ரயில்வேக்கு அதிக வருவாய் கொடுப்பது எது? ஏசி பெட்டிகளா... ஏசி இல்லாதவையா?

Indian Railways: இந்திய ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவது ஏசி வசதி உள்ள பெட்டிகளா, ஏசி வசதி இல்லாத பெட்டிகளா என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 27, 2025, 05:10 PM IST
  • 2019-20 காலகட்டத்தில் ரயிலில் 809 கோடி பேர் பயணித்துள்ளனர்.
  • 2024-25ஆம் ஆண்டில் ரயிலில் 727 கோடி பேர் பயணித்துள்ளனர்.
  • புறநகர் ரயில்களின் பயணிகளின் வரத்தும் குறைந்துள்ளது.
ரயில்வேக்கு அதிக வருவாய் கொடுப்பது எது? ஏசி பெட்டிகளா... ஏசி இல்லாதவையா?

Indian Railways: கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட லாக்டவுண் காலகட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரயில்வே துறையின் வருமானம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான பட்ஜெட் ஆவணங்களின் படி, கரோனா காலகட்டத்திற்கு முந்தைய 2019-20 நிதியாண்டின் ரயில்வே துறையின் வருமானம் மற்றும் தற்போது 2024-25 நிதியாண்டின் ரயில்வே துறையின் வருமானம் ஆகியவற்றை ஒப்பீட்டால் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

Indian Railways: 2019-20 நிலைமை என்ன?

2019-20 நிதியாண்டில், ரயில்வே துறையின் குளிர்சாதன பிரிவில் AC முதல் வகுப்பு, AC 2-அடுக்கு, AC 3-அடுக்கு, AC சேர் கார் ஆகிய பெட்டிகளின் வருவாய் என்பது ரயில்வே துறையின் மொத்த வருவாயில் 36% ஆக இருந்தது. அதாவது, ஏசி பெட்டிகளில் இருந்து ரூ.50,699 கோடி வருவாய் வந்தது. ஏசி இல்லாத பெட்டிகள் கொண்ட ரயில்கள், புறநகர் ரயில்கள் ஆகியவற்றில் இருந்து வந்த வருமானம் என்பது மொத்த வருவாயில் 58% ஆகும்.

Indian Railways: 2024-25இல் நிலைமை என்ன?

இந்த நிலை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. 2024-25 நிதியாண்டில் இந்திய ரயில்வே துறையில் ஏசி பெட்டிகளின் மூலம் கிடைத்த வருவாய் என்பது ரூ.80 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, மொத்த வருவாயில் இது 54% ஆகும். 2019-20இல் 36% ஆக இருந்த பங்கிளிப்பு சுமார் 18% உயர்ந்திருக்கிறது. அதேபோல், ஏசி இல்லாத பெட்டிகளில் இருந்து வந்த வருவாய் ஒப்பீட்டளவில் குறைந்து, மொத்த வருவாயில் 41% பங்களிப்பை மட்டுமே அளித்துள்ளது. இது 2019-20இல் 58% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.

Indian Railways: மொத்த ரயில் பயணிகளின் விவரம்

அதாவது, 2019-20இல் 18 கோடி பேர் ஏசி பெட்டிகளில் பயணித்துள்ளனர். அதுவே, தற்போது 2024-25இல் 38 கோடி பேர் பயணித்துள்ளனர். ஆனால், கரோனாவுக்கு முன்பு இருந்தளவு ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயரவில்லை. மாறாக குறைந்தே உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. 2024-25இல் 727 கோடி பயணிகள் ரயிலில் பயணித்துள்ளனர், இதில் 5.2% பேர் ஏசி பெட்டிகளில் பயணித்தவர்கள்.

இதுவே, 2019-20இல் 809 கோடி பயணிகள் ரயிலில் பயணித்துள்ளனர், அதில் 2.2% மட்டுமே ஏசி பெட்டிகளில் பயணித்தவர்கள். மொத்த பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 2019-20 ஆண்டை விட 2024-25 ஆண்டில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே ரயிலில் பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

Indian Railways: புறநகர் ரயில்களின் பயணிகள் குறைவு

ஆனால், இந்த மொத்த எண்ணிக்கையில் புறநகர் ரயில்களின் பயணிகளும் அடக்கம். புறநகர் ரயில்களின் பயணிகளை சேர்க்காவிட்டால், மற்ற அனைத்து ரயில்களிலும் 2019-20இல் 349 கோடி பயணிகளும், 2024-25இல் 334 கோடி பயணிகளும் பயணித்துள்ளனர். அதாவது, 2019-20 ஆண்டைவிட 15 கோடி பேர் 2024-25 ஆண்டில் குறைவாகவே பயணித்துள்ளனர்.

புறநகர் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கரோனா காலகட்டத்திற்கு முன்பை விட தற்போது குறைந்தே காணப்படுகிறது. 2019-20இல் புறநகர் ரயில்களை 460 கோடி பயணிகளும், 2024-25இல் புறநகர் ரயில்களை 409 கோடி பயணிகளும் பயன்படுத்தியிருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மெட்ரோ, பைக் மற்றும் கார் உள்ளிட்ட சாலை வழிப்போக்குவரத்து, வீட்டில் இருந்த வேலைப் பார்க்கும் சூழல் அதிகமாகி உள்ளதால் புறநகர் பயணிகளின் வரத்து குறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Indian Railways: ரயில் கட்டணம் குறைவு

கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே கட்டணம், பல்வேறு பெட்டிகளுக்கு சுமார் 6% முதல் 25% உயர்ந்துள்ளது. அதாவது, படுக்கை வசி கொண்ட பெட்டிகளின் கட்டணம் 2019-20இல் 368.28 ரூபாயாக இருந்தது, 2024025இல் 407.48 ஆக உயர்ந்துள்ளது. ரூ. 40.20 விலை அதிகமாகி உள்ளது. அதுவே இரண்டாம் வகுப்பு கட்டம் ரூ.6.42 உயர்ந்திருக்கிறது. புறநகர் ரயில்களின் கட்டணம் ரூ.1.12 அளவில் உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | ரயில் புறப்படுவதற்கு முன்பு ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகும்..! இந்த வழியை பின்பற்றுங்கள்

மேலும் படிக்க | ரயில் நிலைய கவுண்டரில் வாங்கிய டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?

மேலும் படிக்க | ரயில்வே டிக்கெட் முன்பதிவு... மூத்த குடிமக்களுக்கு லேயர் பெர்த் கிடைக்க சில டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News