)
Job Loss Insurance: இன்றைய காலகட்டத்தில் பணிநீக்கங்கள் குறித்த செய்திகள் தினமும் வந்து கொண்டிருகின்றன. சில நேரங்களில் தொடக்க நிறுவனத்திலிருந்து பெரிய அளவில் பணநீக்கங்கள் செய்யப்படுகின்றன. சில நேரங்களில் ஒரு பெரிய ஐடி நிறுவனத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை நீக்கும் செய்திகளை நாம் கேட்கிறோம். இதுபோன்ற சூழலில், வேலையை இழக்க நேரிடும் என்ற பயம் பலரின் மனதில் குடியேறியுள்ளது. வேலை இழப்பு காப்பீடு பற்றி மீண்டும் அதிகம் பேசப்படுவதற்கான காரணம் இதுதான்.
வேலை இழப்பு காப்பீடு என்றால் என்ன?
வேலை இழப்பு ஏற்பட்டால் சில மாதங்களுக்கு நிதி உதவி வழங்கும் காப்பீடு. நீங்கள் திடீரென்று உங்கள் வேலையை இழந்தால், இந்த பாலிசியின் உதவியுடன் வாடகை, EMI, பில்கள் அல்லது மருத்துவம் போன்ற முக்கியமான செலவுகளை நீங்கள் நிர்வகிக்கலாம். பல நிறுவனங்கள் இந்த காப்பீட்டு பாலிசி காப்பீட்டை வழங்குகின்றன.
வேலை இழப்பு காப்பீடு குறித்த விதிகள்
வேலை இழப்பு காப்பீட்டின் பலன் முறையான துறையில் பணிபுரியும் சம்பளதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது, நீங்கள் ஒரு பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தில், அது ஒரு MNC அல்லது ஒரு தொடக்க நிறுவனமாக இருந்தாலும், அதற்கு நீங்கள் தகுதியுடையவர்.
வேலை இழப்பு காப்பீடு எவ்வாறு செயல்படுகிறது?
வேலை இழப்பு காப்பீட்டில், நீங்கள் வேலையை இழந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையைப் பெறுவீர்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு. சில பாலிசிகளில், இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் 10,000 வரை இருக்கும். சிலவற்றில் இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கிறது. உதாரணமாக, முதல் மாதத்தில் 5,000, இரண்டாவது மாதத்தில் 10,000 மற்றும் மூன்றாவது மாதத்தில் 15,000 வரை என்ற அளவில் இருக்கும். சம்பளத்தில் 70% வரை பெறுவதற்கான விருப்பமும் உள்ளது, ஆனால் இது பாசிஸியின் காத்திருப்பு காலம் மற்றும் காப்பீட்டு வரம்பு ஆகியவற்றை பொறுத்தது.
காப்பீட்டிற்கு எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்?
பிரீமியம் உங்கள் சம்பளம், சுயவிவரம் மற்றும் காப்பீட்டு காலத்தைப் பொறுத்தது. இந்தக் பாலிசி குழு காப்பீடு அல்லது வங்கி இணைப்புடன் எடுக்கப்பட்டால், பாலிஸி கொஞ்சம் குறைவாக இருக்கும்.
உங்களுக்கு எப்போது பலன் கிடைக்கும்?
நீங்கள் திடீரென வேலையை இழந்தால், அதாவது நீங்களே வேலையை விட்டு விலகாத போது, இந்த காப்பீட்டின் பலன் கிடைக்கும். உங்கள் நிறுவனம் செலவுக் குறைப்பு, ஆட்குறைப்பு அல்லது ஏதேனும் அரசாங்க உத்தரவின் காரணமாக நிறுவனம் மூடப்பட்டிருந்தால், அத்தகைய சூழ்நிலையில் இந்த காப்பீடு கை கொடுக்கும். இப்போதெல்லாம், AI தொழில்நுட்பம் காரணமாக வேலை இழப்பு வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. மேலும் அவை இந்த காப்பீட்டின் கீழ் வரலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
உங்களுக்கு எப்போது பலன் கிடைக்காது?
நீங்களாகவே வேலையை விட்டு வெளியேறியிருந்தால், தகுதிகாண் காலத்தில் இருந்திருந்தால், நீங்களே முன்கூட்டியே ஓய்வு பெற்றிருந்தால், கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது செயல்திறன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படலாம். பல நிறுவனங்கள் ஊழியர்களிடம் பணிநீக்கத்திற்குப் பிறகு சில மாத சம்பளத்தை வழங்கி 'விருப்ப ஓய்வு' எடுக்கச் சொல்கின்றன. அதாவது இதில் நீங்களே வேலையை விட்டுவிட்டீர்கள் என்று தான் பொருள் படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டீர்கள் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் கிளைய்ம் பெறுவது கடினமாக இருக்கலாம்.
நீங்கள் வேலை இழப்புக்கான காப்பீட்டை எடுக்க விரும்பவில்லை என்றால், குறைந்தது 6 மாதங்களுக்கு அவசரகால நிதியை வைத்திருங்கள். இது தவிர, கடன் EMI உடன் இணைக்கப்பட்ட காப்பீடும் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம், இதில் வேலை இழப்பு ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் உங்கள் EMI தொகையை செலுத்தும். வேலை இழப்பு காப்பீடு என்பது தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானதாக மாறிவிட்டது. குறிப்பாக பணிநீக்கங்கள் அதிகம் இருக்கும் ஒரு துறை அல்லது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ