நாய் கடித்த மாட்டின் பாலை குடித்தால் ரேபிஸ் நோய் வரும்..! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Rabies : நாய் கடித்த மாட்டின் பாலை குடிப்பதால் ரேபிஸ் நோய் பரவ வாய்ப்பு உள்ளதா? ரேபிஸ் நோய் பற்றிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் தடுப்பூசி குறித்த தகவல்கள்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 27, 2025, 03:16 PM IST
  • மாட்டு பால் மூலம் பரவும் ரேபீஸ் நோய்
  • மாட்டு பால் பச்சையாக குடிப்பது ஆபத்தா?
  • பால் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது
நாய் கடித்த மாட்டின் பாலை குடித்தால் ரேபிஸ் நோய் வரும்..! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Rabies Prevention : நாய் கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது ஒரு கொடிய நோய், இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் மீண்டும் குணப்படுத்தவே முடியாது. அதனால் முன்னெச்சரிக்கையாகவும், உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதும் அவசியம். இந்த சூழலில் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாய் கடி மூலம் ரேபிஸ் தொற்றுக்குள்ளான மாட்டின் பாலைக் குடித்தால் குடிப்பவருக்கும் ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்படும் என இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. அண்மையில், கிரேட்டர் நொய்டாவில் ஒரு பெண் ரேபிஸ் நோயால் இறந்துள்ளார். அவர் சில நாட்களுக்கு முன் ஒரு மாட்டின் பால் குடித்ததாக கூறப்படுகிறது. அந்த மாட்டிற்கு ரேபிஸ் நோய் இருந்ததாகவும், ரேபிஸ் நோய் உள்ள நாய் அந்த மாட்டை கடித்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

பால் மூலம் ரேபிஸ் பரவுமா?

ICAR (இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்)-ன் அறிக்கைப்படி, ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளின் பாலில் வைரஸ் இருக்கலாம். அந்த பாலை கொதிக்கவைக்காமல் குடித்தால், ரேபிஸ் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, எப்போதும் பாலை நன்றாக கொதிக்க வைத்த பிறகே குடிக்க வேண்டும்.

ரேபிஸ் நோயின் அபாயங்கள்:

இந்த வைரஸ் மூளையைத் தாக்கி, 100% கொடியது. WHO-யின் கூற்றுப்படி, நாய்கடி மூலம் 99% ரேபிஸ் பரவுகிறது. உமிழ்நீர், கடி அல்லது சிராய்ப்பு மூலம் வைரஸ் பரவலாம்.

ரேபிஸ் அறிகுறிகள்:

- பனிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் (காய்ச்சல், தலைவலி)
- குமட்டல், வாந்தி
-  பயம், குழப்பம்
- விழுங்குவதில் சிரமம்
- அதிக உமிழ்நீர்
- தூக்கமின்மை

ரேபிஸ் தடுப்பு முறைகள்:

- விலங்கு கடித்தால், உடனே மருத்துவரை அணுகவும்.
- ரேபிஸ் தடுப்பூசி (Vaccine) காலத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- வீட்டு விலங்குகளுக்கு (நாய், பூனை, மாடு) ரேபிஸ் தடுப்பூசி போடவும்.

எந்த விலங்குகளிடமிருந்து ரேபிஸ் பரவலாம்?

நாய், பூனை, மாடு, ஆடு, குதிரை, நரி, வெளவால், குரங்கு

எச்சரிக்கை: பால் குடிக்கும்போது கொதிக்க வைத்த பாலை மட்டுமே பயன்படுத்துங்கள். ரேபிஸ் சந்தேகம் இருந்தால் உடனே மருத்துவ உதவி பெறவும். ரேபிஸ் நோய் முன்கூட்டியே தடுப்பதே சிறந்தது

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க... நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சூப்பர் பழங்கள்

மேலும் படிக்க | கல்லீரல் முதல் கணையம் வரை... எந்த இடத்தில் வலித்தால் என்ன பிரச்சனை? அறிகுறிகள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News