)
Diwali Gift To Ration Card Holders: இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரப் போகிறது. இதனை முன்னிட்டு பல மாநில அரசுகள் அம்மாநில மக்களுக்காக பல வித திட்டங்களை அறிவித்து வருகின்றன. குறிப்பாக ரேஷன் கார்ட்தாரர்களுக்கு தற்போது ஜாக்பாட் காலமாக இருக்கக்கூடும். ஏனெல் இந்த நேரத்தில் பல சலுகைகளும் பல பரிசுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்னும் 18 நாட்களில் தீபாவளி பண்டிகை ஏற்படயுள்ள நிலையில் ரேஷன் கடையில் விற்பனையாகும் பாமாயில், துவரம் பருப்பை வாங்க குடும்ப அட்டைதாரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரேஷன் கார்டு என்பது ஒரு அடையாள ஆவணம் ஆகும். இதன் மூலம் ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுகள் குறைந்த விலையில் அரசு வழங்குகிறது. ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு வழங்குகிறது. தற்போது தமிழக அரசு பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையையும் இதன் மூலம் வழங்கி வருகிறது. உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுடன் முக்கியமான செய்திகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அந்தவகையில் ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் சமீபத்திய அப்டேட்கள் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம் ஆகும், இதனால் அவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ரேஷன் பொருட்களையும் சரியான நேரத்தில் பெற முடியும்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு பொதுமக்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. பண்டிகை காலத்தில் மக்கள் எவ்வித தடையுமின்றி தேவையான அத்தியாவசிய பொருட்களை பெறுவதை உறுதி செய்யும் வகையில், ரேஷன் பொருட்களை வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் ஒரே கட்டமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 2,27,04,260 குடும்பங்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதா மாதம் மானிய விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகை காலத்தில் பச்சரிசி மற்றும் பாமாயிலின் தேவை அதிகரிக்கும் என்பதாலும், இந்த பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதாலும், அவர்கள் முன்கூட்டியே பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தருவதே அரசின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் தீர்மானத்தின் விளைவாக, தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் வர்த்தகக் கழகம் (TNCSC - Tamil Nadu Civil Supplies Corporation) தங்கள் கிடங்குகளில் இருந்து 100 சதவீத ரேஷன் பொருட்களையும் விரைவாக விநியோகம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தச் செயல்பாட்டின் முக்கிய நோக்கம், பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தவுமே ஆகும். இதற்கான உத்தரவை தமிழக அரசு உணவு மற்றும் கூட்டுறவுத் துறைகளுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது.
இந்நிலையில் தான் மக்கள் தீபாவளி பண்டிகையை எந்தவித இடையூறும் இன்றி, மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ