close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

தனவந்திரி ஜெயந்தியின் மகத்துவம் என்ன? எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்?

ஆயுர்வேதத்தின் பிரதிநிதி பகவான் தன்வந்திரி ஜெயந்தி ஆரோக்கியத்தின் தெய்வமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷம் திரயோதசி திதியில் கொண்டாடப்படுகிறது.

தனவந்திரி ஜெயந்தியின் மகத்துவம் என்ன? எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்?
Pic Courtesy : Wikipedia

புதுடெல்லி: புராணங்களின்படி அம்ருதத்திற்க்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது அதிலிருந்து திவ்யதேகத்துடன் ஆபரணங்களை அணிந்து, தேஜஸுடன், கையில் அம்ருத கலசம் ஏந்தியவாறு ஒரு திவ்யபுருஷன் தோன்றினார். அவர் தான் ஆயுர்வேதத்தின் பிரதிநிதி பகவான் தன்வந்திரி. அவர் ஐப்பசி கிருஷ்ண திரயோதசி அன்று அவதரித்தார். அதனால்தான் இவருடைய ஜெயந்தி ஆரோக்கியத்தின் தெய்வமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷம் திரயோதசி திதியில் கொண்டாடப்படுகிறது.

பகவான் தன்வந்திரி தேவர்களின் வாழ்வுக்காகவும் மற்றும் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்காகவும் ஆயுர்வேத சாஸ்திரத்தின் உபதேசம் மகரிஷி விஷ்வாமித்திரரின் மகன் சுஸ்ருதனுக்கு அளித்தார்.

நோய்கள் குணமாக பகவான் தனவந்திரி மூலம் இயற்றிய தனவந்திரி சம்ஹிதா ஆயுர்வேதத்தின் ஆதார நூலாகும். பகவான் தனவந்திரி விஷ்ணுவின் வடிவமானவர் மற்றும் அவருடைய நாமத்தை ஜெபித்தாலே நோய் குணமாகும்.

தனவந்திரி தோன்றிய போது தனது முன்னாள் நின்றிருந்த விஷ்ணுவை வணங்கினார். பகவான் விஷ்ணு, நீங்கள் தண்ணீரிலிருந்து தோன்றியதால் உங்களுக்கு அப்ஜ் என்று பெயர் விழங்கும் என்று கூறினார்.

அப்போது பகவானிடம் எனக்கு லோகத்தில் ஏதாவது ஒரு இடம் ஒதுக்கிட வேண்டும் மற்றும் எனக்கு யாகத்தில் ஒரு பாகத்தை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டார். பகவான், தாங்கள் தேவர்களுக்கு பிற்பாடு தோன்றியதால் உங்களுக்கு யாகத்தில் பங்கு கிடைக்காது, ஆனால் மறுபிறவியில் தாயின் கருவில் அணிமாதி அட்டமாசித்திகளை கொண்டு நீங்கள் காசிராஜ வம்சத்தில் தோன்றி தெய்வபதம் பெறுவீர் மற்றும் அஷ்டாங்க ஆயுர்வேதத்தின் பிரச்சாரம் செய்வீர் என்று கூறி பகவான் மறைந்தார்.

அதன் பிறகு தனவந்திரி இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கி தேவர்களின் வைத்தியனாக அமராவதியில் வசித்து வந்தார்.

இதே தனவந்திரி மறு பிறவியில் காசிராஜ தனவந்திரியாக அவதரித்தார். அவர் லோக க்ஷேமத்திற்காக தன்வந்திரி சம்ஹிதா என்னும் நூலை இயற்றினார். விஷ்வாமித்திரரின் மகனான ஸுஸ்ருதன் ஸமேதம் 100 ரிஷி குமாரர்களுக்கும் ஆயுர்வேதத்தை உபதேசித்தார். தனவந்திரி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கொடுத்த ஞான உபதேஷத்தின் அடிப்படையில் பரத்வாஜர், அஷ்வினிகுமாரர், ஸுஸ்ருதன், சரக ரிஷி, ஆகிய ரிஷிமார்கள் ஆயுர்வேதத்தை வளர்த்தனர்.

மருத்துவ விஞ்ஞானத்தை பின்பற்ற முடியாதவர்கள் மந்திர தந்திரத்தின் மூலம் தனது தேகத்தை நோயிலிருந்து விடுவித்து காயகற்பம் செய்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்றைக்கு கூட சில குகையில் பல சித்தர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர். ஏனெனில் அவர்களிடம் ரகசியமான மந்திரங்களும் யந்திரங்களை உள்ளன.

தன்வந்திரி தனது  "தன்வந்திரி சம்ஹிதா" நூலில் நோய்களை தீர்க்க பல மந்திர தந்திர யந்திர பிரயோகங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அவர் தன்வந்திரி ஸம்ஹிதா என்னும் நூலில் பல மூலிகை மருத்துவத்தை பற்றி கூறியதோடு பல மந்திரங்களும் யந்திரங்களை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். தனவந்திரி ஒரு ஆரோக்கிய கவசத்தை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார் அது சிவ அம்ருத மந்திரங்களால் பிராண பிரதிஷ்டை செய்து அணிந்து கொண்டால் நோய் குணமாகும் தேகம் ஆரோக்கியம் பெரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஆரோகியாகவசம் தனவந்திரி கவசம் என்று அறியப்படுகிறது.

வரும் அக்டோபர் 25 ம் தேதி, திரையோதசி திதி அன்று. மாலை 7 மணிக்கு ஸ்நானம் செய்து வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு. நெற்றியில் திலர்த்தமிட்டு, வடக்கு நோக்கி அமர்ந்து. ஒரு செம்பு தட்டில் தனவந்திரி யந்திரம் அல்லது தனவந்திரி கவசம் வைக்கவும்.

இப்போது அதற்கு பஞ்சொபச்சார பூஜை செய்யவும்:-

ஓம் ஸ்ரீ தன்வந்திரியே நம : ஸ்நானம் சமர்பயாமி ( தண்ணீர் விடவும்)

ஓம் ஸ்ரீ தன்வந்திரியே நம : குங்குமம் சமர்பயாமி ( யந்திரம்/கவசத்திற்கு குங்குமம் போட்டு வைக்கவும்)

ஓம் ஸ்ரீ தன்வந்திரியே நம : அக்ஷதான் சமர்பயாமி (அட்சதையை சமர்ப்பிக்கவும்)

ஓம் ஸ்ரீ தன்வந்திரியே நம : நைவேத்தியம் நிவேதயாமி ( நைவேத்தியம் சமர்ப்பிக்கவும் )

ஓம் ஸ்ரீ தன்வந்திரியே நம : தூபம் தீபம்  தர்சயாமி ( தூப தீபம் காட்டவும்)

இப்போது கீழ்கண்ட மந்திரத்தை ஸ்படிகம் அல்லது ருத்திராட்ச மாலையை கொண்டு 1 மாலை (108 முறை) ஜெபிக்கவும்:

"ஓம் ரம் ருத்ர ரோகநாசாய தனவந்திரியே பட்"

ஒவ்வொரு தடவை மந்திரத்தை சொல்லி பூவின்  ஒவ்வொரு இதழ் சமர்ப்பிக்கவும். ஜெபம் முடிந்த பிறகு கவசத்தை கரத்தில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளவும்.

அடுத்து வரும் திரயோதசி திதி வரை தினமும் 21 முறை மந்திரத்தை ஜெபிக்கவும். பிறகு ஒரு மஞ்சள் துணியில் கவசத்தை சிறிது அட்சதையுடன் வைத்து முடிந்து நீர் நிலைகளில் விட்டு விடவும்.