Indian Railway New Rules: நமது நாட்டின் உயிர்நாடியாக இந்திய ரயில்வே தற்போது இயங்கி வருகிறது. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதே நேரத்தில், பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஒவ்வொரு நாளும் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. குறிப்பாக பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, ரயில்வே மே 1 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகள் தொடர்பான பல விதிகளை மாற்றியுள்ளது. அதன்படி, வெயிட்டிங் டிக்கெட்டுகள் இனி ஜெனரல் பெட்டிகளில் மட்டுமே செல்லுபடியாகும். அதாவது இனி நீங்கள் வெயிட்டிங் டிக்கெட் வைத்திருந்தால் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணிக்க முடியாது. முன்னதாக வெயிட்டிங் டிக்கெட் வைத்துக் மோந்து சில பயணிகள் ஏசி மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் ஏறி பயணம் செய்வார்கள். இதன் காரணமாக, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பல சமயங்களில், இதனால் பயணிகளுக்கு இடையே சண்டைகள் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. இதன் மூலம் கன்பர்ம் டிக்கெட்டு வைத்திருக்கும் பயணிகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது.
IRCTC மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதிப்படுத்தப்படாவிட்டால் தானாகவே ரத்து செய்யப்படும். இருப்பினும், மக்கள் கவுண்டர் டிக்கெட்டுகள் அல்லது டிக்கெட்டுகள் இல்லாமல் ரயிலில் ஏறுகிறார்கள். பல நேரங்களில் இதனால் ரயில்களில் கூட்டம் அதிகமாகிவிடுகிறது, மேலும் பயணிகளால் கழிப்பறைக்குச் செல்லக்கூட வழி இல்லாமல் இருக்கும். இந்த சிக்கலில் இருந்து பயணிகளைக் காப்பாற்ற, ரயில்வே தற்போது சில முக்கிய விதிகளை மாற்றியுள்ளது. புதிய விதிகளின்படி, வெயிட்டிங் பட்டியலில் டிக்கெட் உள்ள பயணிகள் பொதுப் பெட்டிகளில் மட்டுமே பயணிக்க முடியும். மேலும் வெயிட்டிங் டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அபராதம் எவ்வளவு விதிக்கபடும்?
உங்களிடம் வெயிட்டிங் டிக்கெட் இருந்து நீங்கள் ஏசி அல்லது ஸ்லீப்பர் பெட்டியில் பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படலாம். நீங்கள் வெயிட்டிங் டிக்கெட்டில் பயணம் செய்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நுழைந்தால், கட்டாயம் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ஏசி கோச்சில் வெயிட்டிங் டிக்கெட்டில் பயணம் செய்தால், ரூ.440 அபராதம் செலுத்தி அடுத்த நிலையம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் ஸ்லீப்பர் கோச்சில் வெயிட்டிங் டிக்கெட்டில் பயணம் செய்தால், அடுத்த நிலையம் வரை கட்டணத்துடன் ரூ.250 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
டிக்கெட் முன்பதிவு அவகாசம்:
அடுத்த முக்கிய விதிமுறையை பற்றி பேசுகையில், மே 1 முதல் திட்டமிட்ட பயணத்துக்கு 120 நாட்களுக்கு முன்பாகவே ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்தது. தற்போது இந்த புதிய விதிமுறைபடி, இது 60 நாட்களாக குறைக்கப்பட்டுவிட்டது. எனவே, 60 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே இனி ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
டிக்கெட் கேன்சல்
இதுதவிர, ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்துக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால், 75 சதவீதம் பணம் கிடைக்கும். அதேபோல் 24 முதல் 48 மணிநேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்தால், 50 சதவீத டிக்கெட் பணம் கிடைக்கும். ஆனால், 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால் எந்த தொகையும் திரும்ப கிடைக்காது.
மேலும் படிக்க | Personal Loan : ரூ.20,000 சம்பளத்துக்கு தனிநபர் கடன் எவ்வளவு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









