பிக்பாஸ்: 9 சீசன்..9 போட்டியாளர்கள்! அதிக லட்சங்களை அள்ளிய போட்டியாளர் யார்?

தற்போது பல சீசன்களில் இந்தப் பணப்பெட்டி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்து வருகிறது. அந்த வகையில் எந்த சீசனில் யார் அதிக லட்சங்களை அள்ளி வெளியியுள்ளனர் என்பதை இப்போது பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 10, 2026, 04:04 PM IST
  • பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்
  • அதிக லட்சங்களை அள்ளிய போட்டியாளர்
  • பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய முதல் போட்டியாளர் கவின்
பிக்பாஸ்: 9 சீசன்..9 போட்டியாளர்கள்! அதிக லட்சங்களை அள்ளிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, தற்போது 97 நாட்கள் கடந்து இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் டைட்டில் வின்னர் யார் என்பது 100வது நாளில் தெரியவரும். சென்ற வார இறுதியில் விஜே பாரு மற்றும் கமருதீன் இருவருக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியிரினர், மறுபுறம் மக்கள் தேர்வால் சுபிக்ஷா வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் விக்ரம், சபரி, அரோரா, வினோத், சாண்ட்ரா மற்றும் திவ்யா ஆகிய ஆறு பேர் இருந்த நிலையில் நேற்று கானா வினோத் ௧௮ லட்சம் பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். 

Add Zee News as a Preferred Source

பிக் பாஸ் 9

மக்கள் மத்தியில் ரியாலிட்டி எழுச்சியாக இருக்கிறது பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை இப்போது 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த வராம் எவிச்ட்டான போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதனுடன் இவர்கள் மற்ற 6 ஹவுஸ் மேட்ஸ் இடையே பழைய விஷயங்களை பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர். 

பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் மிகவும் விறுவிறுப்பான மற்றும் உணர்ச்சிகரமான ஒரு பகுதி 'பணப்பெட்டி டாஸ்க்' (Money Box Task). இறுதிப்போட்டிக்குச் சில நாட்களுக்கு முன்னதாக, வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று கருதுபவர்களோ அல்லது பணத் தேவை இருப்பவர்களோ இந்தத் தொகையை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம். அந்த வகையில் பணப்பெட்டி டாஸ்கில், அனைத்து போட்டியாளர்களும் பணப்பெட்டியில் பணம் சேர்த்து வந்தனர். மேலும் யார் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை முடித்து தங்களால் முடிந்த அளவு டைமுக்குள் பணத்தை சேர்க்கின்றனரோ, அவர்களுக்கு தேவைப்படும் போது அந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விடலாம். இதில், அனைவரும் டைட்டில் வின்னர் ஆக தகுதி இருப்பதாக கருதிய கானா வினோத் ரூ.18 லட்சம் பணப்பெட்டியுடன் போட்டியை விட்டு வெளியேறி உள்ளார். 

அதிக லட்சங்களை அள்ளிய போட்டியாளர்

இந்நிலையில் தற்போது பல சீசன்களில் இந்தப் பணப்பெட்டி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்து வருகிறது. அந்த வகையில் எந்த சீசனில் யார் அதிக லட்சங்களை அள்ளி வெளியியுள்ளனர் என்பதை இப்போது பார்ப்போம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 1-ல் (2017) யாரும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறவில்லை. ஏனெனில் பிக் பாஸ் முதல் சீசனில் இந்த 'பணப்பெட்டி' முறை அறிமுகப்படுத்தப்படவே இல்லை. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்தத் தொடக்க சீசனில், இறுதி வாரத்தில் இருந்த போட்டியாளர்கள் அனைவருமே கோப்பையை வெல்லும் நோக்கிலேயே விளையாடினர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 2-ல் (2018) யாரும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறவில்லை. ஏனெனில் பிக் பாஸ் முதல் சீசன் போலவே இந்த சீசனிலும்'பணப்பெட்டி' முறை அறிமுகப்படுத்தப்படவே இல்லை.

பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய முதல் போட்டியாளர் கவின் ஆவார். இவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சக போட்டியாளர்களுக்காகவும் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் 5 லட்சம் ரூபாயுடன் வெளியேறினார்.

பிக் பாஸ் தமிழ்  சீசன் 4-ல் இறுதிப்போட்டி வரை சென்ற காபிரியெல்லா, கடைசி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியேறினார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் பணப்பெட்டியின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. இறுதியில் சிபி புவன சந்திரன் 12 லட்சம் ரூபாய் வந்தபோது அதை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

மிகவும் பரபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல், பூர்ணிமா ரவி 16 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல், முத்துக்குமரன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இறுதி வாரத்திற்கு முன் நடந்த பணப்பெட்டி டாஸ்க்கில் வி.ஜே.விஷால் 5 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ல், அனைவரையும் அதிர வைக்கும் வகையில் கானா வினோத் சுமார் 18 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறியுள்ளார். இவர் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குடும்பப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கோடிகளில் புரளும் இசைப்புயல் AR Rahman.. இத்தனை கோடி சொத்து மதிப்பா?

மேலும் படிக்க | யாஷின் ‘டாக்ஸிக்’ : மெலிசா பாத்திரத்தில் ருக்மணி வசந்த், ஃபர்ஸ்ட் லுக் இதோ

மேலும் படிக்க | இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள்.. லிஸ்ட்டில் தமிழ் ஹீரோ? முதல் இடம் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News