2000 Rupees Note: தற்போது நாட்டில் பல பேருக்கு உள்ள யோசனை, 2000 ரூபாய் நோட்டுகளை எங்கே, எப்படி மாற்றவது என்பதுதான். மே 23ஆம் தேதி முதல் ஒவ்வொரு குடிமகனும் நாட்டில் உள்ள எந்த வங்கிக்கும் சென்று 2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி நேற்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வங்கிகளின் வசதி இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், கிராமப்புற மக்களுக்காக ரிசர்வ் வங்கி சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கியின் இந்த சிறப்பு வசதியால் கிராம மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நகரங்களில் உள்ள வங்கிகளை நோக்கி ஓட வேண்டியதில்லை. கிராமங்களில் குடியிருப்பவர்கள் இந்த நோட்டுகளை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.


கிராமத்தில் உள்ள கிராமப்புற வங்கி சேவை மையத்தில் (Business Correspondent Centre) உங்களின் 2000 ரூபாய் நோட்டுகளை பரிமாறிக்கொள்ளலாம். இந்த மையங்கள் கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் அமைந்துள்ளன. நீங்கள் ஒரு கிராமத்தில் வசிக்கிறீர்கள் என்றால், கிராமப்புற வங்கி சேவை மையத்திற்கு சென்று 2000 நோட்டை எளிதாக மாற்றலாம். 2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பான பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த தகவலை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | செப்டம்பர் 30க்கு பிறகு ரூ.2000 நோட்டு செல்லுமா? RBI சொன்ன முக்கிய தகவல்!


கிராமப்புற வங்கி சேவை மையம் என்றால் வங்கி இல்லாத கிராமங்கள் மற்றும் சிறு நகரப் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதி மற்றும் வங்கி சேவைகளை வழங்கும் வங்கி கிளையின் விரிவாக்கப்பட்ட கிளை ஆகும். 2006ஆம் ஆண்டில், கிராமப்புற வங்கி சேவை மையம் அல்லது வணிக உதவியாளர்கள் போன்ற வங்கி அல்லாத இடைத்தரகர்களைப் பயன்படுத்த RBI அனுமதித்தது.


பரிமாற்ற வரம்பு நிர்ணயம்


இந்திய ரிசர்வ் வங்கி, கணக்கு வைத்திருப்பவர் ஒரு நாளில் ரூ.4000 என்ற வரம்பில் கிராமப்புற மையம் மூலம் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். அதேசமயம் எந்த வங்கிக் கிளையிலும் 2000 ரூபாய் நோட்டை மாற்ற அங்கு வங்கிக் கணக்கு வேண்டும் என்பது தேவையில்லை.


எந்தவொரு குடிமகனும் ரூ. 2,000 நோட்டுகளை எந்த வங்கியில் இருந்தும் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதற்கு வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நோட்டுகளை மாற்றும் முறை இலவசம், இதற்கு யாரும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


மேலும் படிக்க | ₹ 2000: சட்டப்பூர்வமான பணத்தாள்! ஆனால் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ