விவாதத்தில் புத்திசாலித்தனமாக வெல்ல..‘இந்த’ சாணக்கியத்தனத்தை பின்பற்றுங்கள்..

Smart Tips To Win An Argument : மனிதர்கள் ஒன்றாக கூடும் இடத்தில் கண்டிப்பாக, விவாதங்களும் பெரிதாக எழும். அவற்றை எப்படி வெல்வது என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ டிப்ஸ்!  

Written by - Yuvashree | Last Updated : Jun 6, 2025, 03:05 PM IST
  • விவாதத்தில் வெல்வது எப்படி?
  • ஸ்மார்ட் ஆன 7 டிப்ஸ்
  • இதை பின்பற்றுங்கள்
விவாதத்தில் புத்திசாலித்தனமாக வெல்ல..‘இந்த’ சாணக்கியத்தனத்தை பின்பற்றுங்கள்..

Smart Tips To Win An Argument : வேலை செய்யும் இடத்தில், வீட்டில், ரோட்டில் என நமக்கு இன்னொருவருடன் விவாதம் வருவது மிகவும் எளிது. விவாதத்தை பொறுத்தவரை யார் குரலை உயர்த்தி பேசுகிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. யார் ஸ்மார்ட் ஆக பேசுகிறார் என்பதை பொறுத்து அமைகிறது. இது போன்ற விவாதங்களில், நாம் இன்னொருவரை வீழ்த்த வேண்டும் எனும் நோக்கத்தோடு பேச கூடாது. உங்கள் மனதில் இருப்பதை எந்த பயமும் இன்றி,  ஸ்மார்ட்-ஆக சொல்லிவிட்டாலே போதும், நீங்கள் அந்த விவாதத்தில் ஜெயித்து விடலாம். அதற்கான சில புத்திசாலித்தனமான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

அமைதி காத்தல்:

அழுத்தமான சூழல் நமக்கு மேல் இருக்கும் போது, நாம் அமைதியாக இருப்பது என்பது ஒரு பெரிய திறன் ஆகும். அதை விவாதம் செய்யும்போது கடைப்பிடித்தீர்களே ஆனால், கண்டிப்பாக அதில் வெற்றி உங்கள் பக்கம்தான். விவாதிக்கும் போது, அமைதியாக தன்னம்பிக்கையுடன் உங்கள் கருத்துகளை சொல்வது அதை இன்னும் மேன்மையுடையதாக மாற்றும். இதனால், எதிராளி உணர்ச்சி வசப்பட்டாலும் அந்த நிலைமை மோசமடைவதை உங்களால் தடுக்க முடியும்.

பேசுவதற்கு முன்பு கேட்க வேண்டும்:

ஒரு விவாதத்தின் போது, பலர் தங்களின் உணர்ச்சிகளை முதலில் சொல்லிவிட வேண்டும் என்கிற காரணத்திற்காக, வீணாக பேசுவர். ஆனால், அதை உன்னிப்பாக கேட்டால், கண்டிப்பாக நம்மால் நமக்கு தேவையான பாய்ண்ட்ஸ்களை அதிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். அதே போல, அவர்களின் பேச்சை கேட்டு அதற்கு ஏற்றார் போல பதிலை கூறுவதால் நமது பதில் நிலைத்து நிற்பதாக இருக்கும்.

உண்மையை பேச வேண்டும்-உணர்வுகளை அல்ல...

நம் மனதில் பலவித உணர்ச்சி போராட்டங்கள் நடக்கும் போது விவாதங்கள் கடினமானதாக மாறலாம். ஆனால், உணர்ச்சிகளை விட உண்மைகளுக்குதான் விவாதங்களில் வெயிட் ஜாஸ்தி. எனவே, உங்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை கூறுவதற்கு உண்மையை மட்டும் பயன்படுத்துங்கள். இது உங்களை உணர்ச்சியற்றவர் போல காட்டாது. அதற்கு மாறாக உங்களின் உணர்ச்சிகளையும் உண்மைகளையும் சமநிலைப்படுத்தும்.

வாதத்தை மறுவடிவமைக்கவும்:

ஒரு சில சமயங்களில், ஒரு விவாதத்தை வெல்வதற்கு ஸ்மார்ட் ஆன வழி என்ன தெரியுமா? அதன் போக்கை உங்களுக்கு ஏற்றவாறு மறுவடிவமைப்பு செய்து கொள்வதுதான். நீங்கள் எதற்காவது பதில் அளிக்க முடியாமல் சிக்கிக்கொண்டால், அந்த பிரச்சனையை வடிவமைத்து இருவரும் அதற்காக தீர்வு காண்பது போல் மாற்ற வேண்டும். இது இருவருக்குள் இருக்கும் பிரச்சனை என்பதை மாற்றி, இருவருக்குமான பிரச்சனையாக மாறிவிடும். அப்போது, எதிராளியும் உங்கள் வழிக்கு வருவர்.

எப்போது முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்:

உங்கள் மன அமைதியை விட வேறு எதுவும் பெரிதில்லை என்பதை கற்றுக்கொள்ளுங்கள். எனவே, ஒரு விவாதத்தில் வெல்வதை விட அதை எப்போது முடிக்க வேண்டும் என்பதை தெரிந்து முடிப்பதும் ஒரு வெற்றிதான். உங்களது விவாதம், டாக்ஸிக்காக மாறுவது போல தோன்றினாலும், பேசுவதையே பேசிக்கொண்டிருப்பது போல தோன்றினாலும், அதிலிருந்து எந்த பயனும் இல்லை என்று தோன்றினாலும் அதனை நிறுத்தி விடலாம். “இதை பற்றி தொடர்ந்து பின்னர் பேசலாம்” அல்லது “நமது பார்வை இந்த விஷயத்தில் வேறாக இருக்கிறது” என்று கூறி அதை அங்கேயே முடித்து விட வேண்டும். இப்படி செய்வதால் நீங்கள் உங்கள் முயற்சியை பாதியிலேயே கைவிட்டுவிட்டு போகிறீர்கள் என்கிற அர்த்தம் ஆகாது. நீங்கள் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும் அளவிற்கு முதிர்ச்சி பெற்ற மனிதராக இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

மேலும் படிக்க | குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!

மேலும் படிக்க | காதல் உறவில் ஒருவர் Cheating செய்வது ஏன்? பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News