நீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை; இது எதனால் ஏற்பட்டது?...

நீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை; ஆச்சர்யத்தில் மக்கள்... அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்...

Updated: Aug 24, 2019, 08:59 AM IST
நீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை; இது எதனால் ஏற்பட்டது?...

நீல நிறத்தில் மின்னிய சென்னை கடற்கரை; ஆச்சர்யத்தில் மக்கள்... அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்...

முந்தைய வார இறுதியில் தமிழ்நாட்டின் தெற்கு சென்னை கடற்கரைகளில் காணப்பட்ட கடற்கரை அலைகள் நீல நிறத்தில் மின்னின. இதுவரை சென்னையில் இதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறாத நிலையில், முதன் முறையாக கடல், நீல நிறத்தில் ஜொலித்ததைப் பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் கண்டனர். பலரும் நீல நிறத்தில் மாறிய கடலின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்களது உற்சாகத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், இது உற்சாகப்படுத்த வேண்டிய ஒன்றல்ல, மாசுபாடு மற்றும் பிற காரணிகளால் ஏற்படும் நீரின் தரம் மோசமடைவதைக் குறிக்கிறது என்று நீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்த தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் (என்.சி.சி.ஆர்) விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சென்னையின் திருவான்மியூர், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம் கடற்கரைகளில் இந்த ‘ஒளிரும் சம்பவம்' நடந்தது. இப்படி கடல் நீல நிறத்தில் ஒளிரும் தன்மைக்கு ‘பயோலூமினிசென்ஸ்' என்று கூறப்படுகிறது. பயைலூமினிசென்ட் ஃபைட்டோபிளாங்டான் என்கிற பாசியால் இந்த மின்னும் தன்மை உருவாகிறது. கடலில் இருக்கும் அலைகள் கரையைத் தொடும்போது, இந்த பாசிகள் தங்களது வேதியல் ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும். இதனால் நீல நிறத்தில் அவை ஒளிரும். இது பரவலாக ‘கடல் ஒளிர்வு' என்றழைக்கப்படுகிறது. 

இந்த பயோலூமினிசென்ட் ஒளிர்வு, மாலத்தீவுகளிலும் கலிபோர்னியாவிலும் சென்ற ஆண்டு காணப்பட்டது. இந்நிலையில் அது சென்னையிலும் ஏற்பட்டுள்ளது. கடல் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தினால் தான் இந்த நீல நிற ஒளிர்வு ஏற்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். அது குறித்து முறையாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். தமிழகக் கடற்கரைகளில் அந்த மாற்றம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். 

ஆனால் ‘நீல நிற ஒளிர்வை' நேரில் பார்த்த மக்களோ, அது குறித்து சிலாகித்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகள் இட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரளாகி வருகிறது.