. பிரிங்ராஜ், வெந்தய விதைகள் மற்றும் கருஞ்சிரகம்:
பிரிங்கராஜ், வெந்தயம் மற்றும் கருஞ்சிரகம் சம அளவு எடுத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு சூடாக்கவும். எண்ணெய் குளிர்ந்ததும், அதைக் கொண்டு உங்கள் தலையில் மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முன்கூட்டியே ஏற்படும் நரை முடியை தடுக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ‘மைசூர் பாக்’ என்று பெயர் வந்தது எப்படி? இந்த கதையை தெரிஞ்சிக்கோங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









