மாதந்தோறும் ரூ.5000 மத்திய அரசின் சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க!

Atal Pension Yojana Latest News: அடல் ஓய்வூதிய யோஜனா திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 3 முதல் 5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறலாம். நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் உங்களுக்கு மாதம் மாதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 1, 2025, 11:28 PM IST
மாதந்தோறும் ரூ.5000 மத்திய அரசின் சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க!

Atal Pension Yojana In Tamil: நாட்டின் ஏழை மக்களுக்காக மத்திய அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களும் இந்தத் திட்டங்களின் பலனைப் பெறுகிறார்கள். அது பெண்களாக இருந்தாலும் சரி, முதியவர்களாக இருந்தாலும் சரி, விவசாயிகளாக இருந்தாலும் சரி. இதுபோன்ற சூழ்நிலையில், மத்திய அரசு முதியோருக்கான "அடல் பென்ஷன் யோஜனா" திட்டத்தை சிறப்பாக நடத்தி வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட "அடல் பென்ஷன் யோஜனா" திட்டம் குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் எப்பொழுது ஓய்வூதியம் கிடைக்கும்?

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயதிற்கு மேல் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில், முதலில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக செலுத்த வேண்டும். பின்னர் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் 60 வயதுக்கு பிறகு ஓய்வூதியமாக மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியம் பெறலாம்?

நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில் உங்களுக்கு மாதம் மாதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேர உங்கள் வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியமாகும்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மாதம் 5000 ரூபாய் பெறுவது எப்படி?

18 வயதில் ஒருவர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் தன்னை இணைந்துக்கொள்வார் என வைத்துக்கொண்டால், அவர் மாதம் 210 ரூபாய் பிரீமியம் திட்டத்தை தேர்வு செய்கிறார் என்றால், அவருக்கு 60 வயதுக்கு பிறகு, மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். அதுவே மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் பெற வேண்டும் என்றால், 18 வயதில் இருந்து ஒவ்வொரு மாதமும் 42 ரூபாய் டெபாசிட் செய்தால் போதும்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் யார் சேரலாம்?

இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். அதாவது சுயதொழில் செய்பவர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், விவசாய தொழிலில் ஈடுபடுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரலாம். ஒருவர் 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், அவருக்கு 60 வயதாகியவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.

மேலும் படிக்க - ஓய்வு காலத்தில் ஹேப்பியாக இருக்க... இந்த 4 திட்டங்கள் கைக்கொடுக்கும்!

மேலும் படிக்க - தொழிலாளியோ தொழிலதிபரோ, இனி 60 வயதுக்கு மேல் அனைவருக்கும் பென்ஷன்: அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம்

மேலும் படிக்க - மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான ஓய்வூதியத் திட்டம்: மாதம் ரூ.6000 ஓய்வூதியம் கிடைக்கும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News