IRCTC தட்கல் டிக்கெட் புக்கிங் விதிகளில் மாற்றம்... லேட் பண்ணாம இன்னைக்கே ஆதாரை இணைச்சுடுங்க

ஆதார் அங்கீகாரம் தொடர்பான தட்கல் டிக்கெட் முன்பதிவு விதி 2025 ஜூன் மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படலாம். ஐஆர்சிடிசி போர்டல் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 10, 2025, 07:15 PM IST
  • மின்னணு-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ள இந்திய ரயில்வே
  • தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது ஆதார் மூலம் அங்கீகரிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது.
  • போலி முன்பதிவுகளைத் தடுக்க இந்திய ரயில்வே எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை
IRCTC தட்கல் டிக்கெட் புக்கிங் விதிகளில் மாற்றம்... லேட் பண்ணாம இன்னைக்கே ஆதாரை இணைச்சுடுங்க

IRCTC: ஐஆர்சிடிசி செயலியில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எளிதல்ல, ஏனெனில் சாளரம் திறந்த அரை மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இதற்கு மிகப்பெரிய காரணம் ஏராளமான போலி முன்பதிவுகள் இருப்பதுதான். இப்போது போலி முன்பதிவுகளைத் தடுக்கவும், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்போது தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது ஆதார் மூலம் அங்கீகரிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது. 

Add Zee News as a Preferred Source

ஆதார் அங்கீகாரம் தொடர்பான தட்கல் டிக்கெட் முன்பதிவு விதி 2025 ஜூன் மாத இறுதிக்குள் அமல்படுத்தப்படலாம். ஐஆர்சிடிசி போர்டல் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

மின்னணு-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ள இந்திய ரயில்வே

டிக்கெட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், போலி முன்பதிவுகளைத் தடுக்கவும் தட்கல் டிக்கெட் முன்பதிவில் மின்னணு-ஆதார் அங்கீகாரத்தை (e-Aadhaar Authentication ) கட்டாயமாக்க இந்திய ரயில்வே தயாராக உள்ளது. இந்த புதிய விதி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜூன் 3, 2025 அன்று தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்படும். இதனால் சாமானிய மக்களும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற முடியும் என்று கூறினார்.

ஆதார் அங்கீகாரம் தொடர்பான புதிய விதி

IRCTC தட்கல் டிக்கெட்டுகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது, மேலும் சிலர் அதில் டிக்கெட்டுகளை தவறான வழியில் முன்பதிவு செய்கிறார்கள். இதன் காரணமாக, சாதாரண பயணிகளால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற இயலாத நிலை உள்ளது. ஆதார் சரிபார்ப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்பவர் உண்மையானவர் என்பதையும், தவறான ஐடி மூலம் அடிக்கடி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நீங்கள் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய திட்டமிட்டால், இப்போது அதை ஆதாருடன் இணைத்த பின்னரே டிக்கெட்டை எளிதாக புக் செய்யும் வசதியை பெறுவீர்கள். முன்பதிவு செய்யும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, அனைத்து பயணிகளும் தங்கள் ஆதார் எண்ணை IRCTC கணக்கில் முன்கூட்டியே இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆதார் அங்கீகாரம் என்றால் என்ன?

ஆதார் அங்கீகாரம் (Aadhaar Authentication) என்பது உங்கள் ஆதார் எண் மற்றும் தொடர்புடைய தகவல்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம் அல்லது பயோமெட்ரிக் விவரங்கள் போன்றவை) UIDAI தளத்தில் சமர்ப்பிக்கும்போது, ​​கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியானதா இல்லையா என்பதைச் சரிபார்க்கும். இது டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நபர் உண்மையானவர் என்பதை உறுதி செய்கிறது.

IRCTC போர்ட்டலில் இருந்து தட்கல் டிக்கெட்டை எவ்வாறு முன்பதிவு செய்வது?

1. IRCTC வலைத்தளத்தில் (irctc.co.in) உள்நுழையவும்.

2. பயண தேதி, நிலையம் (புறப்படும் இடம் - சேரும் இடம்) மற்றும் வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

3. Quota-வில் தட்கல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

4. ரயில் பட்டியலில் இருந்து பயணிக்கும் ரயில் மற்றும் வகுப்பையும் தேர்ந்தெடுக்கவும்.

5. Book Now பொத்தானைக் கிளிக் செய்யவும்.

6. பயணிகளின் பெயர், வயது, பாலினம், இருக்கை விருப்பம் மற்றும் மொபைல் எண்ணை நிரப்பவும்.

7. கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Continue என்பதைக் கிளிக் செய்யவும்.

8. கட்டணம், வரி மற்றும் இருக்கை கிடைக்கும் தன்மை போன்ற விபரங்கள் திரையில் தோன்றும்.

9. Continue என்பதைக் கிளிக் செய்து பணம் செலுத்தும் பக்கத்திற்குச் செல்லவும்.

10. கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் (நெட் பேங்கிங், கார்டு, UPI போன்றவை).

11. Pay & Book என்பதைக் கிளிக் செய்து டிக்கெட்டை முன்பதிவு செய்யவும்.

12. முன்பதிவு செய்த பிறகு, டிக்கெட் உறுதிப்படுத்தல் பற்றிய தகவல்களை SMS மூலம் பெறுவீர்கள்.

தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான கேள்விகள் (FAQகள்)

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரம் காலம் என்ன?

ஏசி வகுப்பிற்கு: காலை 10:00 மணி

ஏசி அல்லாத வகுப்பிற்கு: காலை 11:00 மணி

பயணத் தேதிக்கு ஒரு நாள் முன்பு முன்பதிவு செய்யப்படுகிறது (எ.கா. பயணம் 5 ஆம் தேதி என்றால், தட்கல் முன்பதிவு 4 ஆம் தேதி திறக்கப்படும்).

பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தட்கல் முன்பதிவு செய்ய முடியுமா?

இல்லை, தட்கல் முன்பதிவு ஒரு நாள் முன்பு மட்டுமே செய்ய முடியும்.

ஒரு தட்கல் டிக்கெட்டில் எத்தனை பயணிகளைச் சேர்க்க முடியும்?

ஒரு முன்பதிவில் (PNR) அதிகபட்சம் 4 பயணிகளைச் சேர்க்கலாம்.

தட்கலில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி கிடைக்குமா?

இல்லை, தட்கல் ஒதுக்கீட்டில் எந்த வகையான தள்ளுபடியும் இல்லை, அது மூத்த குடிமக்களாக இருந்தாலும் சரி அல்லது மற்றவர்களாக இருந்தாலும் சரி.

தட்கல் டிக்கெட்டுக்கான கட்டண முறைகள் என்ன?

நெட் பேங்கிங்

கிரெடிட் / டெபிட் கார்டு

IRCTC இ-வாலட்

UPI

Paytm, Amazon Pay போன்ற வாலட்கள்

மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் எளிதாக புக் செய்ய... IRCTC கணக்கை ஆதாருடன் இணைக்கவும்... எளிய வழிமுறை இதோ

மேலும் படிக்க | தட்கல் டிக்கெட் புக் செய்ய பயன்படுத்தப்பட்ட... 2.5 கோடி போலி ஐடிக்களை முடக்கிய IRCTC

 

Trending News