Buddha Purnima 2025 : ஒரு அரச குடும்பத்தில் பிறந்து, பின்பு துறவு பூண்டு இன்று அனைவராலும் மாபெரும் போதகராக பார்க்கப்படுபவர், புத்தர். இவரது இயற்பெயர் சித்தார்த்தா. சுய ஒழுக்கம் பற்றி புத்தர் போதித்த உண்மைகளை பின்பற்றுபவர்கள் பலர் உள்ளனர். மே 12ஆம் தேதியான இன்று புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அனைத்து காலத்திற்கும் ஏற்றவாறு புத்தர் எழுதி வைத்திருக்கும் சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
கருணையுடன் தீங்கு செய்யாமல் இருத்தல்:
புத்தரின் முக்கிய போதனைகளுள் ஒன்று கருணையுடன் இருப்பதும், யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதும் ஆகும். புத்தரின் இந்த போதனையானது, அனைத்து காலத்திற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் பூச்சிக்கு கூட எந்த தீங்கும் வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கண்டிப்பாக நல்வாழ்வை பெறுவர் என கூறப்படுகிறது.
நேர்மை:
வாழ்வில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது, புத்தரின் முக்கிய போதனைகளுள் ஒன்றாகும். இவர், பொய்க் பேசுவது, வதந்திகள் பேசுவதற்கு எதிரானவர். இவரது இந்த போதனை, இக்காலத்திற்கும் ஏற்றதாக இருக்கும். இந்த காலத்தில் எக்கச்சக்க பொய் தகவல்களும் செய்திகளும் பரவுகின்றன. உண்மையை பேசுபவர்களும், நேர்மையாக இருப்பவர்களும் வெகு சொர்ப்பமாகவே இருக்கின்றனர். எனவே, அனைவரும் புத்தரின் இந்த போதனையை கடைப்பிடித்தால் உலகம் கண்டிப்பாக இன்னும் மேம்பட்ட இடமாக மாறிவிடும்.
விதியை எழுதுவது:
இந்த காலத்தில், நாம் இலக்கை நோக்கி ஓடுவதும், நமது விதியை நாமே எழுதுவதும் மிகவும் சகஜம். இதனை அந்த காலத்திலேயே போதித்து விட்டு சென்றிருக்கிறார் புத்தர். இவர் கூறுவது என்னவென்றால், நமது செய்கைகள், பிடித்தங்கள் மூலமாக நாமே நமக்கான விதியை எழுதுவதாக தெரிவிக்கிறார். யாருக்கும் துரோகம் செய்யாமல், ஏமாற்றாமல், நியாயமான முறையில் நடந்து ஜெயித்தால், கண்டிப்பாக நம்மால் நமக்கு நல்ல விதியை எழுதிக்கொள்ள முடியுமென கூறுகிறார்.
வாழ்க்கையில் கவனத்துடன் இருப்பது:
நாம், நமது வாழ்க்கையில் கவனத்துடன் இருக்க வேண்டுமாம். இதை செய்ய, நாம் பின்பற்ற வேண்டியதெல்லாம் எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ளாமல், கடந்த காலத்தை நினைத்து வறுந்தாமல், நிகழ்காலத்தில் வாழ வேண்டும். இதை, இந்த காலத்தில் உள்ள இளைஞர்கள் தற்போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். காரணம், உலகம் மிகவும் பிசியானதாக மாறிவிட்டது. அனைவரும் எதையாவது ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். இதனால், நிதானமாக செயல்படுவது என்பதே மிகவும் குறைந்து விட்டது. எனவே, புத்தரின் போதனையை பின்பற்றி கண்டிப்பாக நாம் வாழ்வில் கவனத்துடன் இருக்க வேண்டியது என்பது அவசியம் ஆகும்.
அனைவரும் சமம்:
இவ்வுலகில், மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இடமே இல்லை. ஆனால், ஜாதி, மதம், பாலினம் உள்ளிட்ட பல்வேறு பிரிவினைகள் கூடாது என்கிறார், புத்தர். இது போன்ற பிரிவினைகள் நூற்றாண்டுகளையும், புத்தர் வாழ்ந்த காலத்தையும் திரும்பி பார்த்தால் அதிகமாக இருக்கும். இப்போது அவை குறைந்துள்ளதே அன்றி, மொத்தமாக அழியவில்லை. எனவே, மக்கள் இந்த போதனையை பின்பற்றினால், அனைவரும் சமத்துவத்துடன் இன்புற்று இருக்கலாம்.
மேலும் படிக்க | Buddha Purnima: இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா
மேலும் படிக்க | வீட்டில் சிரிக்கும் புத்தர் சிலைவைத்தால் செல்வம் பெருகுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ