)
Tatkal ticket Booking Update By Indian Railway: இந்தியன் ரயில்வே (Indian Railway) நாட்டின் மிகப்பெரிய உயிர் நாடியாக இருந்து வருகிறது. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஒவ்வொரு நாளும் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, ரயில்வே அடுத்த மாதம அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகள் தொடர்பான பல விதிகளை மாற்றியுள்ளது. அந்த வகையில் நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபராக இருந்தால் இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும்.
அடுத்த மாதம் அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல், தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. அதாவது ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு, ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்படாத பயணிகள், அதிகாரப்பூர்வ ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது மொபைல் செயலியில் இருந்து தட்கல் டிக்கெட்டுகளை (Tatkal Ticket) முன்பதிவு செய்ய முடியாது. ஏனெனில் தற்போது இந்தியன் ரயில்வே நிறுவனம் ஆதார் அங்கீகாரம் மற்றும் ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஜூலை 15 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் OTP சரிபார்ப்பும் கட்டாயமாகும். பயணிகள் ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும், கவுண்டரில் முன்பதிவு செய்தாலும் அல்லது முகவர் மூலம் முன்பதிவு செய்தாலும் பயணிகள் தங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டு செயலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதனிடையே இப்போது ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குடன் ஆதாரை இணைப்பது மிகவும் எலிதாக்கிவிட்டது. இதன் முழு செயல்முறை என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
நீங்கள் இன்னும் உங்கள் ஆதாரை IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) கணக்குடன் இணைக்கவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக இந்த வேலையை முடித்துக் கொள்ளவும்.
* IRCTC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.irctc.co.in க்குச் செல்லவும்.
* உங்கள் யூஜரனேம் மற்றும் பாஸ்வர்ட் உள்நுழையவும்.
* 'My Profile' பகுதிக்குச் செல்லவும்.
* இப்போது 'My Account' அல்லது 'My Profile' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* 'Aadhaar KYC' விருப்பத்தை சொடுக்கவும்.
* ப்ரோஃபைல் மூலம் 'Aadhaar KYC' விருப்பம் தோன்றும், அதை கிளிக் செய்யவும்.
* உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
* இப்போது ஆதார் எண்ணை உள்ளிட்டு 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும்.
* OTP ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும். சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் IRCTC கணக்கு ஆதாருடன் இணைக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ