)
தென்னிந்தியாவிற்கு குடும்பமாக சுற்றுலா செல்ல சிறந்த தேர்வு. இங்கு சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும், இயற்கை எழில் நிறைந்த பல இடங்கள் உள்ளன. அவற்றில் குடகு மலை காபி தோட்டங்கள், ஆலப்புழா ஹவுஸ் படகு, அழகிய கடற்கரைகள் கொண்ட கன்னியாகுமரி, வயநாடு நீர்வீழ்ச்சிகள் மற்றும் மகாபலிபுரம் என பல இடங்கள் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள், பசுமையான மலைவாசஸ்தலங்கள், வனவிலங்கு சஃபாரிகள் என அனைவருக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கும். அவற்றில் குடகு மலை காபி தோட்டங்கள் முதல், ஆலப்புழா ஹவுஸ் படகு, அழகிய கடற்கரைகள் கொண்ட கன்னியாகுமரி, வயநாடு நீர்வீழ்ச்சிகள் மற்றும் மகாபலிபுரம் என பல இடங்கள் அடங்கும். அந்த வகையில், தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 இடங்களை அறிந்து கொள்ளலாம்.
குடகு மலை, கர்நாடகா
"இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கூர்க் என்னும் குடகு மலை, காபி தோட்டங்கள், பனி போர்த்திய நிலப்பரப்புகள் மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவற்றால் நிறைந்த ஒரு அழகான மலைவாசஸ்தலமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இதில் மென்மையான மலையேற்றங்கள் மற்றும் யானை முகாம் என பல வகைகளில் சிறப்பாக அனுபவிக்கலாம். அபே நீர்வீழ்ச்சி மற்றும் அற்புதமான சூரிய அஸ்தமனத்தைக் காண ராஜாஸ் சீட் வியூபியூன்டை தவறவிடாதீர்கள்.
வயநாடு, கேரளா
வயநாடு இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா தலம். இங்கு வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களைக் கொண்ட குகைகள், எழில் மிகும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் யானைகளை அதிகம் காணக்கூடிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றைக் காண்பீர்கள். குழந்தைகளுக்கு ஏற்ற மர வீடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ரிசார்ட்டுகளும் ஏராளமாக உள்ளன. பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளைக் காணலாம். படகு சவாரி, மலையேற்றம் மற்றும் ட்ரெக்கிங், நீர்வீழ்ச்சிகளில் குளித்தல் ஆகியவை அற்புத அனுபவத்தை கொடுக்கக் கூடியது.
ஆலப்புழா, கேரளா
மத்திய கேரளாவில் அமைந்துள்ள ஆலப்புழாவிற்கு, கொச்சியிலிருந்து 1.5 மணிநேர பயணத்தில் செல்லலாம். உங்கள் குழந்தைகள் மறக்க முடியாத ஒரு தனித்துவமான அனுபவத்தை ஆலப்புழா வழங்குகிறது, இது ஒரு பாரம்பரிய கேரள மிதக்கும் படகு வீட்டில் தங்கலாம். மெதுவான வேகம், கிராமக் காட்சிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகள் ஆகியவை நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். கடற்கரைக்குச் செல்லலாம் அல்லது அதிக சாகசத்திற்காக படகு சவாரியை அனுபவிக்கலாம்.
ஹம்பி, கர்நாடகா
வடக்கு கர்நாடகாவில் அமைந்துள்ள ஹம்பிக்கு, ஹோஸ்பெட் அல்லது ஹூப்ளியிலிருந்து அணுகலாம்
கோயில்கள், பிரமாண்டமான பாறைகள் நிறைந்த திறந்தவெளி அருங்காட்சியகம் நிச்சயம் பார்க வேண்டியது. ஹம்பி என்பது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இது ஒரு நிஜ வாழ்க்கை வரலாற்றுப் பாடமாக உணர்கிறது. குழந்தைகள் பாறைகளில் ஏறலாம், பழங்கால அரண்மனைகளை ஆராயலாம், ஆற்றில் ஒரு பவளப் படகில் கூட சவாரி செய்யலாம்.
கன்னியாகுமரி, தமிழ்நாடு
இந்தியாவின் தெற்கு முனையில், கன்னியாகுமரி மூன்று பெருங்கடல்கள் சந்திக்கும் இடம். கடலின் மீது சூரிய உதயம், விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னத்திற்கு ஒரு படகு சவாரி மற்றும் வண்ணமயமான தெரு சந்தைகள் ஆகியவை அற்புத அனுபவத்தை கொடுக்கக் கூடியவை. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வரலாற்று சின்னங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் கொண்ட இடமான கன்னியாகுமரியில், பகவதி அம்மன் சிலை, கடலுக்கு நடுவே எழுப்பப்பட்டுள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்கள் மிகவும் பிரபலமானவை.
ஊட்டி, தமிழ்நாடு
ஊட்டி குடும்பமாக சுற்றுலா செல்ல மிகவும் பிடித்தமான இடமாக இருந்து வருகிறது. நீலகிரி மலை ரயில் (யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்) குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடித்த இடமாகும். ஊட்டி ஏரியில் படகு சவாரி, தாவரவியல் பூங்காவை கண்டு களித்தல் அல்லது தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அருகிலுள்ள குன்னூருக்குச் செல்லுதல் ஆகியவற்றை அனுபவிக்கலாம். அடர்த்தியான சோலைகள், எழில்கொஞ்சும் அருவிகள், ஓடைகள், ஏரிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், எல்லாவற்றையும் கண்டு களிக்கலாம்
மகாபலிபுரம், தமிழ்நாடு
மகாபலிபுரம் என்பது சிறிய கடற்கரை நகரம். பல வரலாற்று சின்னங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளன. குறிப்பாக பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது கடற்கரை கோயில், பஞ்ச ரதங்கள் என்னும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து ரதங்கள் , பாறையில் வெட்டப்பட்ட குகைகள், குகிய கோயில்கள் மற்றும் அர்ஜுனனின் தவம் ஆகியவை மிஸ் பண்ணக் கூடாத இடங்கள். கூடுதலாக, இங்குள்ள கடற்கரைகள் அமைதியானவை. சென்னைக்கு அருகில் ஓய்வெடுக்க விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்றவை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ