தண்ணீர் பாட்டிலை தினமும் கழுவலாமா? அப்படி செய்தால் உடலுக்கு என்ன ஆகும்?

Can You Wash Your Water Bottle Daily : நாம் அனைவருமே குடிநீர் பாட்டிலை உபயோகிப்போம். அவற்றை எத்தனை நாளுக்கு ஒரு முறை கழுவ வேண்டும் தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 27, 2025, 03:36 PM IST
  • தண்ணீர் பாட்டிலை தினமும் சுத்தப்படுத்தலாமா?
  • அப்படி செய்யவில்லை என்றால் என்னவாகும்?
  • ஆய்வுகள் சொல்வது..
தண்ணீர் பாட்டிலை தினமும் கழுவலாமா? அப்படி செய்தால் உடலுக்கு என்ன ஆகும்?

Can You Wash Your Water Bottle Daily : நம் அனைவருக்குமே எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை கூடவே எடுத்துச் செல்லும் பழக்கம் இருக்கும். இது பல சமயங்களில் நமக்கு மட்டுமின்றி நம்முடன் இருப்பவர்களுக்கும் கை கொடுக்கும். பலர் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்திருப்போம், ஒரு சிலர் கனமான இரும்பு பாட்டில்களை வைத்திருக்கும். எதுவாக இருப்பினும் அதை சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம். 

Add Zee News as a Preferred Source

தண்ணீர் பாட்டிலில் பாக்டீரியா..!

நாம் ஒவ்வொரு முறை தண்ணீர் பாட்டில் இருந்து தண்ணீர் குடித்து விட்டு வைக்கும் போதும் அதில் சில பாக்டீரியாக்களை விட்டு செல்கிறோம். இதனால் நாள் முழுவதும் அந்த பாட்டில் அப்படியே கழுவப்படாமல் இருக்கும்போது அந்த பாக்டீரியாக்கள் லட்சக்கணக்கில் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் உங்களுக்கு நோய் பாதிப்புகளை படவும் வாய்ப்பு இருக்கிறதாம். இந்த பாக்டீரியாக்களில் இருந்து தப்பிக்க, நாம் தண்ணீர் குடிக்கும் பாட்டிலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நல்லது.

எப்போது சுத்தம் செய்ய வேண்டும்?

நாம் தினந்தோறும் உபயோகிக்கும் எந்த வாட்டர் பாட்டிலாக இருந்தாலும் அதனை கண்டிப்பாக தினம்தோறும் கழுவ வேண்டும் என்று சில விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பாக்டீரியாக்கள் பரவாமல் தடுப்பதோடு, அந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து நாற்றம் வராமலும் காப்பாற்றலாம்.

ஏன் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்? 

தினந்தோறும் உபயோகித்தல்: தினமும் ஒரே பாட்டிலை உபயோகிக்கும் போதும், மீண்டும் மீண்டும் தண்ணீர் பிடித்து அதில் இருந்து தண்ணீர் குடிக்கும் போதும் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். 

சர்க்கரை பானங்கள்: நாம் தண்ணீரை மட்டும் பருகுவதில்லை. அதை தாண்டி பிறப்பொருட்களை சாப்பிடுகிறோம், சர்க்கரை சேர்த்த பானங்களை அருந்துகிறோம். இவை அந்த பாக்டீரியாக்கள் வளர இன்னும் உந்துதல் தரும் விஷயமாக இருக்கலாம். 

வெப்பமான சூழ்நிலையில் இருத்தல்:

மாசு படிந்த அல்லது வெப்பமான சூழ்நிலையை இருக்கும் வாட்டர் பாட்டில்களை தினம்தோறும் கழுவ வேண்டும். சிலர் ஒர்க் அவுட் செய்த பின்னர் தண்ணீர் குடித்தல், வெளியில் வேலை செய்துவிட்டு வந்த பிறகு தண்ணீர் குடித்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவர். இதனால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அதிகம் ஆகலாம். எனவே நீங்கள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலை தினந்தோறும் அதற்கு ஏற்ற சோப் போட்டு வாஷ் செய்து உபயோகிக்கலாம். 

எந்த பாட்டில் சிறந்தது?

பலர், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களையும் சிலர் இரும்பு வாட்டர் பாட்டில்களையும் உபயோகிப்போம். இதில் எது சிறந்தது? பல ஆய்வு முடிவுகளின் படி இரும்பு வாட்டர் பாட்டில்கள் தான் சரியானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காரணம், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை விட இவை நீண்ட காலத்திற்கு உழைப்பவையாக இருக்கும். பல தரமற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் இரும்பு பாட்டில் நல்லது. 

பிளாஸ்டிக்கால் நமது சுகாதாரம் மாசடைகிறது என்பதை இங்கு தனியாக சொல்லி தெரியப்படுத்த வேண்டியதில்லை. இரும்பு தண்ணீர் பாட்டில்களை உபயோகிப்பதனால், கண்டிப்பாக நாம் இந்த மாசை கட்டுப்படுத்தலாம். அது மட்டுமல்ல, நாம் சூடாக தண்ணீர் ஊற்றி வைத்திருந்தாலும், ஜில்லென தண்ணீர் ஊற்றி வைத்திருந்தாலும், அதனை அந்த வாட்டர் பாட்டில்கள் அப்படியே காத்து வைத்துக்கொள்ளும்.

மேலும் படிக்க | ஷ்ஷ்..‘இந்த’ 7 விஷயத்தை எப்போதும் ரகசியமா வெச்சுக்கணும்! இல்லன்னா பிரச்சனை வரும்..

மேலும் படிக்க | பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News