தமிழ்நாட்டுக்கு முதலில் இருந்த பெயர்..என்ன தெரியுமா? அறிஞர் அண்ணாவால் நடந்த மாற்றம்

Original Name Of Tamil Nadu : தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்கிற பெயர் வரும் முன், என் பெயர் இருந்தது தெரியுமா? இதோ அது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Jan 10, 2026, 05:35 PM IST
  • தமிழ்நாட்டுக்கு முதலில் இருந்த பெயர்
  • அண்ணாவால் நடந்த மாற்றம்
  • முழு விவரம்..
தமிழ்நாட்டுக்கு முதலில் இருந்த பெயர்..என்ன தெரியுமா? அறிஞர் அண்ணாவால் நடந்த மாற்றம்

Original Name Of Tamil Nadu : எந்த வித மொழித்திணிப்பையும், மத திணிப்பையும் ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுள் ஒன்றாக இருக்கிறது, தமிழ்நாடு. நம் மாநிலத்திற்கு ’தமிழ்நாடு’ என பெயர் வைத்தது, 1964ஆம் ஆண்டில்தான். அதன் பிறகுதான் நம் மாநிலத்தை தமிழ்நாடு என அழைத்து வருகின்றனர். ஆனால், இதற்கு முன்பு தமிழ்நாட்டுக்கு என்ன பெயர் இருந்தது தெரியுமா?

Add Zee News as a Preferred Source

இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டுக்கு, முதலில் ’மெட்ராஸ் ஸ்டேட்’ என்கிற பெயர்தான் இருந்தது. இதை மாற்றிட வேண்டும் என்பதற்காக, 1963ஆம் ஆண்டில் என்கிற கோரிக்கையை முன்வைத்து மாநிலங்களவையில் விவாதம் நடந்தது. அதற்கு கேட்கப்பட்ட கேள்வியும், பேரறிஞர் அண்ணா கோபமாக கொடுத்த பதிலும்தான் தமிழ்நாட்டுக்கு பெயர் வர காரணமாக இருந்தது.

அண்ணா கேட்ட நறுக் கேள்வி!

 “தமிழ்நாடு என்கிற பெயரை மாற்றுவதால் நீங்கள் என்ன லாபம் அடைந்துவிட போகிறீர்கள்?” என்று அண்ணாவை நோக்கி கேள்வி கேட்க, அதற்கு அவர் “பார்லிமெண்டைலோக்சபா என்றும், கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்றும் பாற்றியதால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விட்டீர்கள்?” என்று பதிலளித்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ்நாடு என்கிற பெயர் நம் மாநிலத்திற்கு இல்லை. ‘மதராஸ் ஸ்டேட்’ என்றுதான் ஆக்கப்பட்டது. இப்படி அழைப்பதையே, 65 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை ஆண்ட அரசாங்கமும் விரும்பியது.

இந்த பெயரை கொண்டு வந்த போது, அன்றைய முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம் “தமிழ்நாடு என்பது நமது நாடா? அல்லது இந்தியா நமது நாடா? எப்படி இதையும் நமது நாடு அதையும் நமது நாடு என சொல்வது? என்று சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பினார். மேலும், காங்கிரஸ் கட்சியால், இது பிரிவினையை முன்னிறுத்தும் கோரிக்கை என்றும் சொல்லப்பட்டது. இது, தமிழ் பேசாத பிற மொழியினரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி என்றும் அப்போதைய அரசாங்கத்தால் சொல்லப்பட்டது. இதனால் இந்த கோரிக்கை தவிர்க்கப்பட்டது. 

அண்ணாவின் பேச்சு!

மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கான கோரிக்கைகள் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் தோல்வியை தழுவின. ஆனால், இது குரித்து விடாப்பிடியாக போராட்டம் நடந்தது. காங்கிரஸ் ஆட்சி அப்போது நடந்து கொண்டிருந்ததால், அந்த சமயத்தில் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாமல் இருந்தது. எனவே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 1967ல் மதராஸ் ஸ்டேட் எனும் பெயரை, தமிழ்நாடு என மாற்றுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனும் தீர்மானம் அன்றைய முதல்வர் அண்ணாவால் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட முன்முடிவானது 1968ல் நிறைவேறியது.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ எனும் பெயர் வந்தது. இது குறித்து 1968ல் பேசிய அண்ணாதுறை, “தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைத்திருக்கிறோம். சுயமரியாதை த் இருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம். இருமொழிக்கொள்கை-தமிழ்-ஆங்கிலம் மட்டும்தான், மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை. இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என நினைத்தால், அவர்களை அறியாமல் அச்சம் தோன்றும், அந்த அச்சம் இருக்கின்றவரையில் அண்ணாதுரை இந்த நாட்டை ஆளுகிறான் என பொருள்” என பேசியிருந்தார்.

மேலும் படிக்க | பெண்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... பொங்கல் முன்னிட்டு அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | Fridge-ல் வைத்தால் விஷமாக மாறும் 6 உணவுகள்! மறந்தும் வச்சுறாதீங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News