கோடைகாலத்தில் என்னென்ன சாலட் உணவுகள் சாப்பிடலாம், எப்படி செய்வது?

Best Summer Salads : கோடை காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகளைபோல் போலவே சாப்பிட வேண்டிய உணவுகளையும் தெரிந்து கொள்வது நல்லது. அந்தவகையில் கோடை காலத்தில் சாலட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 11, 2025, 02:45 PM IST
  • கோடைகால சிறப்பு உணவுகள்
  • பழங்கள் சாலட் தயாரிப்பது எப்படி?
  • என்னென்ன சாலட் செய்யலாம்?
கோடைகாலத்தில் என்னென்ன சாலட் உணவுகள் சாப்பிடலாம், எப்படி செய்வது?

Best Summer Salads Tamil : கோடைகாலத்தில் உணவுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சாலட் உணவுகளை அதிகம் சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிகநல்லது. கோடைகாலத்தில் என்னென்ன சாலட் சாப்பிடலாம், சாலட் உணவுகள் எப்படி தயாரிக்கலாம், சாலட் உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Add Zee News as a Preferred Source

1. தர்பூசணி & தக்காளி சாலட்

உடல் வெப்பத்தை குறைக்கும், நீரிழப்பை தடுக்கும். இந்த சாலட் தயாரிக்க தேவையான பொருட்கள் தர்பூசணி (1 கப், துண்டுகள்), தக்காளி (1, நறுக்கியது), வெங்காயம் (1/4, நறுக்கியது), புதினா இலைகள் நீர், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு. எல்லா பொருட்களையும் கலக்கி அப்படியே சாப்பிடவும். 

2. கீரை & பழ சாலட்

இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. தேவையான பொருட்கள் என்றால், கீரை (பாலக்கீரை/முளைக்கீரை) – 1 கப், ஆப்பிள்/பேரிக்காய் (துருவியது) – 1/2 கப், வாதுமை/பாதாம் கொட்டை – 1 ஸ்பூன். இவற்றுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். கீரையை நன்கு கழுவி, பழங்களுடன் கலக்கவும். சிறிது தேன் ஊற்றி சாப்பிடுங்கள்.

3. கேரட் & பீட்ரூட் சாலட்

இரத்த சுத்திகரிப்பு, ஜீரணத்திற்கு நல்லது. தேவையான பொருட்கள் கேரட் (துருவியது) – 1/2 கப், பீட்ரூட் (துருவியது) – 1/2 கப், எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன், கொத்தமல்லி & கருப்பு மிளகு. கேரட், பீட்ரூட்டை கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றவும். மேலே கொத்தமல்லி தூவி சாப்பிடுங்கள்.

4. கீரை & தயிர் சாலட்

புரதம், பாக்டீரியா நிறைந்தது, தேவையான பொருட்கள் வெள்ளரி (நறுக்கியது) – 1/2 கப், தயிர் – 1 கப், கொத்தமல்லி மற்றும் சீரக பொடி. வெள்ளரியை தயிரில் கலந்து, சீரக பொடி தூவவும். அப்படியே சாப்பிடலாம். 

5. பழங்களின் கலவை சாலட்

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. தர்பூசணி, முலாம்பழம், திராட்சை (துண்டுகள்), தேன் – 1 ஸ்பூன், புதினா இலைகள். எல்லா பழங்களையும் கலந்து, தேன் ஊற்றி சாப்பிடவும்.

கோடைகாலத்தில் சாலட் சாப்பிடுவதன் முக்கிய நன்மைகள்:

உடல் குளிர்ச்சி - தர்பூசணி, வெள்ளரி, பேரீட்சை போன்ற நீர் நிறைந்த காய்கறிகள் & பழங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கும்.

நீரிழப்பு தடுப்பு - சாலட்களில் 80-95% நீர் உள்ளது (எ.கா: வெள்ளரி, தக்காளி). இது ஈலெக்ட்ரோலைட்ட் சமநிலையை பராமரிக்க உதவும்.

எடை கட்டுப்பாடு - குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து (ஃபைபர்) உள்ளவை. வயிறு நிரம்பியதாக உணர உதவும்.

ஜீரணம் மேம்பாடு - முளைக்கீரை, கேரட் போன்றவை இரைப்பை அமிலத்தை சமநிலைப்படுத்தும். தயிர் சேர்த்தால் நல்ல பாக்டீரியாக்கள் (ப்ரோபயாடிக்ஸ்) கிடைக்கும்.

தோல் பளபளப்பு - வைட்டமின் C (தக்காளி, பேரீட்சை) மற்றும் வைட்டமின் E (வாதுமை) தோல் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி - பீட்ரூட், கேரட் போன்றவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

ஆற்றல் அதிகரிப்பு - பாதாம், முந்திரி மற்றும் பேரீச்சை போன்ற நட்ஸ், சூரியகாந்தி விதை உள்ளிட்ட பல வகையான விதைகள் சேர்த்தால் புரதம் & ஆரோக்கியமான கொழுப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | 180 கிலோவில் இருந்து... 97 கிலோவை குறைந்த இன்ஸ்டா பிரபலம் - 'நோ' குறுக்கு வழி!

மேலும் படிக்க | ஹீமோகுளோபின் குறைவுக்கு இயற்கையான தீர்வு...ரத்த சோகையை எளிதில் விரட்டும் மேஜிக் டிரிங்க்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News