Petrol Rs 2 Per Liter In Venezuela : தினசரி அன்றாட வேலைகளை பார்க்க, வேலைக்கு போக, பிற இடங்களுக்கு செல்ல என அனைத்திற்கும் நமக்கு வண்டி தேவைப்படுவதாக இருக்கிறது. நம் ஊரில் பெரும்பாலான வண்டிகள், பெட்ரோலால் இயங்குபவையாக இருக்கின்றன. ஆனால், தினசரி அந்த பெட்ரோலின் விலையை பார்க்கும் போது, தலையே சுற்றுவது போல இருக்கும். ஆனால், ஒரு இடத்தில் ரூ.2க்கு பெட்ரோல் வாங்கலாம் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?
இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை!
இந்தியாவை பொருத்தவரை, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ.100 ஆக இருக்கிறது. இந்த விலை, நாளுக்கு நாள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்கும். இந்தியாவில், கச்சா எண்ணெய் வளம் கிடையாது. இதனால், அதனை இறக்குமதி செய்துதான் பெட்ரோல் தயாரிக்க வேண்டியதாக இருக்கிறது. இதனால்தான், இதன் விலையும் அதிகமாக இருக்கிறது.
இந்திய ரூபாய் மதிப்பில், ரூ.2க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விற்பனை செய்யும் நாடு எது தெரியுமா? வெனிசுலாதான். அங்கு, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 0.02 டாலர்களாக இருக்கிறது. இது, எண்ணெய் வளம் மிக்க நாடுகளாக கருதப்படும் அரபு நாடுகளில் விற்கப்படும் பெட்ரோல் விலையை விட ரொம்பவும் குறைவாகும்.
வெனிசுலா:
தெற்கு அமெரிக்காவில் அமைந்திருக்கும் வெனிசுலா நாடு, கடந்த சில நாடுகளாக தலைப்பு செய்தியில் பெரிய விஷயமாக இருக்கிறது. இங்கு, எண்ணெய் வளங்கள் கொட்டிக்கிடப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, இங்கு மக்கள் தொகையும் மிகவும் குறைவு. இதனால், பெட்ரோல் விலையும் குறைவாகவே இருக்கிறது.
வெனிசுலா மீது தற்போது பொருளாதார போர் நிலவுகிறது. இங்கு எண்ணெய் விலை வீழ்ச்சி, சர்வதேச தடைகள் உள்ளிட்டவற்றையும் மக்கள் எதிர்கொள்கின்றனர். இங்கு மொத்தம், சுமார் 29 மில்லியன் மக்களே வாழ்கின்றனர். அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு இங்கு 32 பேர்தான் வாழ்கின்றனர்.
எண்ணெய் வளம்:
வெணிசுலா நாட்டில் இருக்கும் எண்ணெய் வளம் என்பது, அந்நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல், உலக அரசியலை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான கருவியாகவும் எண்ணெய் வளமானது இருக்கிறது. சமீபத்திய நிலவரத்தின் படி, வெனிசுலாவிடம் சுமார் 3,030 எண்ணெய் பேரல்கள் உள்ளதாம். இதன் சந்தை மதிப்பு மட்டும் சுமார் ரூ.17.3 ட்ரில்லியன் டாலர்கல் இருக்கும் என கூறப்படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பின் படி, சுமார் ரூ.1,400 லட்சம் கோடி ஆகும்.
எண்ணெய் உற்பத்தி குறைவு:
வெனிசுலா நாட்டில் அதிக எண்ணெய் வளம் இருந்தாலும், அங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்கள் என்னவோ மிகவும் குறைவாகவே இருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளைக்கு இங்கிருந்து 35 லட்சம் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது நாள் ஒன்றுக்கு 10 லட்சம்ன் பேரல்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது, உலக எண்ணெய் உற்பத்தியில் சுமார் 1% மட்டுமே வெனிசுலாவின் உற்பத்தியானது இருக்கிறது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டுக்கு முதலில் இருந்த பெயர்..என்ன தெரியுமா? அறிஞர் அண்ணாவால் நடந்த மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









