61 வயதிலும் அம்சமாக இருக்கும் நீடா அம்பானி! தினமும் 1 மணி நேரம் ‘இதை’ செய்வாராம்..

Nita Ambani Fitness Journey : இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களும் ஒருவரான நீடா அம்பானி, தனது இளமைக்கான ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 10, 2025, 04:10 PM IST
  • 61 வயதில் ஃபிட்டாக இருக்கும் நீடா அம்பானி..
  • காரணம் இதுதான்..
  • என்ன செய்கிறார் தெரியுமா?
61 வயதிலும் அம்சமாக இருக்கும் நீடா அம்பானி! தினமும் 1 மணி நேரம் ‘இதை’ செய்வாராம்..

Nita Ambani Fitness Journey : சமீபத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில், நீடா அம்பானி தனது இளமை மற்றும் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கான ரகசியம் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

உலகளவில் பிரபலமான பெண் தொழிலதிபர்களுள் ஒருவர் நீடா அம்பானி. இவர், தனது மகன் ஆனந்த் அம்பானி உடல் எடையை குறைக்கும் போது அவருடன் சேர்ந்து எடை குறைந்தார். நீடா அம்பானிக்கு, தற்போது 61 வயது ஆகிறது. ஆனால், அவரை பார்த்தால் அவ்வளவு வயதானவர் போலவே தெரியாது. இதற்கு காரணம் அவர் பின்பற்றும் டயட்டும், தினமும் செய்யும் உடற்பயிற்சிகளும்தான். சமீபத்தில் மார்ச் 8ஆம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளையொட்டி அவர் தனது ஆரோக்கியத்தையும் இளமையையும் பார்த்துக்கொள்ள என்ன செய்கிறார் என்பது குறித்த சீக்ரெட்டை அவரே ஒரு வீடியோ மூலம் பகிர்ந்தார். அது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

ஃபிட்டாக இருக்கும் நீடா அம்பானி:

பெண்கள் எப்போதும் பிறரை தங்கள் வாழ்க்கையில் முதன்மை படுத்துவதாகவும், அவர்கள் முதலில் தங்களை பார்த்துக்கொள்வது நல்லது என்றும் கூறினார். பெண்கள் தங்களது உடலை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் இவர், குறிப்பாக 50-60 வயதில் இருப்பவர்கள் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். 30 வயதுக்கு பின்னர் பெண்கள் 3-8 தசை வளர்ச்சிய 10 ஆண்டுக்கு ஒரு முறை இழக்கின்றனர் என்று கூறும் நீடா, இதனால் மெட்டபாலிசம் குறைந்து உடலின் பலமும் குறையும் என்கிறார்.

‘இந்த’ உடற்பயிற்சி ரொம்ப பிடிக்கும்..

நீடா அம்பானிக்கு கால்களுக்கான உடற்பயிற்சி என்றால் ரொம்ப பிடிக்குமாம். இவர், ஒரு பரதநாட்டிய கலைஞர். 6 வயதில் இருந்தே பரதத்திற்கு பயின்று நடனமாடி வருகிறார். இதனால் இவருக்கு வலிமையான கால்கள் உள்ளன. இதனால் இவரது மேல் உடலும் கால்களும் நளினமாக இருக்குமாம். 

நீடா அம்பானி, வாரத்திற்கு 5-6 நாட்கள் வரை உடற்பயிற்சி செய்வாராம். இது அவரது உடலை ஃப்ளெக்ஸிபில் ஆக வைத்துக்கொள்ள உதவுகிறதாம். தினமும் யோகா செய்வதும் இவரது வழக்கங்களுள் ஒன்று. ஒரு சில நாட்களில் இவர் நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்கிறார். அதே போல ஒரு மணி நேரம் நடனமாடுவதும் இவரது ஃபேவரட் ஆக்டிவிட்டிக்களுள் ஒன்றாம். அப்படி இல்லை என்றால் ஒரு நாளைக்கு 5,000 முதல் 7,000 ஸ்டெப்ஸ் வரை நடப்பாராம்.

நீடா அம்பானியின் டயட்:

நீடா அம்பானி, சைவம் சாப்பிடுபவர். இதனால், இவரது டயட் பாலன்ஸ்ட் ஆக இருக்குமாம். அதே போல, தனது டயட் பட்டியலில் இயற்கை உணவுகளைத்தான் இவர் அதிகமாக சேர்த்துக்கொள்வாராம். புரத சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது என்று கூறும் இவர், சர்க்கரை மற்றும் அது சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்வதே இல்லையாம்.

உடற்பயிற்சியில் அமைதி..

நீடா அம்பானிக்கு உடற்பயிற்சி செய்யும் போது ஒரு வித நிம்மதி கிடைக்கிறதாம். இது, தனது மனதை நாள் முழுவதும் பாசிடிவாக வைத்திருக்க உதவுவதாக அவர் கூறுகிறார். இதனால் எண்டார்ஃபின்ஸ் எனப்படும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் வெளியேறி நேர்மறை எண்ணங்களை வளர்க்குமாம். இதனால் மன அழுத்தம் குறைவதோடு, அதிக ஸ்டாமினாவோடு நம்மால் இருக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார். மேலும், தன்னால் 61 வயதில் இதையெல்லாம் செய்ய முடியும் என்றால், உங்களால் இளம் வயதில் இதை செய்ய முடியும் அல்லவா? என்றும் கேட்கிறார்.

மேலும் படிக்க | 18 கிலோ குறைந்த நீடா அம்பானி-உதவிய டிரைனர் கொடுத்த 3 முக்கிய வெயிட் லாஸ் டிப்ஸ்!

மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News