)
Vande Bharat Ticket Booking Online On IRCTC: அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபர்கள் கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும். ஏனெனில் இனி எந்த வித பதற்றம், டென்ஷன் இல்லாமல் எளிதாக ரயில் டிக்கெட்டை புக் செய்யலாம். இந்தியன் ரயில்வே தொடர்ந்து பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி தற்போது இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்காக ஒரு புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. இந்த புதிய வசதியின் கீழ், பயணிகள் இனி ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு அதாவது புக்கிங் செய்துக் கொள்ளலாம். இந்த புதிய புதிய வசதியின் கீழ், இனி பயணிகளுக்கு ரயில் பயணம் முன்பை விட எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய வசதியின் முழுமையான விவரம்:
இந்த சிறப்பு வசதியை தெற்கு ரயில்வே தற்போது தொடங்கியுள்ளது. முன்னதாக வந்தே பாரத் ரயில் தொடக்க நிலையத்திலிருந்து புறப்படும்போது, ரயிலின் ஆன்லைன் முன்பதிவு முறை மூடப்பட்டிருந்தது. அதுமட்டமின்றி பயணத்தின் நடுவில் நிலையங்களில் காலியாக இருக்கைகள் இருந்தும், பயணிகளால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியமல் இருந்தது. ஆனால் தற்போது இந்த விதியை தெற்கு ரயில்வே முழுமையாக மாற்றியுள்ளது. அதன்படி பயணிகள் இனி கடைசி நிமிடத்தில் கூட ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்,
. எத்தனை ரயில்களில் இந்த வசதி வழங்கப்படும்?
இதனிடையே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இயங்கும் சில வந்தே பாரத் ரயில்களில் மட்டும் இந்த புதிய வசதியைத் தொடங்கியுள்ளது ரயில்வே. இந்த இடங்களில் இயங்கும் வந்தே பாரத் ரயில், ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பெற முடியும். இந்த மாற்றத்தின் காரணமாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் நல்ல வரவேற்பையும் தந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இனி வரும் நாட்களில் இந்த வசதியானது பல ரயில்களில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் 144 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரிய நகரங்களை இணைக்க இந்த ரயில்கள் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
15 நிமிடங்களுக்கு முன்பே வந்தே பாரத் ரயில் டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது என்று தெரிந்து கொள்வோம்?
முதலில், IRCTC வலைத்தளமான http://www.irctc.co.in">www.irctc.co.in க்குச் செல்லவும் அல்லது IRCTC ரயில் இணைப்பு செயலியைப் பதிவிறக்கவும்.
உங்கள் IRCTC கணக்கில் உள்நுழையவும் அல்லது புதிய கணக்கை உருவாக்கவும்.
இப்போது ஏறும் மற்றும் நீங்கள் அடைய வேண்டிய நிலையம், பயணத் தேதி போன்ற விவரங்களுடன் வந்தே பாரத் ரயிலைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே நீங்கள் காலியாக உள்ள இருக்கைகளைக் காண்பீர்கள்.
இப்போது நீங்கள் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் அல்லது சேர் காரில் பயணிக்க விரும்புகிறீர்களா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்துகிறீர்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். SMS, WhatsApp மற்றும் மின்னஞ்சலில் மின் டிக்கெட்டைப் பெறுவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ