Coronavirus Lockdown: ஏர்டெல் நிறுவனம் E-Book Platform இலவசம் என அறிவிப்பு

"கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளனர். அவர்கள் இலவசமாக புத்தக வாசிக்க Airtel E-Book பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 26, 2020, 08:56 PM IST
Coronavirus Lockdown: ஏர்டெல் நிறுவனம் E-Book Platform இலவசம் என அறிவிப்பு title=

புது தில்லி: டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது மின் புத்தகத் தளமான Juggernaut Books இலவசமாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் வசிக்கும் சூல்நிலை உள்ளதால், அவர்களுக்கு ஆதரவாக தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாட்டில் இதுவரை 600 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். கொரோனா பரவாமல் தடுக்க ஏப்ரல் 14 வரை Lockdown உத்தரவை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏர்டெல் தனது அறிக்கையில், "கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளனர். இந்த சூல்நிலையில் புத்தக வாசிப்பதில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் Airtel E-Book பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள அனைத்து புத்தகங்களுக்கும் நாவல்களுக்கும் இலவசமாக படிக்கலாம் எனக் கூறியுள்ளது. (முன்பு இது ஏர்டெல் புக்ஸ் தற்போது ஜாகர்நாட் புக்ஸ்). ஏர்டெல் நிறுவனம் 2017 இல் ஜாகர்நாட் புத்தக (Juggernaut Books) நிறுவனத்தை வாங்கியது நினைவிருக்கலாம்.

இது தவிர, ஜாகர்நாட் (Juggernaut Books) வாசிப்பை ஊக்குவிப்பதற்காக ஒரு புதுமையான ஆன்லைன் இலக்கிய விழாவையும் AIRTEL நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆதர்ஷ் நாயர் கூறுகையில், "இதுபோன்ற காலங்களில், ஏர்டெல் மற்றும் ஜாகர்நாட் ஆகியவை இணைந்து இப்போது சமூக விலகல் உத்தரவை மக்கள் சரியாக பயன்படுத்தும் நோக்கிலும் மற்றும் மக்கள் அதிகளவில் வாசிப்பதை உறுதிப்படுத்த முயற்சியாகும். எனவே மக்கள் வாசிப்பு கட்டத்திற்குச் செல்வதை விட சிறந்தது என்ன? இருக்க முடியும் என்றார்.

Trending News