How To Set UPI PIN Using Aadhar Card: கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற போன்ற UPI சேவைகள் தற்போது பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கிவிட்டது எனலாம். இப்போதெல்லாம் நீங்கள் கைகளில் பணத்தை எடுத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை. காய்கறி வாங்குவதில் இருந்து தங்க நகை வாங்குவது வரை குறிப்பிட்டளவு பணப் பரிவர்த்தனையை நீங்கள் UPI சேவை மூலமே செலுத்திக்கொள்ளலாம்.
UPI PIN: பின்நம்பர் முக்கியம் அமைச்சரே...?
மிக எளிமையாக பணப் பரிவர்த்தனை நீங்கள் நொடிகளில் செய்து முடிக்கலாம். உங்களுக்கு UPI ஐடி அல்லது பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பர்தான் பணப்பரிவர்த்தனைக்கு தேவையாகும். மேலும் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் நீங்கள் 4 இலக்கம் அல்லது 6 இலக்கம் கொண்ட PIN நம்பரை கொடுத்தால்தான் பணப்பரிமாற்றம் வெற்றிகரமாக நடைபெறும்.
மேலும் படிக்க | Rules Change | இந்திய ரயில்வே முக்கிய அப்டேட்! தட்கல் முறையில் அதிரடி மாற்றம்!
UPI PIN: பின்நம்பர் இல்லாமலும் பரிவர்த்தனை செய்யலாம்?
ஒருவேளை நீங்கள், UPI Lite பயன்படுத்தினால் PIN நம்பர் தேவையில்லை. UPI Lite என்பது ஒருமுறை PIN நம்பர் செலுத்தி வேலட்டில் ரூ.500 முதல் ரூ.1000 வரை டாப்அப் செய்துவைத்துக்கொள்ளலாம். அதன்பின் உங்களின் அன்றாட பயன்பாட்டில் ரூ.200 வரையிலான பணப்பரிவர்த்தனைக்கு UPI Lite ஆப்ஷனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
UPI PIN: டெபிட் கார்ட் இல்லாமல்...
இதுஒருபுறம் இருக்க, பொதுவாக UPI பணப்பரிவர்த்தனைக்கு PIN நம்பர் செய்ய டெபிட் கார்ட் பெரிதும் பயன்படுத்தப்படும். ஆனால், அது ஒன்று மட்டும் ஆப்ஷன் இல்லை. உங்களின் ஆதார் அட்டையை மட்டும் வைத்துக்கூட PIN நம்பரை செட் செய்துகொள்ளலாம். அந்தவகையில், டெபிட் கார்ட் இல்லாமல் வெறும் ஆதார் அட்டை மட்டும் வைத்து UPI PIN நம்பரை செட் செய்யும் வழிமுறையை இங்கு பார்க்கலாம்.
ஆதார் மூலம் UPI PIN நம்பர் செட் செய்யும் வழிமுறை
- முதலில் மொபைல் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்.
- அந்த மொபைல் நம்பர் உங்களின் வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.
- அதன்பின், உங்களது கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளில் உள்நுழைய வேண்டும்.
- அதன்பின் உங்களின் வங்கி விவரங்களை செலுத்த வேண்டும். மேலும், UPI PIN செட் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
- அதில் டெபிட் கார்ட் ஆப்ஷனை தவிர்த்து, ஆதார் கார்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன்பின், உங்களின் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் 12 இலக்கத்தில் முதல் 6 இலக்கங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
- அதன்பின் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டு, வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும்.
- அதன்பின் புதிய PIN நம்பரை உருவாக்கி, அந்த ஓடிபியை உள்ளீடு செய்து பின் நம்பரை செட் செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









