Red Flags In Love Relationship : காதல் உறவு எதுவும் இப்போது முன்பு போல இல்லை. முன்னர் எல்லாம் வெறும் காதல் என்றால் வெறும் காதல் மட்டும்தான் இருக்கும். அது ஒன்-சைடாக இருந்தாலும் சரி, டபுள் சைடாக இருந்தாலும் சரி. ஆனால், இப்போது ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து கொண்டு, ஒரு சிலர் காதல் உணர்வோடு வேறு சில ஆட்களிடமும் பேசுவதுண்டு. இது போல, ரிலேஷன்ஷிப்பின் ஆரம்பத்தில் பல அறிகுறிகள் காண்பிக்கப்படும். அவற்றை நாம் சரியாக பார்த்து, முதலிலேயே உஷாராகவில்லை என்றால், பின்னாளில் பெரிய கஷ்டம் வந்து விடும். அப்படி, நாம் கண்ணும் கருத்துமாய் பார்க்க வேண்டிய அறிகுறிகள் என்ன தெரியுமா?
காதல் மொழி:
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான காதல் மொழி இருக்கும். உதாரணத்திற்கு, ஒருவருக்கு தொட்டு பேசுவதும், கட்டிப்பிடிப்பதும் காதல் மொழி என்றால், அவரது காதலிக்கு அது பிடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவருக்கு, ஒன்றாக நேரம் செலவிடுவதும், கண்ணோடு கண் பார்த்து பேசுவதும் காதல் மொழியாக இருக்கலாம். எனவே, இருவரின் காதல் மொழி வெவ்வேறாக இருந்தால், அல்லது ஒருவருடைய காதல் மொழிக்கு இன்னொருவர் மரியாதை கொடுக்கவில்லை என்றால், கண்டிப்பாக பிரேக்-அப் செய்து கொள்ளலாம்.
ஆரம்பத்திலேயே அதிகப்படியான காதல்:
காதல் மட்டுமல்ல, எந்த உறவை எடுத்துக்கொண்டாலும் அதில் நெருக்கமும் அன்பும் படிப்படியாகத்தான் வளரும். ஆனால், ஒருவர் ஆரம்பத்திலேயே மிகவும் கேர் செய்கிறார் அல்லது அளவற்ற அன்பை திணிக்கிறார் என்றால் உடனே உஷாராக வேண்டியது நல்லது. இது போன்றவர்கள், உங்களிடம் இருந்து ஏதேனும் எதிர்பார்ப்பார்கள். அதனால், கிஃப்ட் கொடுப்பது, உங்களை மயக்கும் வார்த்தைகளை பேசுவது போன்றவற்றை செய்வார்கள். இதை பற்றி நினைக்கும் போது, “இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே..” என உங்களுக்கே தோன்றும். எனவே, இது போன்ற ஆட்களிடம் இருந்து விலகியிருப்பது நன்று.
தனது உறவை ரகசியமாக வைத்துக்கொள்பவர்:
உங்கள் பார்ட்னர், அவரது குடும்பம், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து உங்களுடனான உறவை ரகசியமாக வைத்திருக்கிறார் என்றால், அப்போது நீங்கள் விழித்துக்கொள்வது அவசியம். அவர்கள் அவமானம், குற்ற உணர்வு போன்ற விஷயங்களால் இதனை வெளியில் கூறாமல் இருக்கலாம். அப்படி இல்லை என்றால், அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவருடன் உறவில் இருக்கலாம். இப்படி பட்டவர்களிடம் இருந்து விலகியிருந்தால், உங்களது எதிர்காலத்திற்கு நல்லது.
பேச தயாராக இல்லாமல் இருப்பது:
ஒரு சண்டை அல்லது முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும் என்கிற போது, அதனை அப்படியே நிராகரிப்பவர்களை எப்போதும் நம்ப வேண்டாம். அவர்களால், தான் என்ன நினைக்கிறோம் என்பதை கூற முடியவில்லை என்றாலோ, அர்த்தமுள்ள சில விஷயங்களை பேச அவர்கள் தயாராக இல்லை என்றாலோ, உடனே அந்த உறவில் இருந்து நீங்கள் விலக வேண்டியது நன்று.
முன்னாள் காதலருடன் தொடர்பில் இருப்பது:
ஓரு சிலர், தனது எக்ஸ் காதலர் அல்லது காதலியுடன் இன்னும் நட்புறவில் இருப்பர். கேட்டால், “நாங்கள் இப்போது வெறும் நண்பர்கள் மட்டும்தான்” என சொல்லிக்கொள்வர். ஆனால், அது பல சமயங்களில் நட்பாக மட்டும் இருக்காது. ஒரு சில பேர், அந்த முன்னாள் காதலர் அல்லது காதலியுடனான உணர்வில் இருந்து மீண்டிருக்க மாட்டார்கள். இதனால், அவருடன் எப்போதும் நட்பில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இது, உங்களது தற்போதைய உறவில் பிறகாலத்தில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | காதல் உறவை தவிர நீங்கள் கட்டி காக்க வேண்டிய 8 உறவுகள்!!
மேலும் படிக்க | காதலிக்கப் போறீங்களா... அப்போ இந்த 5 பழக்கங்களை தூக்கி வீசுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









