ரத்தம் குடிக்காமல் கொசு எத்தனை நாட்கள் உயிர் வாழும்? ஆண்-பெண் கொசுக்களுக்கு என்ன வித்தியாசம்?

Mosquito facts : கொசுக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள். எந்த கொசு ரத்தம் குடிக்கும், அவை ஏன் ரத்தம் குடிக்கின்றன என்பது உள்ளிட்ட மிக முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளவும்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 28, 2025, 11:33 AM IST
  • கொசுக்கள் பற்றிய முக்கிய தகவல்கள்
  • ஆண் - பெண் கொசு இடையேயான வேறுபாடு
  • கொசு ரத்தம் குடிக்காமல் வாழ முடியுமா?
ரத்தம் குடிக்காமல் கொசு எத்தனை நாட்கள் உயிர் வாழும்? ஆண்-பெண் கொசுக்களுக்கு என்ன வித்தியாசம்?

Mosquito facts Tamil : கோடை அல்லது குளிர் என எந்த காலமாக இருந்தாலும் கொசுக்களின் தொல்லை மட்டும் ஓய்ந்தபாடில்லை. இவற்றை விரட்ட அல்லது கொல்ல பல்வேறு முறைகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த சூழலில் கொசுக்கள் பற்றி நாம் சில அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எந்த கொசு ரத்தம் குடிக்கும், கொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கின்றன, எந்த கொசுக்களால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது உள்ளிட்ட சில சுவாரஸ்யமான மற்றும் மிக முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

Add Zee News as a Preferred Source

ஆண் கொசுக்கள் ரத்தம் குடிப்பதில்லை!

ஆண் கொசுக்கள் பூக்களின் தேன், பழச்சாறுகள் போன்ற இனிப்பு பதார்த்தங்களை மட்டுமே உண்கின்றன. பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர் மற்றும் விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

ஆண் vs பெண் கொசுக்களின் ஆயுள்:

ஆண் கொசுக்கள் வெறும் 4 முதல் 7 நாட்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன, இது பெண் கொசுக்களை விட மிகக் குறுகிய காலமாகும். இதற்கு மாறாக, பெண் கொசுக்கள் பொதுவாக 2 முதல் 4 வாரங்கள் வரை உயிர் வாழ்கின்றன. குறிப்பாக, பெண் கொசுக்களுக்கு ரத்தம் கிடைத்தால் அவை ஒரு மாதம் வரை உயிர் வாழும் திறன் கொண்டவை. ஆனால் ரத்தம் கிடைக்காத சூழ்நிலையில், பெண் கொசுக்களின் ஆயுள் குறைந்துவிடும்.

பெண் கொசு ஏன் ரத்தம் குடிக்கிறது?

பெண் கொசுக்கள் முட்டையிட வேண்டியதால், புரதம் (Protein) தேவைப்படுகிறது. இந்த புரதத் தேவையைப் பூர்த்தி செய்யவே, அவை ரத்தத்தை உறிஞ்சுகின்றன. சரியான சூழல் கிடைத்தால், 1 மாதத்திற்கும் மேலாக உயிர் வாழலாம்.

ரத்தம் இல்லாமல் கொசு உயிர் வாழுமா?

ஆண் கொசுக்கள் எப்போதும் ரத்தம் குடிப்பதில்லை. அவை தேன், பழச்சாறுகளால் மட்டுமே உயிர் வாழ்கின்றன. பெண் கொசுக்கள் ரத்தம் இல்லாமல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். ஆனால், முட்டையிட ரத்தம் அவசியம்.

எந்த கொசு வகைகள் அபாயகரமானவை?

அனைத்து கொசுக்களும் மனிதர்களுக்கு தொல்லை தருவதில்லை. ஆனால், சில வகைகள் மட்டுமே ஆபத்தானவை:

ஏடிஸ் (Aedes) - டெங்கு, சிகுன்குனியா போன்ற நோய்களை பரப்புகிறது.
அனோபிலிஸ் (Anopheles) - மலேரியாவை பரப்புகிறது.
குலெக்ஸ் (Culex) - ஜப்பானீஸ் என்செபலிட்டிஸ் மற்றும் பிலேரியாவை பரப்புகிறது.

முக்கிய தகவல்:

கொசுக்கள் நீர் தேங்கிய இடங்களில் முட்டையிடுகின்றன. எனவே, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு கவனிக்கவும். கொசு வலை, மசகூஸிட்டோ ரெப்பெல்லண்ட் போன்றவற்றைப் பயன்படுத்தி தடுக்கலாம். கொசுக்களால் பரவும் நோய்கள் ஆபத்தானவை. எனவே, கொசு கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | நாளை மறுநாள் சூரிய கிரகணம்.. எங்கெல்லாம் பார்க்கலாம்? இந்தியாவில் தெரியுமா?

மேலும் படிக்க | தண்ணீர் பாட்டிலை தினமும் கழுவலாமா? அப்படி செய்தால் உடலுக்கு என்ன ஆகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News