கொரோனா வைரஸை ஒழிப்பதில் சீனாவின் அதிமதுரம் நிகழ்த்திய அதிசயம்...

கொரோனா வைரஸ்  தொற்று நோயை  கட்டுப்படுத்த சீனாவுக்கு அதிமதுரம் என்னும் மூலிகை உதவியதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

Last Updated : May 29, 2020, 07:14 PM IST
கொரோனா வைரஸை ஒழிப்பதில் சீனாவின் அதிமதுரம் நிகழ்த்திய அதிசயம்... title=

கொரோனா வைரஸ்  தொற்று நோயை  கட்டுப்படுத்த சீனாவுக்கு அதிமதுரம் என்னும் மூலிகை உதவியதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிக்க உலகமே  போராடுகிறது. இந்த போராட்டத்தில், ஒரு சிலர் ஓரளவு வெற்றி பெற்றுள்ளனர்.  கொரோனா வைரஸைக் தோற்கடிப்பதில்  வெற்றி கண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று. 

கூறப்போனால் சீனா தான் COVID-19 தொற்றுநோயின் ஆரம்பப் புள்ளியாகும். மேலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான  ரகசியம் பாரம்பரிய சீன மருத்துவத்தில் உள்ளது. COVID-19 நோய்  பாதிப்பு  எண்ணிக்கையைக் குறைக்க சீனாவுக்கு உதவிய மூலிகைகள்  லைகோரைஸ் அல்லது அதிமதுரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லான்செட்  பத்திரிக்கை  சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி,   அதிமதுர சாறுடன் கூடிய சில  மூல  பொருட்கள்  நோயிலிருந்து மீள்வதற்கு  உதவி உள்ளது.  102  கொரோனா வைரஸ்  நோயாளிகளுக்கு  லேசான அறிகுறிகள்  மற்றும்  பாதிப்பு    மட்டுமே  வெளிபட்டது.    மேலும்  ஆன்டிவைரல்கள் என்று பார்த்தால் அதிமதுர  கலவை  மருந்துகள்  திறம்பட மற்றும் விரைவாக செயல்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.  சி.டி ஸ்கேன்களில் நோயாளிகள் SARS-CoV-2 கொரோனா வைரஸின் எதிர்மறையான இருப்புகளை  காண்பித்தன.  

கொரோனா வைரஸின் மரபணு பிறழ்ச்சி வடிவத்தை  கூட அதிமதுர சாறு கணிசமாகத  தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளன. அதிமதுரம் என்பது பூக்கும்  இன தாவரமாகும், இதில் லிகிரிடின் என்னும் ஒரு  கலவை உள்ளது.  இது  வைரஸின் வளர்சியை கட்டுக்குள் வைக்கிறது.

நோய்  சிகிச்சையில் அதிமதுரம் நல்ல முடிவுகளை தருவது  இது  ஒன்றும் முதல் முறையான நிகழ்வு அல்ல. இது ஒரு பழங்கால  மூலிகையாகும்.    ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு வீட்டு வைத்தியமாக இன்ன்றும்  பயன்பாட்டில் உள்ளது. அதிமதுரம்  தொண்டை புண், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவிற்கு  கூட நிவாரணம் அளிக்கும்.   அதிமதுரத்தை தின்  தினசரி பயன்படுத்துவதன் மூலம் லிம்போசைட்டுகள் மற்றும் மேக்ரோபேஜ்களின் உற்பத்தி அதிகரிகிறது.  எனவே ஒருவரின்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

செரிமான பிரச்சினைகளுக்கு கூட  அதிமதுரத்தை உட்க்கொள்ளலாம்.    இதில் கிளைசிரைசின் மற்றும் கார்பெனோக்சலோன் எனப்படும் சேர்மங்கள்  இருப்பதால்  அதிமதுர  கலவை  அல்லது கஷாயத்தை  உட்கொள்ளலாம்.  இவை வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்றவற்றுக்கு நல்ல சிகிச்சை மருந்தாக பயன்படுகிறது.    

அதிமதுரத்தில்  அழற்சியை தடுக்கும் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அது உடலில் ஏற்படும் அழற்சி தொடர்பான பாதிப்புகளை குறைத்து  கீல்வாதத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

மாதவிடாய் நிற்கும்  அறிகுறிகளை அனுபவிக்கும் பெண்கள் இந்த மூலிகையை  பயன்படுத்தலாம். இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜெனிக் கலவைகள் மூலம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை  கட்டுப்படுத்தலாம்.   மேலும்  தூக்கமின்மை, வியர்வை, மனநிலை மாற்றங்கள், ஹாட் ஃப்ளாஷஷ்  போன்ற அறிகுறிகளையும்  கட்டுப்படுத்தலாம் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மொழியாக்கம் -அருள்ஜோதி

Trending News