)
Weight Loss Lifestyle Tips: பாலிவுட் நடிகையான நேஹா துபியாவுக்கு தற்போது வயது 44. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இதனால் மக்களிடையே பெரிதும் பரிட்சயமான இவர் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளார்.
ஆம், சமீபத்தில் நேஹா துபியா பிரசவத்திற்கு பிறகு அவர் மேற்கொண்ட உடல் எடை குறைப்பு வழிமுறை குறித்து பேசியிருந்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் அதில் தனது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து மனம் திறந்து பேசயிருக்கிறார். மேலும், இந்த பயணத்தில் 23 கிலோ உடல் எடையை குறைக்க அவர் சந்தித்த சவால்கள் குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.
நேஹா துபியா இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆவார். அவரது உடல் எடை என்பது முன்பு அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் சிரமப்பட்டு வந்த அவர் அனைத்து வகை ஊட்டச்சத்துகளும் அடங்கிய உணவுமுறை மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சிகளை பின்பற்றியிருக்கிறது. ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், அவரது இரண்டு மகள்களை பெற்றெடுத்த பின்னர் அவர் மேற்கொண்ட உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பேசியிருக்கிறார். குழந்தைகள் பிறந்த பின்னர் தனக்கு உடல் எடை அதிகமானதாகவும், வழக்கத்தை விட சுமார் 17 கிலோ அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பின்னர் உடல் எடை அதிகமாவது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும் ஒரு சிலருக்கு பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையவும் செய்யும். அந்த வகையில், பிரசவத்திற்கு பின் அதிகரித்த உடல் எடையை தான் எப்படி குறைத்தேன் என்பது நேஹா துபியா பேசியிருக்கிறார். குறிப்பாக, ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்தான் அவர் அதிகம் கவனம் செலுத்தியதாகவும், அப்போது உடல் எடை குறைப்பில் அவர் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறினார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில்தான் கலோரி பற்றாக்குறை கொண்ட உணவுப் பழக்கவழக்கத்திற்கு தான் மாறியதாக தெரிவிக்கிறரார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "அந்த நான்கு வருடங்களுக்கு நினைக்கவே சிரிப்பாக இருக்கிறது. அப்போது எனக்கு உடல் எடை குறையவும் செய்யும், அதே நேரத்தில் அதிகரிக்கவும் செய்தது. நான் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தை பிறந்தபின்னர், எப்படி இருப்பேன் என்பது குறித்து தான் கவலைப்படவே இல்லை என்றார்.
நேஹா துபியா அவரது அன்றாட வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களை வேண்டுமென்றே செய்துள்ளார். குறிப்பாக, அவரது குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டிய பரபரப்பில் இருந்தாலும் அவரது வாழ்க்கைமுறைக்கு ஏற்ற உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை அவர் மேற்கொண்டதாக கூறுகிறார். கடினமான உணவுமுறை மூலம் அவர் உடல் எடை குறைப்பை மேற்கொள்ளவில்லை. மாறாக நிதான அணுகுமுறை காரணமாக உடல் எடையை குறைத்துள்ளார்.
இதுகுறித்து நேஹா துபியா அவரது இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவில், "உண்மை என்னவென்றால், (உடல் எடையை குறைக்க) குறுக்குவழிகள் எதுவும் இல்லை, அதற்கென எளிதான வழியும் இல்லை, அதேநேரத்தில் ராக்கெட் விடும் அளவிற்கு கடினமும் இல்லை... நிலையாக இருங்கள், கடினமாக உழையுங்கள், குறிப்பாக உங்களுக்குப் பிடிக்காத நாட்களிலும் செயல்படுங்கள்" என்றார்.
அதுமட்டுமின்றி, அவருக்கு ஓட்டப்பயிற்சி மிகவும் பிடிக்குமாம், அதேநேரத்தில் அவர் ஜிம்முக்குச் செல்வதையும் விரும்ப மாட்டாராம். அதாவது, கடினமான உடற்பயிற்சியும் செய்ய மாட்டாராம். உணவுமுறையையும் மிக எளிமையாக வைத்திருப்பாராம். இனிப்பு, வறுத்த உணவுகள், குளூட்டன் உணவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுவாராம். அதேநேரத்தில், வாழ்க்கைமுறைக்கு ஏற்ற அனைத்து ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுமுறையையே அவர் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.
"இரவு 7 மணிக்கெல்லாம் எனது குழந்தைகளுடன் நான் இரவு உணவை சாப்பிட்டுவிடுவேன். இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. காலை உணவை எனது கணவருடன் சேர்ந்து காலை 11 மணிக்கு சாப்பிடுவேன். இவை அனைத்தும் எனக்கு உதவுகிறது" என்கிறார் நேஹா துபியா. மேலும் இப்படி ஆரோக்கியமாக இருப்பதால் அது குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும், தனது நம்பிக்கையை அதிகப்படுத்தவும் உதவுகிறது என்கிறார். தனது உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியமும் பின்னிப்பிணைந்திருக்கிறது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். .
நேஹா துபியா எந்தவிதமான சிக்கலான வழிமுறைகளையும் பின்பற்றாமல், எளிமையான உணவுமுறை மற்றும் ஃபிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு நீண்டகால நலனை கருத்தில்கொண்டு செயல்பட்டு 23 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் நேஹா துபியா தனது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து தெரிவித்த கருத்துக்களாகும். இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனையை பெறவும். இதனை ஜீ தமிழ் நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ