நவராத்திரி, தீபாவளி என அக்டோபர் மாதம் பண்டிகை மாதமாக கலைகட்டியுள்ள நிலையில் வரும் தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் விதமாக Honda நிறுவனம் அதிரடி சலுகையினை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பண்டிகை நாட்கள் என்று வந்துவிட்டால், பாதிவிலை விற்பனை, பறிமாற்று விற்பனை, கேஸ் பேக் விற்பனை என சலுகைகள் பல அறிவிக்கப்பட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் உற்பத்தியாளர்கள் குதித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல வாகன உற்பத்தி நிறுவனமாக Honda நிறுவனம்., ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் எனப்படும் 'Buy 1 Get 1' விற்பனையினை துவங்கியுள்ளது.


Honda நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களில் மிகவும் பிரபலமானது Honda Activa. வரும் தீபாவளி 2018 பண்டிகையினை முன்னிட்டு, இந்த Honda Activa வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Rs 9.11 லட்சம் மதிப்பிலான Honda Amaze கார் வரை பம்பர் பரிசு அளிக்க Honda நிறுவனம் முன்வந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் Honda Brio மற்றும் LG LED TV, சாம்சங் ஸ்மார்போன் மேலும் பல கவர்சிகரமான பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.



தற்போது தொடர் உயர்வு கண்டுவரும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் காரணமாக வாகனங்கள் விற்பனை கனிசமாக குறைந்துள்ளது. இதனால் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலவும் பெரும் லாபத்தினை இழந்து வருகின்றது. இதனை சமாளிக்க விற்பனையினை அதிகரித்தே ஆகவேண்டும் என்ற இக்கட்டான கட்டாயத்திற்கு இந்நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.


இந்நிலையில் வரும் பண்டிகைகளை குறிவைத்து தங்களது விற்பனையினை அதிகரிக்க இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் இந்த Honda Activa சலுகை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த பம்பர் பரிசுகளானது வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 30-க்குள் Honda Activa வாங்குபவர்களுக்கு மட்டமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.