கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீர் குடித்தால் குழந்தை அழகாக பிறக்குமா? உண்மை இதுதான்
Coconut Water, Pregnancy Tips | கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் குழந்தையின் நிறம் அழகாக பிறக்கும் என சொல்லப்படுவதற்கு மருத்துவர் கொடுத்துள்ள விளக்கம்.
Coconut Water, Pregnancy Diet Tips | ஒவ்வொருவரும் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிக அழகாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவார்கள். குழந்தை செக்க செவப்பாக பிறக்க வேண்டும் என நினைப்பார்கள். அதனால், கர்ப்ப காலத்தில் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேகமாக உணவை சாப்பிட வேண்டும் என பலர் அறிவுறுத்துகின்றனர். அவர்களின் அறிவுறுத்தல்களின்படி கர்ப்ப காலத்தில் பெண்கள் பிரத்யேக உணவையும் எடுத்துக் கொள்கிறார்கள். அதில் ஒன்று தான் தேங்காய் தண்ணீர் குடித்தால் குழந்தை சிவப்பாக இருக்கும், அழகாக இருக்கும் என சிலர் கூறுகிறார்கள். இதற்கு மருத்துவர்கள் ரியாக்ஷன் என்ன?, இந்த தகவலின் உண்மை தன்மை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
யூடியூப் வீடியோ சொல்வது என்ன?
யூடியூப் வீடியோ ஒன்றில் கர்ப்பிணிகள் குழந்தை சிவப்பாக பிறக்க தேங்காய், தேங்காய் தண்ணீர் சாப்பிட வேண்டும் என டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்ப்பத்தின் முதல் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு தேங்காய் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் காரணமாக, குழந்தை ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல், அழகாகவும் பிறக்கும் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். கமெண்ட் செக்ஷனில் கூட சிலர் இந்த கருத்து உண்மையானது என ஆமோதிக்கும் வகையில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஊறுகாய் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பிரிட்ஜில் வைக்கலாமா?
மருத்துவர் விளக்கிய உண்மை
தேங்காய் தண்ணீர் குடிப்பதால் குழந்தை சிவப்பாக, வெள்ளையாக பிறக்கும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். ஹவுராவில் இருக்கும் நாராயணா மருத்துவமனையின் மகப்பேறு துறையில் பணியாற்றும் டாக்டர் ரஜனி பாகாய் இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அவர், தேங்காய் தண்ணீர் குடிப்பதால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பது அடிப்படை ஆதாரமற்றது. இதற்கு எந்த அறிவியில் ஆதாரமும் இல்லை.
டாக்டர் ரஜனி பாகாய் மேலும் பேசும்போது, குழந்தையின் தோல் நிறம் பெற்றோரின் மரபணுக்களைப் பொறுத்தது. குழந்தையின் சிகப்பு நிறத்திற்கும் தேங்காய் தண்ணீருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊட்டச்சத்துக்கள் கருவின் தோலின் நிறத்தை பாதிக்கும் என்பதற்கு மருத்துவ ஆய்வுகளில் எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார். "இப்படியான கருத்துகள் உண்மைக்கு மாறானது. எந்தவித அறிவியில் அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படும் பொய் கருத்துக்கள் இவை. தேங்காய் தண்ணீர் ஊட்டச்சத்துகள் குழந்தையின் தோல் நிறத்தை மாற்றும் வல்லமை இருப்பதை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகள் கவனத்திற்கு
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமானது, ஆனால் எந்த உணவுக்கும் குழந்தையின் நிறத்துடன் எந்த தொடர்பும் இல்லை. தேங்காய் நீரில் கால்சியம் மற்றும் எலக்ட்ரோலைட் நிறைந்துள்ளது மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இருப்பினும், கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இதை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் சர்க்கரையின் அளவு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்? இதை தெரிஞ்சிக்கோங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ