அழகான மயில் கேக்கை ஆர்டர் செய்த புது பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

மயில் போன்ற கேக்கை ஆர்டர் செய்தவருக்கு தொழுநோயால் பாதிக்கப்பட்ட கோழி வடிவத்தில் கேக் டெலிவரியான சம்பவம் நிகழ்ந்துள்ளது!!

Updated: Oct 15, 2019, 04:15 PM IST
அழகான மயில் கேக்கை ஆர்டர் செய்த புது பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

மயில் போன்ற கேக்கை ஆர்டர் செய்தவருக்கு தொழுநோயால் பாதிக்கப்பட்ட கோழி வடிவத்தில் கேக் டெலிவரியான சம்பவம் நிகழ்ந்துள்ளது!!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த ரெனா டேவிட் என்பவர் தான் மனைவியுடன் அவர்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடவிரும்பினார். அதற்காக அவர்கள் வீட்டின் அருகே உள்ள புகழ்பெற்ற கடையில் கேக் ஆர்டர் செய்துள்ளார்.

அவர் ஆர்டர் செய்தது இரண்டு அடுக்குகள் கொண்ட கேக், அதன் மேல் பகுதியில் மயில் தோகையுடன் இருப்பது போலவும், கோக்கிற்கு வெளியே சில கப் கோக்களைக் கொண்டு தோகை பெரியதாக நீண்ட கொண்டே செல்வது போலவும் காட்டப்பட்ட கோக்காகும். அந்த கேக்கின் விலை ரூ.23 ஆயிரம். இன்று  திங்கட்கிழமை அன்று ரெனாவுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டுக்கு கேக் வந்தது. அதை ஆசையாய் திறந்து பார்த்த ரெனா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
 
அவர் ஆர்டர் செய்த மயில் போன்ற கேக்குக்கு பதிலாக, தொழுநோய் வந்த வான்கோழி தன் இறகுகளை இழந்தது  போன்ற  தோற்றத்தில் அந்த கேக் இருந்தது. அதனால் கோபம் கொண்ட ரெனா தனது கேக்குக்கான பணத்தை திரும்ப தரவேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் கேக்கர் அதை தர மறுக்கவே ரெனா அந்தக் கேக்கை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதன்பின்னர் கேக்கர் பணத்தை திருபி கொடுத்ததாக தகவல் வெளியாகின்றன. இந்த கேக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரளாகி வருகிறது.