வெறும் 2 மாதங்கள் இதை செய்யுங்கள், முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும்

Glowing Face: வயதாகும்போது இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இதற்கு நீங்கள் வெறும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 22, 2023, 12:31 PM IST
  • முகம் மசாஜ் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
  • பதற்றத்தை நீக்க முடியும்.
  • இந்த விஷயங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெறும் 2 மாதங்கள் இதை செய்யுங்கள், முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும்

ஒளிரும் சருமத்திற்கு முக மசாஜ்: வயது அதிகரிக்கும் போது, ​​முகத்தின் பொலிவு குறையத் தொடங்கி விடுகிறது. இந்த பளபளப்பை பராமரிக்க பலர் பலவிதமான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது பல பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், முக மசாஜ் இயற்கையான சரும பளபளப்பிற்கு மிகவும் நல்லது. மசாஜ் செய்வது சருமத்தை ரிலாக்ஸ் செய்கிறது. பெரும்பாலான சரும நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வாரத்திற்கு ஒரு முறை முக மசாஜ் செய்ய பரிந்துரைக்கின்றனர். அதேபோல் பேசியல் மசாஜ் நமக்கு புத்துணர்ச்சி தருவதோடு முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நீங்கள் முகத்தில் உள்ள ஒவ்வொரு பாகங்களாக மசாஜ் செய்யும் போது நிறைய நன்மைகளை பெற முடியும். முக மசாஜில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் சரும செல்களை புத்துணர்ச்சி பெறச் செய்து சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே இப்போது முக மசாஜ் செய்வதன் மற்ற நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

இந்த காரணங்களுக்காக முக மசாஜ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது: ஃபேஸ் மசாஜ் சரியாக செய்தால், அனைத்து முக தசைகளுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும். தசைகளை தளர்த்துவது மூளையின் பதற்றம் மற்றும் அழுத்த அளவையும் குறைக்கிறது. ரிலாக்ஸ் ஆக இருப்பது முகம் அழகாகவும் இளமையாகவும் இருக்கும்.

சிறந்த இரத்த ஓட்டம்: முக மசாஜ் முகத்திலும் உடலிலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. சிறந்த இரத்த ஓட்டம் முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டுவருகிறது மற்றும் நீங்கள் நீண்ட காலத்திற்கு இளமையாக இருப்பீர்கள்.

மேலும் படிக்க | நாம் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் சருமத்தை பாதிக்கும்! ஜாக்கிரதை!

ப்ரோடக்ட் பயன்பாட்டிற்கு சிறந்தது: பல சமயங்களில் பக்கவிளைவுகளுக்கு பயந்து முகத்தில் அழகு சாதனப் பொருட்களை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் வழக்கமான முக மசாஜ் எந்தவொரு பொருளையும் உறிஞ்சும் முகத்தின் திறனை அதிகரிக்கிறது. உங்கள் சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

நேர்த்தியான கோடுகளை அகற்ற: முகத்தை மசாஜ் செய்வதன் மூலம், உங்கள் முகத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைந்துவிடும். மாய்ஸ்சரைசரின் உதவியுடன் முகத்தை மசாஜ் செய்வது அதன் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது. இது தவிர, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

ரிலாக்ஷேஷன்காக: ஒரு நல்ல முக மசாஜ் மூலம், உங்கள் உடலும் மனமும் முற்றிலும் ரிலாக்ஸ் ஆகிவிடும். இதனால் சருமமும் ரிலாக்ஸ் ஆகும். இயற்கையான பளபளப்பிற்கு, நீங்கள் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.

பேசியல் மசாஜ்யை எப்படி செய்யலாம் என பார்ப்போம்:

* உங்க பேசியல் மசாஜ்யை தொடங்குவதற்கு முன்பு உங்க கைகளை நன்றாக கழுவிக் கொள்வது மிகவும் முக்கியம். 
* மசாஜ் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக க்ளீன்சர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.
* முக மசாஜ்யை தொடங்குவதற்கு முன்பு சிறிது மாய்ஸ்சரைசரை எடுத்து மசாஜ் செய்ய தொடங்குங்கள். பின்னர் உங்கள் நெற்றியில் ஜிக்ஜாக் இயக்கங்களில் ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்யவும். 
* அடுத்து நெற்றியின் பக்கவாட்டில் மசாஜ் செய்யுங்கள். அந்த பகுதியை மெதுவாக அழுத்தத் தொடங்குங்கள். உங்கள் விரல்களை கடிகார வட்ட இயக்கங்களின் திசையில் நகர்த்தவும். 
* பின்னர் கண்களுக்கு கீழே இருக்கும் வீக்கத்தை சரி செய்ய மசாஜ் செய்யுங்கள்.
* இப்பொழுது உங்க கன்னங்களில் மாய்ஸ்சரைசர் வைத்து உங்கள் நான்கு விரல்களை உங்கள் கன்னங்களின் இருபுறமும் வைத்து, உங்கள் முகத்தை வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யத் தொடங்குங்கள். 
* இப்பொழுது மாய்ஸ்சரைசரை உங்க தாடைகளில் வைத்து விரல் நுனியைப் பயன்படுத்தி உங்கள் தாடை மற்றும் கழுத்தை கீழ்நோக்கி இயக்கவும். உங்கள் தாடையின் நுனியிலிருந்து தொடங்கி, உங்கள் விரல்களை உங்கள் கழுத்தின் கீழே உங்கள் காலர்போனர் வரை கொண்டு போய் மசாஜ் செய்யவும். 
* வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கு முக மசாஜ் கொடுப்பது உங்கள் சரும தோற்றத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் முகத்தில் ஆரோக்கியமான பிரகாசத்தையும் சேர்க்கிறது.

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பச்சை மிளகாயை நீண்ட காலத்திற்கு புதியதாக வைத்திருக்க டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News