100,200,500 ரூபாய் நோட்டில் இருக்கும் கோடுகள்.. ஏன் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

Why Lines In Indian Currency Notes: ரூபாய் நோட்டுகளின் ஓரங்களில் கோடுகள் இருப்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால், அந்த வரிகள் எதற்கு இருக்கிறது? என்ன காரணம் என பலருக்கு தெரியாது. எனவே, அதுகுறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Umabarkavi K | Last Updated : Feb 4, 2026, 04:46 PM IST
  • ரூபாய் நோட்டின் விளிம்பில் இருக்கும் கோடுகள்
  • 100,200,500 ரூபாய் நோட்டில் வெவ்வேறு வரிகள்
  • ஏன் தெரியுமா இது?
100,200,500 ரூபாய் நோட்டில் இருக்கும் கோடுகள்.. ஏன் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

Why Lines In Indian Currency Notes: ஒவ்வொரு நாடுகளின்  ரூபாய் நாணயங்கள் பல்வேறு பெயரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. டாலர், யூரோ, ரூபாய் போன்ற பெயரிகளில் அழைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாணயங்களும் வித்தியாசமான வடிவமைப்பில் இருக்கும்.  அந்த வகையில், இந்தியாவின் நாணயங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் வித்தியாசமாக இருக்கும். இந்த ரூபாய் நோட்டுகளில்  காந்தி படம், அசோக சக்கரா,  சீரியல் நம்பர் போன்றவை இடம்பெற்றிருக்கும். 

Add Zee News as a Preferred Source

இந்திய ரூபாய் நோட்டுகளில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை நாம் அனைவரும் கவனித்து இருப்போம். ஆனால்,  ரூபாய் நோட்டுகளின் விளம்பில் நீங்கள் எப்போதாவது கோடுகள் இருப்பதை பார்த்திருப்பீர்களா? ஆம் 200, 500 ரூபாய் நோட்டுகளின் விளம்பில் கோடுகள் இருக்கின்றன.  200 ரூபாய்  நோட்டுகளில் 4 கோடுகளும், 500 ரூபாய் நோட்டுகளில் 5 கோடுகளும் உள்ளன. இந்த கோடுகள் ஏன் இருக்கிறது? இதற்கு காரணம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் கோடுகள் இருப்பது ஏன்?

ரூபாய் நோட்டுகளில் உள்ள கோடுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்காது.  இந்த கோடுகளில் எண்ணிக்கை நோட்டின் மதிப்பை பொறுத்து அதிகரித்து இருக்கும். மேலும், சில ரூபாய் நோட்டுகளில் கோடுகளுக்கு இடையே வட்டமாக இருக்கும். குறிப்பாக, 100, 200, 500, 2000 (இது தற்போது புழக்கத்தில் இல்லை) ரூபாய் நோட்டுகளில் இந்த கோடுகளுக்கு ஒரு சிறப்பு அர்த்தம் உள்ளது.  

அதாவது, ரூபாய் நோட்டுகளின் விளம்பில் இருக்கும் கோடுகள் குறிகள் (Bleed Marks) என அழைக்கப்படுகிறது.  
இந்த வரிகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகளின் உதவியுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ரூபாய் நோட்டின் மதிப்பை அறிந்து கொள்ளலாம்.  இதனால், அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. 

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ரூபாய் நோட்டில் உள்ள கோடுகளை கைகளால் தொட்டு உணர்ந்து, அதன் மதிப்பை அறிந்து கொள்வார்கள். அவர்கள் தங்கள் கையால் தொடுவதன் மூலம் பணத்தாளின் மதிப்பை எளிதாக அடையாளம் காண முடியும்.  இந்த காரணத்தினால் தான், 100,200, 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிகள் உள்ளன. இந்த கோடுகளில் எண்ணிக்கையும் பார்வை மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், வேறுபட்டு இருக்கிறது.

10, 20,50 ரூபாய் நோட்டுகளில் கோடுகள் இல்லாதது ஏன்?

இந்திய ரிசர்வ் வங்கி 10,20,50 ரூபாய் நோட்டுகளின் விளிம்பில் எந்தவித கோடுகளையும் அவர்கள் அமைக்கவில்லை. ஏனென்றால், குறைந்த மதிப்பிளான நோட்டுகள் என்பதால்,  பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக செய்யவில்லை. இருப்பினும், பார்வை மாற்றுத்திறனாளிகள் 10,20,50 ரூபாய் நோட்டுகளை தொட்டு பார்த்து அடையாளம் காணுவார்கள். 10 ரூபாய் நோட்டில் வடிவம், எந்த ஒரு கோடு இல்லாதது, 10 ரூபாய் நோட்டில் உள்ள வட்ட வடிவத்தை தொட்டு பார்த்து அவர்கள் கண்டுபிடிப்பார்கள். 

20 ரூபாய் நோட்டு, 10 ரூபாய் நோட்டை காட்டில் கொஞ்சம் பெரியதாக இருக்கும். இதனை வைத்து, பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டுபிடிப்பார்கள். மேலும், 20 ரூபாய் நோட்டில் செவ்வக வடிவம் இருக்கும். இதனால், 20 ரூபாய் நோட்டை  அவர்களால் அடையாளம் காண முடியும்.  50 ரூபாய் நோட்டில் எந்த ஒரு கோடுகளும் இருக்காது. மேலும், சதுர வடிவத்தில் வட்டம் இருக்கும். இதனை வைத்து 50 ரூபாய் நோட்டை பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டுபிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘ABCD’ இல்லாமல் அண்ணா சொன்ன 100 வார்த்தைகள்! இதனால்தான் அவர் பேரறிஞர்..

 

மேலும் படிக்க:  கம்மி விலையில் கேரளாவுக்கு 7 நாள் டூர்! குடும்பத்துடன் செல்ல செம சான்ஸ்.. IRCTC சூப்பர் பேக்கேஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News