கோபம் வரும் போதும் கூலாக இருக்க..தோனி செய்யும் ஒரு விஷயம்! நீங்களும் இதை ஃபாலோ பண்ணலாம்..

 MS Dhoni Tips To Stay Cool When Angry : பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, கோபம் வரும் வேளையில் அதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து பேசி இருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 9, 2025, 06:50 PM IST
  • கோபத்தை கட்டுப்படுத்த டிப்ஸ்!
  • தோனி செய்யும் விஷயம்..
  • என்ன தெரியுமா?
கோபம் வரும் போதும் கூலாக இருக்க..தோனி செய்யும் ஒரு விஷயம்! நீங்களும் இதை ஃபாலோ பண்ணலாம்..

 MS Dhoni Tips To Stay Cool When Angry : இந்தியாவில் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்ற கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர் எம்.எஸ்.தோனி. இவரிடம் பலருக்கு பிடித்த ஒரு விஷயமே, எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், தனக்கு வாழ்வில் எவ்வளவு கடினமான தருணங்கள் ஏற்பட்டாலும், அதனை கூலாக சமாளிப்பார். இவரது இந்த நிதானித்த மன நிலையே பல சமயங்களில், கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் இவர் இருக்கும் டீமை வெற்றி பெற செய்திருக்கிறது. இதனாலேயே இவருக்கு பெயர் ‘கேப்டன் கூல்’. இவர், சமீபத்திய நேர்காணலில் கோபம் வரும் வேலையில் என்ன செய்தால் அந்த கோபத்தை குறைக்க முடியும் என்பதையும், அந்த சூழை சரியாக கையாள முடியும் என்பது குறித்தும் பேசியிருக்கிறார். அதற்கு அவர் கொடுத்துள்ள டிப்ஸை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

கோபத்தை சமாளிக்க..

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” இன்று பலர் கூற கேட்டிருப்போம். இதற்கு அர்த்தம், கோபத்தில் நாம் என்ன முடிவு எடுத்தாலும் அது சரியானதாக இருக்காது என்பதுதான். இதை அனைவரும் நன்றாக படித்துக் கொள்வோமே தவிர நிஜ வாழ்க்கை பின்பற்ற மாட்டோம். கோபம் வரும்போது நம் அன்புக்குரியவர்களை கூட கடினமாக பேசி விடுவோம், மனம் புண்படும்படி செயல்களை செய்து விடுவோம். ஆனால், இதனை சமாளிக்க ஒரு டிப்ஸ் கொடுக்கிறார் தோனி. 

“கோபத்தில் எந்த புத்திசாலி மனிதர் அறிவுடன் பேசுவதை பார்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்கும் தோனி, “நமது வீட்டில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட யார் இதனை பின்பற்றுகிறார்கள்? இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்வது என்ன?” என்றும் கேட்கிறார். மேலும் “அப்படி அதிகமாக கோபம் வரும் வேளையில் எதுவுமே பேசாதீர்கள். நீங்கள் கோபப்படும் படி இருக்கும் சூழ்நிலையில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள். ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் நீங்கள் அந்த சூழலுக்கு வரும்போது இன்னும் முடிவு எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருப்பீர்கள்” என்று கோபத்தை கட்டுப்படுத்த டிப்ஸ் கொடுக்கிறார் தோனி. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறுகிறார். இதனை அவரும் வாழ்வில் பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

தோனி கடைப்பிடிக்கும் பழக்கங்கள்..

தோனி இயற்கையாகவே தனது உணர்ச்சிகளை சரியான முறையில் கையாளத் தெரிந்தவர். இதனை பலமுறை அவர் மேட்ச் விளையாடும் போது பார்த்திருப்போம். வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் ஒரே உணர்ச்சி தான் அவரது முகத்தில் இருக்கும். இதை அவர் எப்படி செய்கிறார் தெரியுமா?

கவனம்: தோனி கவனம் செலுத்துவது எல்லாமே தனது முயற்சிகளுக்கு என்ன ரிசல்ட் கிடைக்கும் என்பதை வைத்து கிடையாது. தினம்தோறும் எடுக்கும் முயற்சிகளின் மீது மட்டுமே அவரது முழு கவனமும் இருக்குமாம். இறுதியில் எந்த மாதிரியான ரிசல்ட் கிடைக்கும் என்று அவர் தன்னை மிகவும் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதால் அவருக்கு, இந்த நிலையான கவனம் செலுத்தும் மனநிலை ஏற்படுகிறது. 

பாசிட்டிவ் கண்ணோட்டம்: தோனி தன் வாழ்வில் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் என்ன நடந்தாலும் அதனை பாசிட்டிவாக எடுத்துக்கொள்வார். தன்னை நோக்கி வரும் சவால்களை வாய்ப்புகளாக பார்க்கும் அவர் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தாமல் அதற்கு என்ன தீர்வு கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்துகிறார். 

நிகழ்காலத்தில் இருப்பது: நடந்து முடிந்த விஷயத்தை பற்றி யோசிக்காமல், நடக்க இருக்கும் விஷயத்தை பற்றி யோசிக்காமல் நிகழ்காலத்தில் இருப்பது தோனியின் மிக பெரும் நல்ல பழக்கமாகும். எப்படி இருப்பதால் அவரால் என்ன அழுத்தம் இருந்தாலும் கூலாக இருக்க முடிகிறது. 

மேலும் படிக்க | இல்லற உறவில் இந்த தவறு? குழந்தை வருவது கஷ்டம்..கருத்தடை சிரமம் – இப்படி செய்யாதீர்கள்!

மேலும் படிக்க  | பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ‘இதை’ செய்யுங்கள்! சமந்தா கொடுக்கும் டிப்ஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News